• ஜனவரி 2013
  தி செ பு விய வெ ஞா
   123456
  78910111213
  14151617181920
  21222324252627
  28293031  
 • பதிவுப் புள்ளிவிவரங்கள்

  • 1,243,432 hits
 • சகோதர இணையங்கள்

நம்மவரின் சுடலை ஞானம் கொஞ்சம் கேளுங்களன்…

2013 க்கான எண் கணித ஜோதிடம் உங்கள் பார்வைக்கு…

அன்பு வாசகர்களே, பிறந்த தேதி, மாதம், வருடம் தெரியாதவர்களும் தங்களின் பெயரின் முதல் எழுத்தின் அடிப்படையிலும் கீழ்கண்டவாறு பலன்களை தெரிந்து கொள்ளலாம்.

 
* 1, 10, 19, 28 தேதிகளில் பிறந்தவர்களுக்கும், பெயரின் முதல் எழுத்தாக A,I,J,Q,Y-ஐ பெற்றவர்களுக்கும், பெயர் எண் 1ஆக உள்ள 1ம் எண் நேயர்களே.
* எதையும் சரியாக புரிந்துகொண்டு செயல்பட்டு சகலமானவர்களையும் சகட்டுமேனிக்கு தன் பக்கம் ,ழுத்துக்கொள்ளும் உங்களுக்கு இந்த ஆண்டு எதையும் திட்டமிட்டு செய்தால் நன்மையாகவே முடியும்.
* ,ருப்புக்கள் குறைந்தாலும் அதை சரிக்கட்டும் முயற்சியில் மிக உஷாராக செயல்பட்டு பொருளாதாரத்தை சரிக்கட்டிவிடுவீர்கள்.
* திருமண விசயங்கள் நினைத்ததுபோல் நிறைவாக மகிழ்வாக நடைபெறும். தந்தையார் வழி உயர்வான உதவிகள் செய்வர்.
* வலிமையும், பலமும் அதிகரித்தாலும் தொடர் பணிகளால் அவ்வப்பொழுது அயர்ந்து போவீர்கள்.
* ,ரும்பு, உயர்தர உணவகங்கள், ஏற்றுமதியாளர்கள், கன்ஸ்ட்ரக்ஷன் துறையினர் திடீர் அதிர்ஸ்ட்டங்கள் அடைவர். ,தனால் தொழில் அதிபர்களின் பொருளாதார நிலை கூடுதலாகும்.
* தனது நீண்டநாள் எண்ணங்களின்படி செயல்களும், வெளியூர்களில் புதுமையான முறையில் கிளைகளும் அமைத்து வெற்றி பெறுவர் வியாபாரிகள்.
* பதவி உயர்வு, பணியிடமாற்றம், பொருளாதார ஏற்றம் போன்றவை வாழ்வின் தரத்தை உயர்த்தும் பணியாளர்களுக்கு.
* பெரும் பதவிகளை பெற்று மக்கள் மத்தியில் அதிக செல்வாக்கையும் வெளிநாட்டு ஒப்பந்தங்களையும் பெறுவர் அரசியல்வாதிகள்.
* அருகில் உள்ள நிலங்களை தன் வசப்படுத்தும் முயற்சியில் வெற்றி காண்பர். விளைச்சல் அதிகரிக்கும் விவசாயிகளுக்கு.
* படித்து முடித்த பெண்களுக்கு வேலைவாய்ப்பும், திருமணமும் கைகூடி வரும். தந்தையார் வழி உறவுகளும் பலப்படும்.
* அதிக மதிப்பெண்களை எடுத்து ஆசிரியர்களின் ஏகோபித்த பாராட்டையும் வேலைவாய்ப்பினையும் பெறுவர் மாணவர்கள்.

இந்த வருடம் அதிர்ஸ்டத்தை அள்ளித்தருபவை
எண்கள் : 1, 3, 5, 9
திசை : கிழக்கு, வடக்கு
நிறம் : ஆரஞ்ச், பச்சை
தவிர்க்கவேண்டிய எண் : 8 Continue reading