• ஜனவரி 2013
  தி செ பு விய வெ ஞா
   123456
  78910111213
  14151617181920
  21222324252627
  28293031  
 • பதிவுப் புள்ளிவிவரங்கள்

  • 1,239,979 hits
 • சகோதர இணையங்கள்

2013 க்கான எண் கணித ஜோதிடம் உங்கள் பார்வைக்கு…

அன்பு வாசகர்களே, பிறந்த தேதி, மாதம், வருடம் தெரியாதவர்களும் தங்களின் பெயரின் முதல் எழுத்தின் அடிப்படையிலும் கீழ்கண்டவாறு பலன்களை தெரிந்து கொள்ளலாம்.

 
* 1, 10, 19, 28 தேதிகளில் பிறந்தவர்களுக்கும், பெயரின் முதல் எழுத்தாக A,I,J,Q,Y-ஐ பெற்றவர்களுக்கும், பெயர் எண் 1ஆக உள்ள 1ம் எண் நேயர்களே.
* எதையும் சரியாக புரிந்துகொண்டு செயல்பட்டு சகலமானவர்களையும் சகட்டுமேனிக்கு தன் பக்கம் ,ழுத்துக்கொள்ளும் உங்களுக்கு இந்த ஆண்டு எதையும் திட்டமிட்டு செய்தால் நன்மையாகவே முடியும்.
* ,ருப்புக்கள் குறைந்தாலும் அதை சரிக்கட்டும் முயற்சியில் மிக உஷாராக செயல்பட்டு பொருளாதாரத்தை சரிக்கட்டிவிடுவீர்கள்.
* திருமண விசயங்கள் நினைத்ததுபோல் நிறைவாக மகிழ்வாக நடைபெறும். தந்தையார் வழி உயர்வான உதவிகள் செய்வர்.
* வலிமையும், பலமும் அதிகரித்தாலும் தொடர் பணிகளால் அவ்வப்பொழுது அயர்ந்து போவீர்கள்.
* ,ரும்பு, உயர்தர உணவகங்கள், ஏற்றுமதியாளர்கள், கன்ஸ்ட்ரக்ஷன் துறையினர் திடீர் அதிர்ஸ்ட்டங்கள் அடைவர். ,தனால் தொழில் அதிபர்களின் பொருளாதார நிலை கூடுதலாகும்.
* தனது நீண்டநாள் எண்ணங்களின்படி செயல்களும், வெளியூர்களில் புதுமையான முறையில் கிளைகளும் அமைத்து வெற்றி பெறுவர் வியாபாரிகள்.
* பதவி உயர்வு, பணியிடமாற்றம், பொருளாதார ஏற்றம் போன்றவை வாழ்வின் தரத்தை உயர்த்தும் பணியாளர்களுக்கு.
* பெரும் பதவிகளை பெற்று மக்கள் மத்தியில் அதிக செல்வாக்கையும் வெளிநாட்டு ஒப்பந்தங்களையும் பெறுவர் அரசியல்வாதிகள்.
* அருகில் உள்ள நிலங்களை தன் வசப்படுத்தும் முயற்சியில் வெற்றி காண்பர். விளைச்சல் அதிகரிக்கும் விவசாயிகளுக்கு.
* படித்து முடித்த பெண்களுக்கு வேலைவாய்ப்பும், திருமணமும் கைகூடி வரும். தந்தையார் வழி உறவுகளும் பலப்படும்.
* அதிக மதிப்பெண்களை எடுத்து ஆசிரியர்களின் ஏகோபித்த பாராட்டையும் வேலைவாய்ப்பினையும் பெறுவர் மாணவர்கள்.

