• ஜனவரி 2013
  தி செ பு விய வெ ஞா
   123456
  78910111213
  14151617181920
  21222324252627
  28293031  
 • பதிவுப் புள்ளிவிவரங்கள்

  • 1,218,676 hits
 • சகோதர இணையங்கள்

2013 ம் ஆண்டு ஆங்கில வருட இராசி பலன்கள்

 
 

torontonallurmuruganfest0101.01.2013 ஆங்கில புத்தாண்டு செவ்வாய்கிழமை ஆயில்ய நட்சத்திரம், கடக இராசி, கன்னி லக்கினத்தில் பிறப்பதாலும், 2013, சுக்கிர எண் ஆதிக்கமாக இருப்பதாலும், இது பெண்களுக்கு ஒரு அருமையான ஆண்டு என சொல்லலாம்.

இந்த புத்தாண்டில் லக்கினத்திற்கு இரண்டில் உச்சம் பெற்ற சனி, இராகுவுடன் இணைந்துள்ளான். சுகஸ்தானத்தில் புதன், சூரியன், பஞ்சமத்தில் உச்சம் பெற்ற செவ்வாய், கீர்த்தி ஸ்தானத்தில் சுக்கிரன், அஷ்டமத்தில் கேது, பாக்கியத்தில் குரு, லாபத்தில் சந்திரன் அமைந்துள்ளனர். இங்கு, பூர்வ புண்ணியத்தில் செவ்வாய் உச்சம். பாக்கியத்தில் உள்ள குரு, செவ்வாயை பார்வை செய்வதால் “குரு மங்கள யோகம்”.

மகர செவ்வாய், கடக சந்திரனை பார்வை செய்வதால் “சந்திர மங்கள யோகம்”. ஆகவே இந்த வருடம் நாட்டு மக்களுக்கு நன்மைகள் அதிகம் கிடைக்கும். பொருளாதர வளர்ச்சி, கல்வித்துறையில் பெரும் வளர்ச்சி அடையும். அத்துடன், அன்னிய நாட்டவர்கள் நம் நாட்டில் அதிகளவில் தொழில் துவங்க ஆர்வம் காட்டுவார்கள். சென்ற 2012 –ம் ஆண்டை விட இந்த 2013-ம் ஆண்டு நன்மைகளை அதிகம் தந்திடும். தன ஸ்தானத்திலும், அஷ்டமத்திலும் பாம்புகள் (இராகு-கேது) இருந்தால், தீயவையும் சற்று கொடுக்கத்தான் செய்யும். உலகில் சில இடங்களில் வெள்ளம், நில நடுக்கம், உண்டாகலாம். 2013 கூட்டு தொகை 6.சுக்கிரன் ஆதிக்கமாக அமைவதால் நன்மையான, லாபமான ஆண்டாக இருக்கும்.

இந்த புத்தாண்டு செவ்வாய்கிழமையில் பிறப்பதால், காலையில் முதலில் விநாயகரையும் அடுத்து முருகப்பெருமானை மனதால் நினைத்து வணங்க வேண்டும். இதனால் இறைவனின் ஆசியால் ஆண்டு முழுவதும் அனைத்து நன்மைகளும் கிடைக்கும்.

புத்தாண்டு அன்று உங்கள் வீட்டின் அருகில் இருக்கம் உங்கள் இஷ்ட தெய்வ கோயிலுக்கு சென்று வழிபாடு செய்யுங்கள். அத்துடன் முதல் முதலில் வாங்கும் பொருள் சர்க்கரையாக இருந்தால் நல்லது. காரணம் இனிப்பான சர்க்கரையின் வெள்ளை நிறம் சுக்கிரனுக்குரியது. அத்துடன் ஸ்ரீமகாலஷ்மியின் அருளாசியும் கிடைக்கும்.
உங்கள் பிராத்தனை அனைத்தும் இந்த 2013-ம் புத்தாண்டு வருடத்தில் நிறைவேறும். குடும்பத்தோடு மகிழ்சியாக புத்தாண்டை கொண்டாடுங்கள். உங்கள் இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கட்டும்.
அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு திருநாள் நல்வாழ்த்துக்கள்!

மேஷம்: மேஷ இராசி அன்பர்களே, தன ஸ்தானத்தில் குரு, சுகஸ்தானத்தில் சந்திரன், பாக்கியத்தில் புதனும், சூரியனும் அமைந்து. 10-ல் செவ்வாய் உச்சம் பெற்றுள்ளார். இந்த அமைப்பு பெரும் நன்மை செய்யும். வீடு – வாகனம், தொழில், உத்தியோகம், திருமணம் இவை அனைத்தும் வீடு தேடி வரும். ஜென்ம கேது, சப்தம இராகு, சனி இருப்பதால் கூட்டு தொழிலிலும், உடல்நலனிலும் சற்று கவனம் தேவை. முருகன் வழிபாடு வெற்றி தரும்.

