
நான் என் நண்பனை எப்படியாவது தூக்கி வந்து விடுகிறேன் எனக்கு உத்தரவு கொடுங்கள் என படை தளபதியிடம் கேட்டான்.
மறைந்து இருந்து தாக்குவது தான் சரியான வழி, நீ அங்கு போவதால் உன் உயிர்க்கும் தான் ஆபத்து என்றார் தளபதி.
மீண்டும் மீண்டும் கேட்க நீ போவது என்றால் போ, ஆனால் நீ போவதால் எதுவும் நடந்துவிட போவதில்லை என்று தளபதி கைவிரித்தார்.
அதை மீறியும் தன் நண்பனை காப்பாற்ற ஓடினான்,
அவனை தோளில் தூக்கி கொண்டு வரும்போது எதிரிகள் சுட்டனர்.
இவனுக்கும் அடிப்பட்டது, அதையும் மீறி அவனை தூக்கி கொண்டு வந்தான்.
படை தளபதி அவனை பரிசோதித்து பார்த்தார் அவன் நண்பன் இறந்து போய் இருந்தான். நான் அப்போழுதே சொன்னேன் நீ அவனை காப்பாற்றப் போவதால் எந்த உபயோகமும் இல்லை, இப்போது பார் நீயும் அடிப்பட்டு கிடக்கிறாய் என்றார் தளபதி .
நான் அவனைக் காப்பாற்றப் போனது தான் சார் சரி என்றான். என்ன சொல்கிறாய் உன் நண்பன் இறந்து கிடந்தான் நீ சொல்வது எப்படி சரியாகும் என்று கேட்டார் தளபதி .
நான் அங்கு போகும்போது என் நண்பன் உயிருடன் தான் சார் இருந்தான்.
அவனை நான் தோளில் தூக்கி வரும் போது ”என்னை காப்பாற்ற நீ வருவாய் என்று எனக்கு தெரியும் நண்பா” என்று சொல்லிவிட்டு தான் சார் இறந்தான்.
அந்த ஒரு வார்த்தை எனக்கு போதும் சார் இந்த காயம் எல்லாம் எனக்கு ஒரு பொருட்டே இல்லை என்றான்.
இதுதான் உண்மையான நட்பு…!
ஆபத்தில் உதவுபவனே உண்மையான நண்பன் .
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்