இந்த வருடம் அதிர்ஸ்டத்தை அள்ளித்தருபவை
எண்கள் : 1, 3, 5, 9
திசை : கிழக்கு, வடக்கு
நிறம் : ஆரஞ்ச், பச்சை
தவிர்க்கவேண்டிய எண் : 8

* 2, 11, 20, 29 தேதிகளில் பிறந்தவர்களுக்கும், பெயரின் முதல் எழுத்தாக R, K, B-ஐ பெற்றவர்களுக்கும், பெயர் எண் 2ஆக அமைந்தவர்களும்,
* குறுகிய காலத்தில் குபேரணகா வலம் வரப்போகிறீர்கள். எடுத்த முயற்சிகள் எடுக்கப்போகும் முயற்சிகள் எல்லாம் வெற்றி என்ற மந்திரமாகவே ஒலித்திடும் இனி.
* விரைவான முன்னேற்றத்திற்கு வெகுவாக வெளிநாட்டு பயணங்களும், புதிய முயற்சிகளும் பலன் அளித்து பொருளாதார ஏற்றத்தை அளித்திடும்.
* மனதிற்கேற்ற வரன்கள் அமையப்பெற்று திருமணங்கள் திருப்திகரமாகவே நடைபெறும் பலருக்கு.
* குன்றாத வலிமையும் பல நாள் வியாதிகளும் மறைந்துவிடுதலும், தாயார் நலன் பெறுதலும் மகிழ்வளித்திடும்.
* விரைவான செயல்பாடுகளும், அயல்நாட்டு ஒப்பந்தங்களும் அரசாங்க ஆதரவும் அகிலம் போற்றும் அளவிற்கு தொழில் அதிபர்களை கொண்டு செல்லும்.
* வசதிகளை பன்மடங்கு பெரிதாக்கிக்கொள்வதுடன் வியாபார நுணுக்கங்களையும் தெரிந்து செயல்பட்டு வருமானத்தை குவிப்பர் வியாபாரிகள்.
* எதிர்பாராத பதவி உயர்வுகளும், அதிகாரிகளின் நட்பும், சக ஊழியர்கள் மத்தியில் செல்வாக்கை அதிகரிக்கச்செய்திடும் பணியாளர்களுக்கு.
* தங்களின் மென்மையான போக்கில் ஈர்க்கப்பட்ட தலைமை மிகப்பெரிய பொறுப்பை உங்களிடம் தர ஆயத்தமாகிவிட்டது எனலாம் அரசியல்வாதிகளே.
* விருப்பம்போல் கால்நடை, விரிவாக்கம், விளைச்சல் பெருக்கம், புதிய நிலம் சேர்க்கை உண்டு விவசாயிகளுக்கு.
* பெருமையும், புகழும் மக்கள் செல்வாக்கும் கணவரிடம் பாராட்டும் பெற்று உயர்வு பெறுவர் பெண்கள்.
* மதிப்பெண்களை அள்ளும் முயற்சியில் நல்ல பலன் பெறுவதுடன், கற்று முடித்தவர்களுக்கு அரசாங்க பதவிகளும் வந்து மாணவர்களுக்கு மகிழ்வளிக்கும்.

இந்த வருடம் அதிர்ஸ்டத்தை அள்ளித்தருபவை
எண்கள் : 1, 2, 5, 6, 7
திசை : கிழக்கு, மேற்கு
நிறம் : வெள்ளை, மஞ்சள்
தவிர்க்கவேண்டிய எண் : 9

