• ஓகஸ்ட் 2013
    தி செ பு விய வெ ஞா
    « ஜூலை   செப் »
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031  
  • பதிவுப் புள்ளிவிவரங்கள்

    • 1,094,173 hits
  • சகோதர இணையங்கள்

1ம், 30ம் ஆண்டு நினைவஞ்சலிகள்

அன்னை மடியில் ஆண்டவன் அடியில்
20 சனவரி 1924 20 சனவரி 1984
அமரர் சின்னத்தம்பி சண்முகலிங்கம்
அன்னை மடியில் ஆண்டவன் அடியில்
3 பெப்ரவரி 1939 7 செப்ரெம்பர் 2012
அமரர் அன்னபூபதி சண்முகலிங்கம்
திதி : 27 ஓகஸ்ட் 2013

மண்டைதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் 35 பிரப்பங்குளம் வீதியை வதிவிடமாகவும் கொண்ட அன்னபூபதி சண்முகலிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலியும், சின்னத்தம்பி சண்முகலிங்கம் அவர்களின் 30ம் ஆண்டு நினைவஞ்சலியும்.

அம்மா

“தன் ஜீவனைக் காக்கிறவன் அதை இழந்துபோவான் என் நிமித்தம் தன் ஜீவனை இழந்துபோகிறவன் அதைக் காப்பான் மத்தேயு 10:34”
ஈன்றபொழுதிற்பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்டதாய் இப்படி வாழ்ந்த எம் அருமைத்தாயே

பத்து மாதம் சுமந்து பெற்று பாலூட்டிச்சீராட்டி
பாசத்துடன் வளர்த்த எங்கள் பரிமளமே
முத்துச்சிரிப்பாலும் மோகனப்பேச்சாலும்
உச்சி முகர்ந்து வளர்த்த எம் அன்னையே
நெஞ்சு பதறுதம்மா நினைவு நெகிழுதம்மா
ஆற்ற முடியாது அலறித்தவிக்கின்றோமே…

அன்பின் பிறப்பிடமே எங்கள் அம்மா
அமைதியின் இருப்பிடமே எங்கள் அம்மா
குன்றிலிட்ட தீபம் போல நின்ற எங்கள்
குடும்பக் குலவிளக்காய் வாழ்ந்த அம்மா எம்மைப்
பெற்றவளே உம் பெயர் சொல்லி நாம் அழைத்தாலும்
பேருவகை கொள்ளும் பெரும் பேறே எங்கள் அம்மா!!!

அல்லும் பகலும் அயராது உழைத்தீர் அம்மா
இனிய தாயாக இல்லறத்தில் வாழ்ந்தீரம்மா
அன்பான அரவணைப்பால் அனைவரையும் கவர்ந்தீரம்மா
பாரோரும் போற்றிடவே சீரோடு வாழந்தீரம்மா
இன்சொல் பேசி சுற்றத்தினை அணைத்து
ஊருக்கே அன்னையாய் உலாவி வந்தீரம்மா…

கண்மூடி விழிக்கு முன் கதைமுடிந்து போனதம்மா
ஊரே அழுகுதம்மா உம்பிரிவைத் தாங்காது உம்
பிள்ளைகள் நாம் எப்படி எதனால் ஆறுவோம்
இறைவனுக்கு உம்மை அழைக்க ஏன் இந்த அவசரம்?
உள்ளம் துடிக்குதம்மா ஓடிமறைந்த தெங்கே?
ஏன் மறைந்தீர்? என்ன இது? ஏங்குகிறோம்
எங்கள் தாயே சரணம் அம்மா….!!!

அப்பா
ஆண்டுகள் கடந்துசென்று முப்பதும் ஆனதப்பா
ஆறாததுயரம் மட்டும் என்றென்றும் நீங்காதப்பா
எப்படி எம்மை வளர்த்தீர் எண்ணி எண்ணித் தவிக்கின்றோமே..!
இந்தத் துயர் நீங்குமுன்னே அம்மாவும் பிரிந்துவிட்டார்.
பிள்ளைகள் நாங்கள் தான் கொடுத்துவைக்கவில்லையப்பா.?
உங்கள் இருவரையும் பிரிந்து இன்னல்கள் அடைகின்றோம்
எங்களுக்குக் கிடைத்த பெற்றோர் கிடைப்பதரிதல்லவோ
வருந்துகின்றோம், வாடுகின்றோம், வந்தனங்கள் செய்கிறோம்.
உங்கள் பிரிவால் துயருறும் பிள்ளைகள்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
விஜயராணி — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41787156529
Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: