மண்டைதீவு மக்களினால் புரனமைத்து வந்துகொண்டு இருக்கும் சாம்பலோடை கண்ணகை அம்மன் ஆலயம் இந்த வருடம் பங்குனி மாதத்துக்குள் குடமுழுக்கு செய்ய வேண்டும் என்றும் அதற்க்கு உங்களால் முடிந்த உதவிகள் செய்யும் வண்ணம் மண்டைதீவு மக்களிடம் அதாவது வெளிநாடுகளில் வாழும் உங்களிடம் கேட்டுக்கொண்டனர். சாம்பலோடை பரிபாலனை சபையினர். அதை நாங்கள் இங்கு உங்களுக்கு அறியத்தந்து கொண்டே இருந்தோம் அதன் அடிப்படையில் சாம்பலோடை அம்மனின் அடியார்கள் பெரும் தொகைப் பணத்தினை அள்ளி வழங்கி வந்துள்ளார்கள். மேலும் பல தேவைகளை செய்யவேண்டி நாம் உள்ளோம் என்பதை தெரிவித்துக்கொள்கின்ற போதும். இந்த வருடம் (2013) அதாவது 13 வது இலக்கத்தில் அமைந்து உள்ளதால் அதனை மேற்கொள்வது சரி இல்லை என என்று சாத்திர கணிப்பில் உள்ளதாக பெரியவர்கள் சொன்னதனால் அடுத்த வருடம் குடமுழுக்கு செய்ய தீர்மானித்துள்ளனர் என்பதையும் இங்கு அறிவிக்க கடமைப்பட்டுள்ளோம். இதனுடன் கண்ணகை அம்மனின் ஆலய இன்றைய தோற்றம் உங்கள் கண்முன்……….
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்