• நவம்பர் 2013
  தி செ பு விய வெ ஞா
   123
  45678910
  11121314151617
  18192021222324
  252627282930  
 • பதிவுப் புள்ளிவிவரங்கள்

  • 1,273,394 hits
 • சகோதர இணையங்கள்

அன்றாட உணவில் பீட்ரூட்டை அவசியம் சேர்த்துக்கொள்ள வேண்டியமைக்கான காரணங்கள்…

 

வேரிலிருந்து கிடைக்கும் காய்கறிகளுள் மிக முக்கியமான பீட்ரூட்டின் மகிமையைப் பற்றி நம் அம்மாக்களும், பாட்டிகளும் வாய் ஓயாமல் பேசுவதை நாம் கேட்டிருப்போம்.

வேரிலிருந்து கிடைக்கும் இந்த கருஞ்சிவப்பு வண்ண காயானது, பெரும்பாலான இந்திய வீடுகளில் இரத்தசோகைக்கு உகந்த, பிரசித்தி பெற்ற மாற்று மருந்தாகத் திகழ்கிறது. ரோமானியர்கள் தங்கள் இல்லற நலத்தை பேண இதனை நம்பி இருப்பது தொடங்கி, இந்தியர்கள் இதனை இரத்த சோகை மற்றும் உடல் அயர்ச்சி போன்ற உடல்நலக் கோளாறுகளுக்கு உபயோகிப்பது வரையிலான பல்வேறு நலன்களைக் கொண்டதாக அறியப்படுகிறது பீட்ரூட். மக்களுள் ஒரு சாரார் இதனை மிகவும் விரும்புபவராகவும், மற்றொரு சாரார் இதனை அறவே வெறுப்பவராகவும் காணப்படுகின்றனர்.

இதற்கு காரணம், அதன் முக்கியத்துவம் மற்றும் நன்மைகளைப் பற்றி தெரியாமல் இருப்பதே ஆகும். உண்மையில் இதன் நன்மைகளை நன்கு தெரிந்திருந்தால், நிச்சயம் இதனை உணவில் சேர்ப்பார்கள். எனவே நீங்கள் பீட்ரூட் அபிமானியாக இருந்தாலும் சரி, இல்லை அதன் மகிமையைப் பற்றி அறிந்திடாதவராக இருந்தாலும் சரி, இதனை உணவில் அவசியம் சேர்த்துக் கொள்ள வேண்டியதற்கான காரணங்கள் பின்வருமாறு பட்டியலிடப்பட்டுள்ளன. இதைப் படித்து தெரிந்து, இனிமேலாவது பீட்ரூட்டை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும்

நைட்ரேட்டுகளின் தலைசிறந்த மூலாதாரமாக விளங்கும் பீட்ரூட், வயிற்றுக்குள் சென்ற பின் நைட்ரைட்டுகள் மற்றும் நைட்ரிக் ஆக்ஸைடு என்றழைக்கப்படும் வாயுவாக மாற்றப்படுகிறது. இவ்விரண்டு கூறுகளும் இரத்த நாளங்களை விரிவடையச் செய்வதோடு, இரத்த அழுத்தத்தை குறைக்கவும் உதவுகின்றன. தினமும் 500 கிராம் பீட்ரூட்டை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம், ஒருவரின் இரத்த அழுத்தத்தை சுமார் 6 மணி நேரத்திலேயே குறைத்து விடலாம் என்றும் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். பீட்ரூட்டின் மற்றொரு முக்கியமான நன்மை யாதெனில், ஒரு நபரின் இரத்த அழுத்தம் எவ்வளவு அதிகமாக உள்ளதோ அவ்வளவுக்கவ்வளவு அது குறைவதற்கு உதவும் என்பதேயாகும்.

கெட்ட கொழுப்பைக் குறைக்கும்

பீட்ரூட், கரையக்கூடிய நார்ச்சத்துக்கள், ஃப்ளேவோனாய்டுகள் மற்றும் பீட்டாஸையனின் ஆகியவற்றை அபரிமிதமான அளவுகளில் கொண்டிருப்பதாக அறியப்படுவதாகும். பீட்டாஸையனின் என்ற கூறு, பீட்ரூட்டுக்கு அதன் கருஞ்சிவப்பு நிறத்தைக் கொடுப்பதோடு, சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் ஆகவும் செயல்படுகிறது. இது எல்டிஎல் கொழுப்பின் ஆக்ஸிடேஷனுக்கு உதவுவதோடு, இரத்த நாளங்களின் சுவர்களில் அது படியாமல் தடுக்கவும் செய்கிறது. இதனால் இது மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகளில் இருந்து இதயத்தை பாதுகாத்து, மருத்துவ சிகிச்சைக்கான தேவையைக் குறைக்கவும் உதவுகிறது.

கர்ப்பிணி தாய்மார்களுக்கு மிகச் சிறந்தது

பீட்ரூட்டின் மற்றொரு வியத்தகு அம்சம், ஃபோலிக் ஆசிட்டின் அமோக விநியோகம் ஆகும். ஃபோலிக் ஆசிட், கருவிலிருக்கும் குழந்தையின் தண்டுவடம் ஒழுங்காக உருவாவதற்கு உதவுவதோடு, ஸ்பைனா பிஃபிடா (பிறவியிலேயே குழந்தையின் தண்டுவடம் முழுமையாக உருவாகாமல், பெரும்பாலும் அடிப்பகுதியில் இரண்டாக பிளவுபட்டது போல் தோற்றமளிக்கக்கூடிய ஒரு நிலை) போன்ற குறைபாடுகளில் இருந்து அக்குழந்தையைப் பாதுகாக்க வல்லது. அதனால் ஃபோலிக் ஆசிட் கர்ப்பிணி தாய்க்கும், கருவிலிருக்கும் குழந்தைக்கும் மிகவும் அவசியம். மேலும் பீட்ரூட், தாயாகப் போகும் பெண்களுக்கு கர்ப்ப காலத்தின் போது தேவைப்படும் கூடுதல் சக்தியையும் வழங்கவல்லதாகும்.

எலும்புருக்கி நோயை எதிர்க்கும்

பீட்ரூட்டில் நிரம்பியுள்ள சிலிகா, உடல் தனக்குத் தேவையான கால்சியம் சத்தை சிறப்பாக உபயோகித்துக் கொள்ள உதவும் மிக அவசியமான ஒரு தாதுப்பொருளாகும். பொதுவாக எலும்புகள் மற்றும் பற்களின் ஆரோக்கியத்துக்கு கால்சியம் சத்து மிகவும் அவசியமானது. எனவே, தினந்தோறும் ஒரு டம்ளர் பீட்ரூட் சாற்றை பருகி வந்தால், எலும்புருக்கி மற்றும் எலும்புச் சிதைவு நோய்களை அண்ட விடாமல் தடுக்கலாம்.

சர்க்கரை நோயை கட்டுக்குள் கொண்டு வரும்

சர்க்கரை நோயாளிகள் அனைவரும், தங்களின் இனிப்பு சாப்பிடும் வேட்கையை, சிறிது பீட்ரூட்டை உட்கொள்வதன் மூலம் தணித்துக் கொள்ளலாம். இது கொழுப்புச்சத்து அற்றதாக, குறைவான மாவுச்சத்துடன் கூடியதாக, நடுத்தரமான க்ளைகோமிக் இன்டெக்ஸைக் கொண்டதாக இருப்பினும், இதில் சர்க்கரை சத்து இருப்பதனால், மருத்துவர்கள் இதனை குறைந்த அளவிலேயே எடுத்துக் கொள்ளும் படி பரிந்துரைக்கிறார்கள். நடுத்தரமான க்ளைகோமிக் இன்டெக்ஸ் என்றால், அது சர்க்கரைச் சத்தை மிக மெதுவாகவே இரத்தத்திற்குள் விடுவிக்கும் என்று அர்த்தம். பீட்ரூட்டின் இந்த அம்சமானது, ஒருவரின் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைவாக வைத்திருக்க உதவுவதோடு, அவரது இனிப்பு சாப்பிடும் வேட்கையையும் தணித்துக் கொள்ள உதவுகிறது.

இரத்தசோகையை குணமாக்கும்

பீட்ரூட் கருஞ்சிவப்பு நிறத்தில் இருப்பதால், அது இழந்த இரத்தத்தை மீட்க உதவும்; அதனால் இது இரத்தசோகைக்கு மிகவும் நல்லது என்றொரு மூட நம்பிக்கை உலவி வருகிறது. பலருக்கு இது நகைப்புக்குரிய விஷயமாகத் தோன்றினாலும், இந்த மூட நம்பிக்கையில் ஒரு பாதி உண்மையே உள்ளது. பீட்ரூட்டில் அபரிமிதமான இரும்புச்சத்து நிறைந்துள்ளது. இரும்புச்சத்து, பிராண வாயு மற்றும் ஊட்டச்சத்துக்களை உடல் முழுவதும் எடுத்துச் செல்ல உதவக்கூடியதான ஹீமோக்ளூட்டினின் என்ற திரவத்தின் உருவாக்கத்துக்கு உதவக்கூடியதாகும். இரத்தசோகையை குணமாக்க உதவுவது பீட்ரூட்டில் உள்ள இரும்புச்சத்து தானேயொழிய அதன் நிறமல்ல.