* 3, 12, 21, 30 தேதிகளில் பிறந்தவர்களுக்கும், பெயரின் முதல் எழுத்தாக C, G, L, S-ஐ பெற்றவர்களுக்கும், பெயர் எண் 3 என அமைந்தவர்களுக்கும்,
* பூமியைவிட 300 மடங்கிற்கும் மேலான கன பரிமாணமுள்ள இந்த எண்ணுக்குரியவர்கள் மிகப் பெரியவர்களாகவே ,ருப்பர்.
* கொடுக்கல் வாங்கல், பூர்வீக சொத்துக்களின் வருகை, எதிர்பார்த்ததுபோல் தங்கள் வருமானம் எல்லாம் ஏறுமுகமாகவே உள்ளது.
* தடைகள் எல்லாம் நீங்கிவிடும். சொந்தத்திற்குள் திருமணம் நடைபெற்று மகிழ்வு தரும் பலருக்கு.
* தங்கள் முயற்சிகள் மூலம் உடல் வலிமையை கனகச்சிதமாக வைத்துக்கொள்வர்.
* எதிர்பார்த்து காத்திருந்த பெரிய கடன் தொகைகள் அரசாங்கம் வழங்கி அபிவிருத்திக்கு மிக ஆதரவாக செயல்படுவதால் உயர்வு உண்டு தொழில் அதிபர்களுக்கு.
* புதுமையான பொருட்களை விற்று, லாபத்தை குவிப்பதுடன் புதிய கிளைகளையும் ஆரம்பித்து வெற்றி பெறுவர் வியாபாரிகள்.
* மிக நுணுக்கமான அறிவுடன் செயல்பட்டு அதிகாரிகளின் ஆதரவை பெறுவதுடன், விரும்பிய ,டமாறுதல், பண பலன்கள், சக ஊழியர்களின் நட்பு ,வற்றை பெறுவர் பணியாளர்கள்.
* எதிர்பார்த்ததுபோல் பெரிய மாற்றங்களை பெறுவர். ,ருப்பினும் ரு, ஏ, று போன்ற முதல் எழுத்தை பெயரின் முதலாக பெற்றவர்களுடன் உஷாராக பழகவும் அரசியல்வாதிகளே.
* விளை பொருட்களை கூடுதல் லாபத்திற்கு விற்கலாம். கால்நடைகளால் நன்மையுண்டு. புதிய நிலம் சேரும் விவசாயிகளுக்கு.
* குழந்தைகளால் பெருமை அடைவர். கணவருடன் ,ணக்கமான சூழ்நிலை ஏற்படும். மகிழ்ச்சியுண்டு பெண்களுக்கு மொத்தத்தில்.
* ஆசிரியர்களின் கற்பித்தலை கச்சிதமாக உள்வாங்கி தேர்வில் காண்பித்து திறமையை வெளிப்படுத்துவர் மாணவர்கள்.

இந்த வருடம் அதிர்ஸ்டத்தை அள்ளித்தருபவை
எண்கள் : 1, 3, 9
திசை : கிழக்கு
நிறம் : சந்தனம், சிவப்பு
தவிர்க்கவேண்டிய எண் : 6

* 4, 13, 22, 31 தேதிகளில் பிறந்தவர்களுக்கும், பெயரின் முதல் எழுத்தாக D, T, M-ஐ பெற்றவர்களுக்கும், பெயர் எண் 4 என அமைந்தவர்களுக்கும்,
* சமூகத்தின் தூண்களான ,வர்கள் மக்கள் செல்வாக்கையும் குடும்பத்தினரின் அன்பையும் மிக அதிகமாக பெறுவர்.
* பொருளாதாரம் குறையாத அளவிற்கு தங்கள் தனித்திறமைகள் மேலும் சேர்ப்பதில் ஆர்வம் கொள்வர். அதுபோல் வரவும் உண்டு.
* காதலில் வெற்றியும், தடைகள் மாறி, பிரிந்தவர்கள் பலர் மீண்டும் புதிய வாழ்க்கையை துவங்குவர்.
* குடும்பத்தினரின் நலம் பாதுகாக்கப்படுவதுடன் தங்கள் உடல் வலிமை கூடுதலாகும். வயிறு கோளாறுகள் வந்த வழியே ஓடிவிடும் சிலருக்கு.
* அயல்தேச வர்த்தகத்தில் கால் பதித்து வருமானத்தை பன்மடங்கு அதிகரித்துக்கொள்ளும் வாய்ப்பை பெறுவர். மேலும் அரசாங்க ஆதரவும் அதிகரிக்கும் தொழில் அதிபர்களுக்கு.
* ,ரும்பு, ஜவுளி, நட்சத்திர அந்தஸ்து உணவகங்கள் போன்றவை மூலம் அதிக லாபம் பெறலாம் வியாபாரிகள்.
* விழுந்து விழுந்து சக பணியாளர்களுக்கு பாடுபட்டு நற்பெயர் பெறுவர். அதிகாரிகளும் மிக நட்பாக நடந்துகொள்வர். விரும்;பியதை பெற்று மகிழ்வர் பணியாளர்கள்.
* வெளிநாட்டு பயணங்களும் புதிய நண்பர்களும் பெரிய வெற்றிகளுக்கு காரணமாக அமைந்திடுவர் பல அரசியல்வாதிகளுக்கு.
* அமோக விளைச்சல், அபரிமிதமான தண்ணீர் வரத்து மிக செழிப்பை தரும்படி அமையும் விவசாயிகளுக்கு.
* பிறந்த வீட்டு பெருமையையும் புகழையும் சென்ற ,டத்தில் சிறப்பாக்கி காட்டுவர் பெண்கள்.
* கற்பதில் மிகுந்த ஆர்வம் கொள்வர். விளையாட்டின் மூலம் தங்கள் உறுதியை காட்டுவர் மாணவர்கள்.

இந்த வருடம் அதிர்ஸ்டத்தை அள்ளித்தருபவை
எண்கள் : 1, 3, 9
திசை : கிழக்கு, தெற்கு
நிறம் : அரக்கு, ஆரஞ்சு
தவிர்க்கவேண்டிய எண் : —

* 5, 14, 23 தேதிகளில் பிறந்தவர்களுக்கும், பெயரின் முதல் எழுத்தாக E, H, N, X-ஐ பெற்றவர்களுக்கும், பெயர் எண்ணாக 5-ஐ பெற்றவர்களுக்கும்,
* நடைபெறும் எந்த விழாவானாலும் தானாகவே நண்;;பர்கள் வீட்டிற்கு சென்று தனது அன்பை வெளிப்பாடு செய்யும் உங்கள் செயல் பாராட்டுப்பெறும்.
* வருமானம் திட்டமிட்டு செயல்படுவதால் எதிர்பார்த்ததைவிட அதிகரிக்கும். தொண்டு நிறுவனங்களுக்கு உதவி செய்து நற்பெயர் பெறுவீர்கள்.
* நினைத்தபடி திருமணம் நடைபெற நண்பர்கள் உதவி நிறைய உண்டு. காதலில் வெற்றியும் உண்டு.
* தாய் தந்தை நலம் காக்கப்படும். முறையான உடற்பயிற்சிகளை மேற்கொள்வதால் உறுதியுடன் செயல்படும் உடம்பு.
* ஏற்றுமதி ,றக்குமதியாளர்கள் எதிர்பாராத திடீர் உயர்வுகளை பெறுவர். அரசாங்க ஆதரவு உயர்விற்கு காரணமாக அமைந்திடும் தொழில் அதிபர்களுக்கு.
* உணவுப்பொருட்கள், கெமிக்கல், ஜவுளி மூலம் மிக அதிகமான லாபத்தை குவிப்பர் வியாபாரிகள்.
* கட்டிடம், வாகன கடன்கள் வந்து மகிழ்வு தருவதுடன் திடீர் பதவி உயர்வும் உண்டு பணியாளர்களுக்கு. பணபலமும் கூடும்.
* குறிப்பிட்ட சில பதவிகளில் நாட்டம் கொண்ட உங்கள் எண்ணம் ‘மே’ மாதத்தில் நிறைவேறலாம் அரசியல்வாதிகளே.
* விவசாயம் தழைக்க உறுதியுடன் செயல்பட்டு வெற்றிகளை குவித்து லாபம் நிறைய பெறுவர் விவசாயிகள்.
* படித்து முடித்த பெண்களுக்கு வேலை வாய்ப்பு, திருமணம் நடைபெற்று மகிழ்வு தரும்.
* வெளியூர் சென்று விளையாட்டின் மூலம் பெரிய சாதனைகளை படைப்பர் மாணவர்கள்.

இந்த வருடம் அதிர்ஸ்டத்தை அள்ளித்தருபவை
எண்கள் : 1, 5, 9
திசை : வடக்கு, கிழக்கு
நிறம் : வெள்ளை, பச்சை, சாம்பல்
தவிர்க்கவேண்டிய எண் : —-

