• ஜனவரி 2013
    தி செ பு விய வெ ஞா
    « டிசம்பர்   பிப் »
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    28293031  
  • பதிவுப் புள்ளிவிவரங்கள்

    • 1,079,246 hits
  • சகோதர இணையங்கள்

மனித உடல் உறுப்புகளில் மிகவும் இன்றியமையாதது மூளையாகும்…

moolaiமனித உடல் உறுப்புகளில் மிகவும் இன்றியமையாதது மூளையாகும். நமது மூளை பாதிப்படைந்தால் அனைத்து செயல்களும் பாதிப்படையும்.

1.காலையில் உணவு உண்ணாமல் இருப்பது: காலையில் உணவு உண்ணாமல் இருப்பவர்களுக்கு ரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை இருக்கும். இது மூளைக்குத் தேவையான சக்தியையும், தேவையான ஊட்டச் சத்துக்களையும் கொடுக்காமல் மூளை மெல்ல மெல்ல செயல் இழக்கும் அபாயம் ஏற்படும்.

2. மிக அதிகமாகச்சாப்பிடுவது: இது மூளையில் இருக்கும் ரத்த நாள ங்கள் இறுகக்காரணமாகி, மூளையின் சக்தி குறைவுக்குக் காரணமாகும்.

3. நிறைய சர்க்கரை சாப்பிடுதல்:இது புரோட்டின் நமது உடலில் சேர்வ தைத் தடுக்கிறது. இதுவும் மூளை வளர்ச்சிக்கு பாதிப்பாகிறது.

4. தூக்கமின்மை: நல்ல தூக்கம் நம் மூளைக்கு ஓய்வு கொடுக்கும். நீண்ட காலம் தேவையான அளவு தூங்காமலிருப்பது மூளைக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

5. மாசு நிறைந்த காற்று: மாசு நிறைந்த காற்றை சுவாசித்தல், நமக்குத் தேவையான ஆக்ஸிஜனை நாம்பெறுவதில் இருந்து தடை செய்கிறது. மூளைக்கு ஆக்ஸிஜன் செல்லாவிட்டால், மூளை பாதிப்படையும்.

6. புகை பிடித்தல்: மூளை சுருங்கவும், அல்ப்ஸமர்ஸ் வியாதி வருவதற்கும் காரணமாகிறது.

7.மூளைக்கு வேலைகொடுக்கும் சிந்தனைகளை மேற்கொள்ளாமல் இருப்பது: மூளையை அதிகமாக உபயோகப்படுத்தும் சிந்தனைகளை மேற்கொள்வதால், மூளையில் புதுப்புது இணைப்புகள் உருவாகின்றன. அதனால் மூளை வலிமையான உறுப்பாகிறது.

8. தலையை மூடிக்கொண்டு தூங்குவது: தலையை மூடிக்கொண்டு தூங்குவது, போர்வைக்குள் கரியமில வாயு அதிகரிக்க வைக்கிறது. இதுநீங்கள் சுவாசிக்கும் ஆக்ஸிஜனை குறைக்கிறது. குறை வான ஆக்ஸிஜன் மூளையைப் பாதிக்கிறது.

9.நோயுற்றகாலத்தில் மூளைக்கு வேலைகொடுப்பது:உடல் நோயுற்ற காலத்தில் மிக அதிகமாக மூளைக்கு வேலை கொடுப்பதும், தீவிரமாகப் படிப்பதும் மூளையைப் பாதிக்கும். உடல் சரியாக ஆன பின்னால், மூளைக்கு வேலை கொடுப்பதே சிறந்தது.

10. பேசாமல் இருப்பது: அறிவுப்பூர்வமான உரையாடல்களை மேற் கொள்வது மூளையின் வலிமையை அதிகரிக்கிறது

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: