நேர்த்தியான வீதியில் பயணம் செய்கின்றோம் நெறியாழ்மை கடினமானது அலட்சியத்திற்கு இடமின்றி விதிமுறையின் விளம்பரங்கள் ஆங்காங்கே பொறித்திருக்க அதன்வழியில் பயணிப்போம் பெருங்கொடையின் சின்னம் பேணுவது எல்லோரது கடமை சிகரத்தை அடையும் வரை இலக்கடைய பயணிப்போம் பார்வையாளர்களும் பங்களிக்க இயலாதவர்களும் பயணத்தை தவிர்க்கவும் இலக்கை அடைந்தபின் எல்லோரது பாவனைக்கும் வீதி திறந்து வைக்கப்படும் !!! பலவழிப்பயணம் பலனின்றிய விரயம். நெருங்கி விட்டோம் எல்லைக்கு பலவழிகள் எதற்கு எஞ்சிய பகுதியை அடைய கட்டெறும்பின் ஒற்றுமையும் கடினஉழைப்பையும் போல் ஒன்றுபட்டு வெற்றி காண்போம்.
மேலும் கவிதைகள் வாசிக்க… http://www.aruleesan.wordpress.com
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்