* 6, 15, 24 தேதிகளில் பிறந்தவர்களுக்கும், பெயரின் முதல் எழுத்தாக U, V, W-ஐ பெற்றவர்களுக்கும், பெயர் எண் 6 உள்ளவர்களும்,
* விளையாட்டாக துவங்கிய பல விசயங்கள் மாபெரும் வெற்றியாக அமையப்போகிறது. இந்த ஆண்டின் கூட்டுத்தொகை 6 உங்களை வெற்றி நாயகனாக வலம் வரச்செய்யும்.
* லாட்டரி, ரேஸ், திடீர் விசயங்கள் மூலம் பணத்தை அள்ளுவதுடன் பல ,டங்களில் சிதறி நின்ற தொகைகளும் தொடர்ந்து வந்து குவியும்.
* பல்லாண்டுகளாக மனதில் நினைத்து ஏங்கிக்கொண்டிருந்த ,ளசுகள் காதலில் வெற்றி பெறுவர். வீட்டிலும் அனைவரும் சம்மதம் தெரிவிப்பர்.
* குழந்தைகள், துணைவியார் நலமும் காக்கப்படும். மனதில் மகிழ்ச்சியை தொடர்ந்து பெறுவதால் உடல்நிலை உயர்வாகவே ,ருக்கும்.
* கலை, தொலைக்காட்சி, அந்தஸ்து ஓட்டல்கள், உணவகங்கள், நகை தயாரிப்பு, எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிக்கல்ஸ் குறிப்பாக பெண்களை கவரும் பொருட்கள் தயாரிப்பு தொழிலதிபர்கள் எதிர்பார்த்திராத வகையில் வருமானம் பெறுவர்.
* வாடிக்கையாளர்களை தன்பக்கம் ,ழுப்பதில் மிக எளிதாக வெற்றி பெற்று லாபத்தை பன்மடங்கு உயர்வுற செய்வர் வியாபாரிகள்.
* தங்கள் திறமைகள் மதிக்கப்பட்டு, அதற்குரிய உயர்வுகளை அதிகாரிகள் உடனே வழங்கி கவுரவிப்பர் பணியாளர்களை.
* எதிர்பார்த்த உயர்வுகள் வருவதுடன், பல ஒப்பந்தங்கள் மூலம் வருமானமும் பெருக்கெடுக்கும் அரசியல்வாதிகளுக்கு.
* பசுமை புரட்சியும் வெளிநாட்டு முறை விவசாயமும், புதிய நிலச்சேர்க்கையும் உயர்விற்கு மேல் உயர்வு தரும் விவசாயிகளுக்கு.
* படித்து முடித்தவர்களுக்கு பணிகள், திருமண வயதில் உள்ளவர்களுக்கு நினைத்தது போல் மாப்பிள்ளை அமைவதும், கைநிறைந்த வருமானமும் பெண்களை உயர்த்தும்.
* எளிதில் எதையும் புரிந்துகொண்டு செயல்படுவதுடன் பிறர் நலனிலும் அக்கறை கொள்வர். படித்து முடித்தவர்களுக்கு உயர்வான பதவிகள் வந்து சேரும் மாணவர்களுக்கு.

இந்த வருடம் அதிர்ஸ்டத்தை அள்ளித்தருபவை
எண்கள் : 2, 6, 9
திசை : மேற்கு, தெற்கு
நிறம் : வெள்ளை, சிவப்பு, பச்சை
தவிர்க்கவேண்டிய எண் : 3

