• நவம்பர் 2013
  தி செ பு விய வெ ஞா
   123
  45678910
  11121314151617
  18192021222324
  252627282930  
 • பதிவுப் புள்ளிவிவரங்கள்

  • 1,274,647 hits
 • சகோதர இணையங்கள்

காலத்தால் மறக்க முடியாத எங்கள் கிராமத்து தம்பதிகள்-படித்துப் பாருங்கள்!

11

மண்டைதீவைப் பிறப்பிடமாகவும்-அல்லைப்பிட்டியை,வாழ்விடமாகவும் கொண்டிருந்த,அமர்கள் கணபதிப்பிள்ளை இராசரத்தினம் மற்றும் அவரது துணைவியார் திருமதி இராசரத்தினம் மகேஸ்வரி ஆகியோரின் மறக்கமுடியாத நிழலாடும் நினைவுகளை அவர்களது பேரப்பிள்ளைகளும்-அல்லையூர் இணையமும் இணைந்து நினைவுகூர்ந்து நிற்கின்றனர்.

அமரர் கணபதிப்பிள்ளை இராசரத்தினம் அவர்கள் அறப்பணியாற்றுவதில் சிறந்து விளங்கினார் என்பது மறுக்கமுடியாத உண்மை-அன்னார் மண்டைதீவு கண்ணகை அம்மன் ஆலய நீணடகால உறுப்பினராகவும்-அன்னதான உபயகாரராகவும் இருந்து தான் இறக்கும் வரைஅப்பணியினைச் செவ்வனவே செய்து வந்தார்.அது மட்டும் இல்லாது தொடர்ந்து தான் வாழ்ந்து வந்தஅல்லைப்பிட்டியில் அமைந்துள்ள ஆலயங்களான-கறண்டப்பாய் முருகன்-இனிச்சபுளியடி முருகன்-கார்மேல் அன்னை ஆகிய ஆலயங்களின் திருவிழாக்களுக்கு உபயகாரராகவும்-நிதிப்பங்களிப்பவராகவும் தொடர்ந்து வாரி வழங்கியவர்-அத்தோடு வாகீசர் சனசமுகநிலையதின் நீண்டகால உறுப்பினராகவும் இருந்து அப்பகுதி மக்களுக்கு தொண்டாற்றியவர்.இப்படி பல பேருக்கு உதவும் உள்ளம் கொண்ட-அமரர் இராசரத்தினம் அவர்களி்ன் துணைவியார் மகேஸ்வரி அவர்கள் -1991ம் ஆண்டு அகாலமரணமடைந்தார்.தன் அன்பு மனைவியின் பிரிவைத் தாங்க முடியாது தவித்து வந்த அன்னார் சில வருடங்களின் பின்னர் 1995 ஆம் தன்னை மாய்த்துக் கொண்டார்.

எம் கிராமத்தில் வாழ்ந்த மனிதர்களில் சிலரே இவரைப் போல உதவும் உள்ளம் கொண்டவர்களாக-வாழ்ந்து மடிந்துள்ளார்கள் என்பது  மறுக்க முடியாத உண்மை.

இத்தம்பதிகள் இணைபிரியாதவர்களாக-அன்பு கொண்டவர்களாக-வாழ்ந்ததை-இப்பகுதியைச் சேர்ந்த மக்கள் நன்கறிவர்-எனவே தான் இவர்களை அல்லையூர் இணையத்தின் ஊடாக நினைவு கூருவதோடு-அவர்களின் ஆத்மா சாந்தியடைய-அல்லைப்பிட்டி மக்கள் சார்பில் ஆண்டவனையும் வேண்டி நிற்கின்றோம்.

நன்றி அல்லையூர் இணையம்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: