இதுவரை இயக்குநர் ஹரி இயக்கிய 12 படங்களிலும் சண்டை நடிகராக நடித்தவர் ரஞ்சன் என்பவர். கடலுக்குள் நடந்த ‘சிங்கம் 2’ திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது நடிகர் சூர்யாவுக்கு அவருக்கும் நடந்த சண்டையில் தடுமாறி கடலுக்குள் இருந்த பாறையில் விழுந்து பலத்த அடிபட்டார். உடனே மருத்துவமனையில் சேர்த்தார்கள் சிங்கம் 2 படக்குழுவினர்.
மருத்துவமனையில் அனுமதித்ததோடு சரி. அதற்கப்புறம் ஒருவரும் சென்று பார்க்கவில்லையாம் ரஞ்சனை. இந்த சம்பவத்தின் போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறை இன்ஸ்பெக்டர் ஒருவர் ரஞ்சனை மருத்துவமனையில் பார்த்து நலம் விசாரிக்க அவரிடம், “ஒரு தடவ சூர்யா சார் வந்துட்டு நல்லாயிருக்கியான்னு கேட்டுட்டு போனாரு. அதோட சரி. யாருமே பார்க்கல, பண உதவியும் பண்ணல சார், என்று கதறினாராம் ரஞ்சன்.
உடனே அந்த இன்ஸ்பெக்டர் தனது சொந்த செலவில் இவருக்கு மருத்துவ உதவி அளித்துவிட்டு சென்னைக்கே வந்து சூர்யாவையும் ஹரியையும் பார்த்து ரஞ்சனின் நிலைமையை எடுத்துச் சொல்ல, “இதற்கு நான் ஒன்றும் செய்ய முடியாதே” என்றாராம் சூர்யா. ஹரியோ இன்னும் கொடுமையாக, “ஜாக்கிரதையா ஃபைட் பண்ணலன்னா இப்படிதான்” என்று அட்வைஸ் கூறி சென்று விட்டாராம்.
சினிமா இப்படி தான் என்று தெரிந்து கடுப்பான இன்ஸ்பெக்டர், சென்னையில் ஜில்லா படப்பிடிப்பு நடப்பதை கேள்விப்பட்டு அங்கே போனாராம். விஜய்யை சந்தித்து முழு கதையையும் சொல்ல, 40 ஆயிரம் ரூபாய் பணத்தையும், இரண்டு மாதங்களுக்கு தேவையான மளிகை பொருட்களையும் உடனடியாக ரஞ்சன் வீட்டுக்கு தனது உதவியாளர் மூலம் கொடுத்தனுப்பினாராம் விஜய். சூர்யாவா இப்படி என்று நம்ப மறுக்கிறார்களாம் கோடம்பாக்கத்தில்.
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்