* 7, 16, 25 தேதிகளில் பிறந்தவர்களுக்கும், பெயரின் முதல் எழுத்தாக O, Z-ஐ பெற்றவர்களுக்கும், பெயர் எண்ணை 7ல் பெற்றவர்களுக்கும்,
* அமைதியின் வடிவமான நீங்கள் மேலும் பொறுமை காக்கவேண்டியது அவசியம். யாரிடமும் எதிர்ப்புகளை காட்டவேண்டாம். ஆன்மீக பலம் எப்பொழுதும் உங்களுக்கு ஆதரவாகவே ,ருக்கும்.
* ,ருப்பதைக்கொண்டு நல்லதை செய்து கொள்ளவேண்டும். புதிய திட்டங்களை செயல்படுத்தும் முன் தீவிரமாக சிந்தித்து செயல்படுதல் அவசியம்.
* சுபகாரியங்களில் சுற்றத்தார்களின் தலையீடுகள் ஏற்படலாம். உஷார்.
* வலிமையும் பலமும் குறைந்தாலும் அதை பலப்படுத்தும் முயற்சிகளில் வெற்றி பெறுவர்.
* எலக்ட்ரானிக்ஸ் துறையினர் சற்று சோம்பலடையலாம். மற்றபடி நடந்து வரும் துறையில் நுணுக்கமாக செயல்பட்டால் வருமானம் வந்து சேரும் தொழில் அதிபர்களுக்கு.
* வியாபாரிகள் எதைச்செய்வது என்ற குழப்பத்தில் தவிப்பர். அரசாங்கத்தின் ஆதரவு ,ருந்தாலும் அதை சரியாக பயன்படுத்திக்கொள்ள மாட்டார்கள்.
* சுதந்திரமற்ற போக்கு, பணிகளில் குழப்படி, சக ஊழியர்களின் நெருக்கடிகளால் பாதிப்பு ஏற்படலாம் பணியாளர்களுக்கு.
* மாற்றங்கள் தங்களுக்கு சாதகமாக ,ல்லையே என மன உளைச்சல் அடைவர் அரசியல்வாதிகள்.
* விளைச்சல் அதிகரிக்கும். கால்நடைகளால் லாபம் உண்டு. ,ருப்பினும் செலவுகள் கட்டுக்கு மீறலாம் விவசாயிகளுக்கு.
* பெண்கள் வெளியிடங்களில் தங்கள் பெயருக்கு களங்கம் ஏற்படுத்திக்கொள்வர். எதையும் சிந்தித்து செயல்படுதல் நல்லது.
* கடுமையான உழைப்பு அவசியம். ஆசிரியர்களின் நெருக்கடிக்கு ஆளாவர் மாணவர்கள்.

இந்த வருடம் அதிர்ஸ்டத்தை அள்ளித்தருபவை
எண்கள் : 1, 2, 3
திசை : கிழக்கு
நிறம் : ஆரஞ்ச், வெள்ளை, மஞ்சள்
தவிர்க்கவேண்டிய எண் : —

* 8, 17, 26 தேதிகளில் பிறந்தவர்களுக்கும், பெயரின் முதல் எழுத்தாக F, P-ஐ பெற்றவர்களுக்கும், பெயர் எண்ணாக 8 அமைந்தவர்களுக்கும்,
* பலத்த யோகம், பலரும் பாராட்டும் செயல்கள். புதிய பிரபல நட்பு, சிறப்பான செல்வாக்கு அனைத்தும் கிடைக்கப்பெறுவர்.
* விருப்பம்போல் பொருளாதார ஏற்றத்திற்கு எடுத்தது எல்லாம் வெற்றியாக அமைந்திடும்.
* சுபகாரியங்கள் திட்டமிட்டபடி வெகு நேர்த்தியாக நடைபெறும். குழந்தைப்பேறும் உண்டு.
* வளமையான உடல்நலமும், மன பலமும் குடும்பத்தினர் சுகமும் மகிழ்வளித்திடும் வகையில் அமையும்.
* உள்நாடு, வெளிநாடு என எல்லா பகுதிகளிலும் தங்கள் தொழில் அபிவிருத்தியை பெருக்கி மகிழ்வதுடன் அபரிமிதமான பணப்புழக்கமும் உண்டு தொழிலதிபர்களுக்கு.
* எதிர்பார்த்ததுபோல் ஏற்றமும், புதிய விரிவாக்கமும் புகழும், புதிய வாடிக்கையாளர்களின் வருகையும் மிகுந்த மகிழ்ச்சியை அளித்திடும் வியாபாரிகளுக்கு.
* எதிர்பார்த்த பெரிய உயர்வுகளும், எதிர்பாராத வெளிநாட்டு பயணமும், பண வருகையும் வழக்குகளில் வெற்றியும் ஏற்பட்டு மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதப்பர் பணியாளர்கள்.
* பதவி மாற்றங்களால் நினைத்துப்பார்த்திராத உயர்வுகளைப்பெறுவர். (நட்புகளை மறக்காமல் ,ருப்பது பின்னாளில் நல்லது) அரசியல்வாதிகள்.
* வெளிநாட்டு வகை தானியங்கள் உற்பத்தி செய்து அதிக லாபத்திற்கு விற்று பண பலமும் பெறுவர் விவசாயிகள்.
* கணவருடன் ,ணக்கம், குழந்தைகளால் உயர்ச்சி, பெற்றோரின் சொத்து சேர்க்கை பெண்கள் மனதில் ஆனந்தமளித்திடும்.
* எதார்த்தமாக செயல்பட்டு, ஏகப்பட்ட வெற்றிகளை குவித்து, பலரின் பாராட்டுதல்களை பெற்று மகிழ்வர் மாணவமணிகள்.

