• பிப்ரவரி 2013
  தி செ பு விய வெ ஞா
  « ஜன   மார்ச் »
   123
  45678910
  11121314151617
  18192021222324
  25262728  
 • பதிவுப் புள்ளிவிவரங்கள்

  • 1,177,848 hits
 • சகோதர இணையங்கள்

 • Advertisements

தந்தையை இழந்த எனது நண்பனுக்காக…

5_thumbஅப்பாவுக்கு லேசா நெஞ்சு வலிப்பா, ஆஸ்பத்ரில சேர்த்திருக்கோம், நீ  உடனே  கிளம்பி வந்தியின்னா நல்லா இருக்கும்” அம்மாவின் குரலில் ஒருவித நடுக்கம் இருந்தது, நல்ல பகல் வெளிச்சத்தில் என்னைச் சுற்றி  இருள் கவிழத் துவங்கியது, சுற்றி நடக்கிற எந்த நிகழ்வும் கண்களுக்கு மட்டுப்பட மறுத்தது, கால்கள் தள்ளாடப் பாலைவனத்தில் வழி தவறிய ஒரு ஆட்டுக் குட்டியைப் போல தவித்துக் கதறியது மனம். அப்பா அவ்வளவு சீக்கிரம் மருத்துவமனைக்குப் போகிறவர் அல்ல, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். என்றால் நிலைமை கையை மீறிப் போயிருக்கிறது, நினைவு தெரிந்த நாட்களில் இருந்து எந்தக் கெட்ட பழக்கங்களும் இல்லாத அவருக்கு எப்படி நெஞ்சு வலி வந்தது என்று பல்வேறு  குழப்பங்களுக்கு  இடையில் நானூற்று ஐம்பது கிலோ மீட்டர் தொலைவைக் கடக்கப் பேருந்தில் ஏறி அமர்ந்தேன், மனம் எங்கோ வெகு தொலைவில் இருக்கிற தந்தையின் அருகில் போய் அமர்ந்து இருக்கும் போது  உடலைக் கடத்திப் போவதற்கு ஒரு பயணம் பல யுகங்களாய் மீதமிருந்து அச்சமூட்டியது.

நள்ளிரவில் அலைபேசி ஒலித்தது, மாமா மகன்  குமார், எடுப்பதா, வேண்டாமா என்று குழப்பமாய் இருந்தது, ஒருவழியாய் துணிந்து அழைப்பை எடுத்த போது “எங்க இருக்கப்பா? எத்தனை மணிக்கு வருவ?” என்றார் மறுமுனையில், மச்சான், அப்பாவுக்கு ஒன்றும் இல்லையே என்று நான் கத்திய கத்தில் ஒட்டு மொத்தப் பேருந்தும் உறக்கம் கலைந்தது, அதெல்லாம் ஒன்னும் இல்லப்பா, அப்பா நல்லாத் தான் இருக்காரு, கவலைப்படாதே என்று சொல்லி வைத்தார். காரைக்குடியில் இறங்கிய போது உலகம் வழக்கம் போலவே இயங்கிக் கொண்டிருந்தது, மருத்துவமனைக்குள் நுழைந்து களைப்பும், தளர்வுமாய்ப் படுத்திருந்த அப்பாவின் கைகளைப் பிடித்து மெல்ல வருடியபடி “உடம்பு   சரியில்லைன்னா  ஏனப்பா  இன்னும்  யார்கிட்டயும்  சொல்ல மாட்டேன்றீங்க?” என்று கேட்டேன்.

அப்பா சொன்னார், இன்னும் என்னப்பா, எல்லாப் பிள்ளைகளுக்கும் கல்யாணம் பண்ணிப் பாத்துட்டேன், பேரப் புள்ளைகளோட விளையாடிட்டேன், எம் புள்ளைகள் எல்லாம் நல்லவர்கள், திறமையும், அன்பும் நிரம்பியவர்கள் என்று பல படித்த பெரிய மனிதர்கள் சொல்லக் கேட்டு விட்டேன், பணம் காசு சேர்த்து வைக்கலைன்னாலும் நல்ல படிப்பையும், பண்பாட்டையும் உங்க எல்லாருக்கும் குடுத்துருக்கேன், இந்தக் குடும்பத்த இனிமே நல்ல முறைல வழி நடத்த நீ  இருக்கேன்குற  நம்பிக்கையும் எனக்கு நிறையவே இருக்கு, சாகுறதுக்கு  இனி எனக்கு என்ன கவலை” என்று அசாத்தியமான துணிச்சலோடு சொன்னார் அப்பா. நிறைவான வாழ்க்கை என்பது என்ன, அல்லது வாழ்க்கையின் பொருள் தான் என்ன , குழம்பிய எனக்கு அப்பாவின் அந்த சொற்கள் புத்தனின் போதி மரத்தடியை நினைவுபடுத்த …  ஆம், அவர் தான் நிறைவான, செழுமையான ஒரு வாழ்க்கையை வாழ்வதாக உறுதியாக நம்புகிறார்,…….        ….. நானும் தான்…..

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: