பல தமிழ் பாடல்களுக்கு மத்தியில் யாமறிந்த யாழ் மொழியில் கலக்கி வருகிறது வெள்ளை முகிலே.
இனம்,மொழி கடந்து பாரெங்கும் பட்டையை கிளப்பிய “வை திஸ் கொலைவெறி” பாடலைக் கேட்கும் எவருக்கும், ஆங்கில சொற்களின் நடுவே ஒரு சில தமிழ் வார்த்தைகளை ஒளித்து வைப்பது தான் இக்காலத்தில் வெற்றிப் பாடலின் தாரகமந்திரமாகும் என தோன்றினால் அது தவறில்லை.
ஏனெனில் அதை பின்பற்றி வந்த பாடல்களும் ஹிட் ஆகிவிட்டன.
ஆனால் மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் இன்று வெளிவந்த எமது புலம்பெயர் இளையோரின் “வெள்ளை முகிலே”பாடலின் வெற்றியாக வியாபித்திருப்பது என்னவோ, அவர்கள் தம் தாய்மொழி மீது கொண்ட பாசம் தான்.
அதிலும் ஒருபடி மேலே சென்று “தேக்கு மரம்”, “பாக்குநீர்” என் மண்ணின் மகிழ்வுகளை மழையாக தூறி மனம் தொடுகிறது “வெள்ளை முகிலே”.
மாசில்லா மண்ணின் மொழியிலே தரமான பாடல் தந்த GJ Arts இளைஞர்கள் பாராட்டப்பட நிச்சயமாக வேண்டியவர்களே.
மெல்லிசை தந்த கஜிநாத், அதில் சொல்லோவியம் வரைந்த பரந்தாமன், குயிலொலி எழுப்பிய சுஜீகா, மயிலாட்டமாடிய ப்ரியா, திறம்பட இயக்கிய நிஜந்தன், சிறப்பான ஒளிப்பதிவை மேற்கொண்ட திலீப் உள்ளிட்ட ஒட்டுமொத்த GJ Arts கலைக்கூடத்திற்கும், கலர் எடிட்டிங் மேற்கொண்ட சுவிஸ் RIA Media-விற்கும் எமது வாழ்த்துக்கள்.
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்