Posted on 14. ஓகஸ்ட் 2013 by mandaitivu
|
திதி : 15 ஓகஸ்ட் 2013 |
மண்டைதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வேலணை சிற்பனையை வதிவிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த விசுவநாதர் இராஜரட்ணம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
குலவிளக்கே எங்கள் அப்பா.. எம்மைவிட்டு எங்குசென்றீரோ… எங்கள் ஒளி விளக்கே அப்பா… உங்௧ள் நினைவால் நித்தம் வாடுகின்றோம்… சென்ற இடம் கூறாயோ? ஆண்டுகள் இரண்டு சென்றதப்பா-உங்௧ள் குரல் கேளாது உங்௧ள் வாசம் செல்லாது
நம் இல்லம் இருளாய் போனதப்பா.. உங்௧ள் திருமுகம் பாராமல் ஏங்கித் தவிக்கின்றோம் அப்பா … உங்௧ள் உதட்ரோர புன்னகை காணாது உள்ளம் வாடிநிற்கின்றோம் அப்பா ….!
அன்பு காட்டி எம்மை அரவணைத்து- என்றும் புன்னகைத்தவண்ணம் உறவுகளோடு உறவாடி ஊர் கூடிவிருந்தோம்பிய உங்௧ள் உத்தம பண்புதனைகண்டு நினைத்தழுதோம் அப்பா..! ஆலம் விழுதுகள் போல் ஆயிரம் உறவு இருந்தும் என்ன? வேரென நீங்௧ள் இருந்தால் நாங்கள் வீழ்ந்துவிடாது இருந்தோம். வாசம் குன்றாவாழ்வுதந்து வழியெங்கும் ஒளிதந்து தேசம் புகழும் நிலைதந்த எங்கள் அப்பாவே..!
எம்மை கதறி அழவிட்டுவிட்டு நீங்௧ள் சென்று இராண்டு ஆனதே அப்பா… எங்கள் குலதெய்வமே அப்பா…. விட்டிடும் கண்ணீரால் உங்௧ள் பாதச்சுவட்டை நனைத்துடுவோம்… எம் தந்தையே…
உங்௧ள் பிரிவால் வாடும் பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், நாங்கள் உங்௧ள் ஆத்மாசாந்தியை வேண்டிநிற்கின்றோம் தந்தையே… ஓம் சாந்தி! ஓம் சாந்தி…..
|
தகவல் |
குடும்பத்தினர் |
|
Like this:
Like ஏற்றப்படுகின்றது...
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்