இந்த வருடம் அதிர்ஸ்டத்தை அள்ளித்தருபவை
எண்கள் : 2, 3, 5
திசை : வடக்கு
நிறம் : வெள்ளை, சந்தனம், பச்சை
தவிர்க்கவேண்டிய எண் : 1, 9

* 9, 18, 27 தேதிகளில் பிறந்தவர்களுக்கும், பெயர் எண் 9 பெற்றவர்களுக்கும்,
* அதிர்ஷ்ட்டக்காற்று அலைபோல் எழுந்து நினைப்பவை எல்லாம் நிரந்தரமாக வந்து சேரப்போகிறது. அனைவராலும் பாராட்டப்பெறுவீர்கள்.
* வழிய, வழிய வருமானத்தை வகை வகையாக பெருக்குவதுடன் நற்காரியங்களுக்கும் உதவி செய்து மறையாத புகழ் பெறுவர்.
* காதலில் வெற்றியும், பெற்றோர்களின் சம்மதமும், மனதில் மகிழ்வளிக்கும் வகையில் அமைந்திடும் காதல் ஜோடிகளுக்கு.
* எதையும் செய்து காட்டும் உடல் வலிமையும் உள்ளத்துணிவும் உடனடியாக வந்து சேரும்.
* ஏற்றுமதியாளர்கள், ,ரும்பு தாது எடுப்பவர்கள், நிலக்கரி சுரங்கம், உணவகம், டெக்ஸ்டைல் அதிபர்கள் மிகப்பெரிய வெற்றிகளை குவிப்பர்.
* உணவுப்பொருட்கள், ,ரும்பு, ஹார்டுவேர், கட்டுமானப்பொருட்கள், உணவகங்கள் மூலம் அதிக ஆதாயம் அடைவர் வியாபாரிகள்.
* முடியாது என ஒதுக்கித்தள்ளிய பணியை மிக ,லகுவாக செய்து முடித்து வெற்றியாளர்கள் என பெயர் பெறுவர் பணியாளர்கள்.
* தலைமையிடம் நெருக்கம், தொண்டர்களிடம் ,ணக்கமும், மக்களிடம் பாசம் ,வைகள் எல்லாம் அரசியல்வாதிகளுக்கு மிகப்பெரிய அதிர்ஷ்ட்டத்தை வழங்கப்போகிறது.
* பெரிய அளவில் உற்பத்தி, கால்நடைகளால் லாபம், தண்ணீர் வசதி, புதிய உழவு கருவிகள் என அனைத்தும் உயர்வாக வந்து சேரும் விவசாயிகளுக்கு.
* பூர்வீகச்சொத்து சேர்க்கை, புகழ், கவுரவம், எதிர்பார்த்த வேலைவாய்ப்பு, கணவர் என பெண்கள் பெருமகிழ்ச்சியில் திளைப்பர்.
* ஒரே அடியில் முழுமூச்சாக எந்த பாடத்தையும் மனப்பாடம் செய்தாவது எல்லோரையும் விட அதிக மதிப்பெண்களை அள்ளிக்குவிக்கும் உத்வேகத்தில் மாணவர்கள் செயல்பாடு உள்ளதால் உறுதியாகிவிட்டது முதலிடம்.

இந்த வருடம் அதிர்ஸ்டத்தை அள்ளித்தருபவை
எண்கள் : 1, 3, 5, 6
திசை : வடக்கு, கிழக்கு
நிறம் : மஞ்சள், பச்சை, ஆரஞ்ச்
தவிர்க்கவேண்டிய எண் : 2, 8

 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: