மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், பண்டத்தரிப்பை வசிப்பிடமாகவும் கொண்ட செபஸ்ரியாம்பிள்ளை மரியநாயகி அவர்கள் 20-10-2013 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான செபஸ்ரியாம்பிள்ளை சுவக்கினாப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சந்தியாம்பிள்ளை வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற செபஸ்ரியாம்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்ற சிறில் மரியநேசன்(சிறில்), பற்றிக் ஜெயநேசன்(பாலன்-இலங்கை), காலஞ்சென்ற யோசப் அறியநேசன்(நேசன்-ஜேர்மனி), பிரான்சிஸ் அமலநேசன்(விமலன்-ஜேர்மனி), மேரி அஞ்சலா(தேவி-இலங்கை), மரிய குமாரநேசன்(குமார்-கனடா), மரிய கொன்சலா தேவி(றதி-நோர்வே) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற அருளானந்தம், திரேசம்மா(யோணாக்கா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
மேரிஞானேஸ்வரி, றீசா ஜான்சி, ஆன்மேரிலுமினா, கிருஷாந்தி, மைக்கல் வோல்டன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான திரேசம்மா(திரேஸ்), யோண்லோறட்(யோண்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
மேரி றொசானி, யோண்சன் அமலதாஸ்(பவா), யஸ்ரின் அன்ரன்போல், மேரி பேழ்சியா, பற்றிமா நிஷாந்தினி, நிரோஷன், மிதுலா, அன்டர்சன், றெனுட்சன், அன்ரனி லூட்சன், எமில் மத்தியு, எறிக் போல், நிவேதா, அருண் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
றொய்சன், றொய்சனா, கைசனா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் நல்லடக்க ஆராதனை 21-10-2013 திங்கட்கிழமை காலை 9:30 மணிக்கு அவரது இல்லத்தில் இருந்து பண்டத்தரிப்பு புனித அந்தோனியார் ஆலயத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் பூதவுடல் புனித அந்தோனியார் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி: பற்றிமாகிரி பண்டத்தரிப்பு |
மறுமொழியொன்றை இடுங்கள்