உடல் சோர்விலிருந்து நிவாரணம் பெற உதவும்

அமெரிக்க சர்க்கரை நோயாளிகள் சங்கத்தின் கருத்தரங்கில் சமர்ப்பிக்கப்பட்ட ஒரு ஆய்வறிக்கையில், பீட்ரூட் ஒருவரின் ஆற்றலை அதிகரிக்க உதவக்கூடியது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் நைட்ரேட் உட்பொருள், ஒருவரின் இரத்த நாளங்களை விரிவாக்கி, பிராணவாயு உடலின் பல்வேறு பகுதிகளுக்கும் சீரான முறையில் சென்றடைய உதவி புரிந்து, அவரது ஆற்றலை அதிகரிக்கச் செய்கின்றது என்றும் அவர்கள் கூறியுள்ளனர். பீட்ரூட்டில் இரும்புச் சத்து செறிந்திருப்பதால், அது ஒருவரின் சகிக்கும் தன்மையை மேம்படுத்துவதாக மற்றொரு ஆய்வு கூறுகிறது. மூலம் எதுவாக இருப்பினும், வேலைப்பளுவினால் சோர்வடைந்த ஒரு நாளின் முடிவில், அதனை போக்கக்கூடிய உணவே ஒருவரின் தேவையாக இருக்கும் என்பதில் சந்தேகமேயில்லை.

பாலியல் நலம் மற்றும் சகிக்கும் தன்மையை மேம்படுத்தும்

“இயற்கையான வயாக்ரா” என்றும் அழைக்கப்படும் பீட்ரூட், பாலியல் நலனை மேம்படுத்தும் நோக்கிலான பழங்கால சம்பிரதாயங்கள் பலவற்றில் சர்வ சாதாரணமாக உபயோகிக்கப்பட்டிருக்கிறது. பீட்ரூட் நைட்ரேட்களின் செறிவான மூலாதாரமாக விளங்குவதால், இது நைட்ரிக் ஆக்ஸைடை உடலுக்குள் செலுத்தி, இரத்த நாளங்களை விரிவடையச் செய்து, இனப்பெருக்க உறுப்புக்குச் செல்லும் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. இதே செயல்பாட்டைத் தான் வயாக்ரா போன்ற மருந்துகள் நகலெடுத்துள்ளன. மனித உடலில் பாலியலைத் தூண்டும் ஹார்மோனின் சுரப்புக்கு மிக முக்கியமானதான போரான் என்ற வேதியியல் கூறு, பீட்ரூட்டில் ஏராளமாக உள்ளது என்பது மற்றொரு அறிவியல் உண்மையாகும். எனவே அடுத்த முறை, நீல நிற மாத்திரைகளை தூக்கி எறிந்து விட்டு, அதற்கு பதிலாக கொஞ்சம் பீட்ரூட் சாற்றைப் பருகுங்கள்.

புற்றுநோயிலிருந்து பாதுகாக்கும்

பீட்ரூட்டின் பீட்டாஸையனின் உட்பொருள் மற்றொரு முக்கியமான செயல்பாட்டைக் கொண்டுள்ளது. வாஷிங்டன் டிசியில் உள்ள ஹேவார்டு பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆராய்ச்சியில், மார்பகம் மற்றும் புரோஸ்டேட் புற்றுநோய் தாக்கப்பட்ட நோயாளிகளின் உடலில் புற்று செல்லின் வளர்ச்சியை, பீட்டாஸையனின் சுமார் 12.5 சதவீதம் வரை மட்டுப்படுத்தியுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இது புற்றுநோய்களை தடுப்பதற்கும், அவற்றின் சிகிச்சைக்கும் உதவுவதோடல்லாமல், புற்றுநோயிலிருந்து மீண்டு வந்தோர் புற்றுநோயினால் மீண்டும் பாதிப்படையாத வண்ணம் நீண்ட நாட்கள் நலமோடு வாழ்வதற்கும் உதவி செய்கிறது.

மலச்சிக்கலை எதிர்ப்பதோடு, வயிற்றை ஆரோக்கியமாகவும் வைத்திருக்கும்

பீட்ரூட், எளிதில் கரையும் தன்மையாலான நார்ச்சத்துடன் கூடிய உட்பொருளைக் கொண்டிருப்பதனால், இது மிகச்சிறந்த மலமிளக்கி மருந்தாகவும் செயல்படுகிறது. அதிலும் இது பெருங்குடலை சுத்தமாக்கி, வயிற்றில் உள்ள அசுத்தங்களை வெளியேற்றி, மலங்கழிப்பை சீராக்கும்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: