1) மூடாத தொட்டியில் எடுக்க எடுக்க நீர் அது என்ன?
2) போன ரயில் திரும்ப வராது அது என்ன?
3) மறப்புடன் வந்தது; இறப்புடன் நிற்கும் அது என்ன?
4) பரந்த காட்டேரிக்குப் பக்கமெல்லாம் சடை அது என்ன?
5) பகலில் தங்கத்தட்டு, இரவில் வெள்ளித்தட்டு அவை என்ன?
6) நேற்று பிறந்தவன், இன்று கட்டுகிறான் அது என்ன?
7) நாக்கு இல்லாதவன், நல்லது சொல்வான் அவன் யார்?
8) நெட்டி இல்லாத வட்ட இலை அது என்ன?
9) ஒரு எழுத்து எழுத உதவும் அது என்ன?
10) ஒற்றைக்கால் மனிதனுக்கு எட்டுக்கை. அது என்ன?
விடைகள்:-
1)கிணறு 2)உயிர் 3)மூச்சு 4)ஆலமரம் 5)சூரியன், சந்திரன் 6)ஊசி 7)புத்தகம் 8)அப்பளம் 9)கை 10)குடை
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்