மண்டைதீவு 6 ம் வட்டராத்தைப் பிறப்பிடமாகவும் நல்லுர்ரை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பியப்பா தில்லைநாயகம் அவர்கள் 29. 10. 2013. செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்துவிட்டார். அன்னார் காலம் சென்றவர்களான தம்பியப்பா வேதநாயகி தம்பதியரின் அன்பு மகனும் நாகநாதன் செல்லம்மா தம்பதியரின் அன்பு மருமகனும் மகேஸ்வரியின் அன்புக்கணவரும், பொற்சிலை ,வாணி, கோணேஸ்வரன், (சுவிஸ்) ஆகியோரின் அன்புத்தந்தையும், சக்திவேல் ,தாமோதரம்பிள்ளை (ஓய்வு பெற்ற ஆசிரியர்) ,பரம்சோதி (ஓய்வு பெற்ற தபாலதிபர்), காலம் சென்றவர்களான அன்னலட்சுமி தெட்சணாமூர்த்தி , மற்றும் சிதம்பரநாதன் காங்கேசபிள்ளை(ஓய்வு பெற்ற அதிபர்) ஆகியோரின் அன்புச்சகோதரனும் ,ஞானசேகரம்(ஆசிரியர் கொக்குவில் இந்துக்கல்லூரி),சிதம்பரநாதன் ,சுதாயினி (சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவர். அன்னாரின் இறிதிக் கிரியைகள் இன்று (31. 10. 2013) வியாழக்கிழமை அவரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக செம்மணி இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது . இந்த அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம். தகவல் குடும்பத்தினர்
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்