பொதுவாக உடலில் உஷ்ணம் தோன்றும் போது மூளையின் ஹைபோதலமஸ் பகுதி, நமது தோலைக் குளிர்விக்க வியர்வைச் சுரப்பிகளைத் தூண்டிவிடு கின்றன. எனவே, வியர்வை சுரக்கிறது.
– உடல் ரீதியான காரணங்களைத் தவிர்த்து, நமது உணர்வுகளை மூளையின் ஹைபோ தலமஸ் பகுதி, உணர்ச்சி நரம்புகள் மூலமாக வெளிப்படுத்துகின்றன.
– இந்நரம்பு மண்டலத்தை சிம்பதடிக் நெர்வெஸ் சிஸ்டம் என்று அழைப்பர். நமக்கு கோபமோ, பயமோ, வெறுப்போ தோன்றும்போது இந்த உணர்ச்சி நரம்புகள் தூண்டப்படுகின்றன.
– பொதுவாக, பயம் அல்லது கோபம் உண்டாகும்போது, அந்தச் சூழ்நிலையை எதிர்கொள்ள நமது மூளை தயாராகுகிறது. அதன் வெளிப்பாடே நமக்கு படபடப்பு உண்டாகிறது. கூடவே உடலின் உஷ்ணம் அதிகரிக்கிறது. அதைத் தொடர்ந்து வியர்வை சுரக்கிறது. ஒரு இக்கட்டான சூழ்நிலையை நாம் நேரடியாக எதிர் கொள்வதா அல்லது அவ்விடத்தை விட்டு ஓடுவதா? என்று நம்மைத் தயார் செய்ய மூளையிடும் கட்டளையின் விளைவே இந்த வியர்வை ஆகும்.
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்