அமரர் கந்தையா சுந்தரமூர்த்தி |
அன்னை மடியில் : 18 பெப்ரவரி 1950 — ஆண்டவன் அடியில் : 1 ஓகஸ்ட் 2003 |
|
திதி : 10 ஓகஸ்ட் 2013 |
பூநகரியைப் பிறப்பிடமாகவும், மண்டைதீவு, சுவிஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கந்தையா சுந்தரமூர்த்தி அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
கருவிலே உருதந்து கண் இமை போல் எமை காத்து கடு கதி போல் உழைத்து எம்மை வாழ வைத்த ஒளி விளக்கே. எங்கள் உடலாக உயிராக எங்களுடன் கலந்திருந்த திரு விளக்கே.
பண்புடன் பரிவுடன் பாசமுடன் எம்மை வாழ வைத்த எம் பாச விளக்கே. அறியாத வயதில் உங்கள் அறிவுரைகளை உணர முடியவில்லை.
தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்று உணர்ந்த பின் உடலில் அத்தனை அணுக்களும் ஓராயிரம் மன்னிப்பு கேட்க தவம் இருக்கின்றது.
மண்ணிலே நாம் வாழ பல வழி செய்து கொடுத்தீர்கள் பிரதி பலன் நாம் செய்ய இடம் ஏதும் கொடுக்காமல் எம் மரணம் வரை மன வலியை தந்த போதும் எம் குடும்ப விளக்கின் இனிய நினைவுகளை இதயத்தில் சுமந்து பூப் போன்ற பாதமதில் 10ம் ஆண்டு இதய அஞ்சலியை காணிக்கை ஆக்குகின்றோம்.
|
தகவல் |
மனைவி, மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள் |
|
Like this:
Like ஏற்றப்படுகின்றது...
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்