ரிஷபம்: ரிஷப இராசி அன்பர்களே, ஜென்ம குரு, கீர்த்தி ஸ்தானத்தில் சந்திரன், சப்தமத்தில் சுக்கிரன், பாக்கியத்தில் உச்சம் பெற்ற செவ்வாய் அமைந்துள்ள காரணத்தால், எடுத்த காரியத்தில் வெற்றி அடைவீர்கள். மனைவியால் லாபம் உண்டு. நண்பர்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும். பயணங்கள் அதிகம் இருக்கும். வீடு – மனை வாங்கும் யோகம் கிட்டும். 6-ல் சனி, இராகு, 8-ல் சூரியன், புதன் இருப்பதால் ஜாமீன் விவகாரங்களில் தலையிட வேண்டாம். தேவை இல்லாமல் கடன் வாங்கவும் வேண்டாம். அம்பாள் வழிபாடு வெற்றி தரும்.

மிதுனம்: மிதுன இராசி அன்பர்களே, உங்கள் இராசிக்கு 2-ல் சந்திரன், பஞ்சமத்தில் சனி, இராகு, 7-ல் சூரியன், புதன் அமைந்துள்ளார்கள். இதனால் பண வரவு நன்றாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிகழ்ச்சிகள் நடக்கும். வாக்கு பலிதம் தரும். பூர்வீக சொத்து கைக்கு வரும். எதிர்பார பொருள் வரவு உண்டு. கல்வியால் பெருமை கிட்டும். அயல்நாடு பயணம் உண்டு. நல்ல உத்தியோகம் கிடைக்கும். 6-ல் சுக்கிரன், 8-ல் செவ்வாய் இருப்பதால் வீண் விரோதம் வரும். உடல்நலனில் சற்று கவனம் தேவை. பெருமாள் வழிபாடு வெற்றி தரும்.

கடகம்: கடக இராசி அன்பர்களே, உங்கள் ஜென்ம இராசியில் சந்திரன், பஞ்சமத்தில் சுக்கிரன், சப்தமத்தில் உச்சம் பெற்ற செவ்வாய், லாபத்தில் குரு அமைந்துள்ளார்கள். இதன் பலனாக மண்ணை தொட்டாலும் பொன்னாகும் நேரம் இது. சுக்கிரன், எதிர்பார யோகத்தை கொடுப்பார். நண்பர்களால் உதவி தேடி வரும். தொழில் துறையில் லாபம் உண்டு. மனைவியால் நன்மை கிடைக்கும். லாப குரு எண்ணியதை முடிக்க வைப்பார். கல்வி தடைபடமால் பார்த்துக் கொள்ளவும். உடல்நலனில் கொஞ்சம் கவனத்துடன் இருங்கள். அம்பாள் வழிபாடு வெற்றி தரும்.

சிம்மம்: சிம்ம இராசி அன்பர்களே, கீர்த்தி ஸ்தானத்தில் சனி, இராகுவும், சுகஸ்தானத்தில் சுக்கிரனும், பஞ்சமத்தில் புதன், சூரியன், பாக்கியத்தில் கேது அமைந்துள்ளார்கள். புகழ் கீர்த்தி தேடி வரும். நினைத்ததை சாதிப்பீர்கள். மேல் படிப்பு வெற்றி பெறும். வீடு, மனை சொத்துக்கள் வாங்கும் பாக்கியமான ஆண்டு இது. தெய்வ அனுகிரகத்தால் எதையும் சாதிக்கலாம். 10-ல் குரு இருப்பதால், செய்யும் தொழிலில்-உத்தியோகத்தில் கவனத்துடன் இருங்கள். சூரிய வழிபாடு வெற்றி தரும்.

கன்னி: கன்னி இராசி அன்பர்களே, தன ஸ்தானத்தில் சனி, இராகு, கீர்த்தி ஸ்தாதனத்தில் சுக்கிரன், சுகஸ்தானத்தில் புதன், சூரியன், பஞ்சமத்தில் செவ்வாய், பாக்கியத்தில் குருவும் அமைந்து அருமையான ஆண்டாக அமைகிறது. ஏழரை சனியும் தங்களை பாதிக்காது. செய்யும் காரியம் லாபம் அடையும். பயணங்கள் உண்டு. உத்தியோக உயர்வு உண்டு. மேல் மட்டத்தில் இருப்பவரின் உதவி தேடி வரும். லாப சந்திரன், அயல் நாட்டவர்களால் ஆதாயம் கிடைக்கச் செய்யும். அவசரம் இல்லாமல் எதையும் நிதானமாக செய்யவும். பெருமாள் வழிபாடு வெற்றி தரும்.

துலாம்: துலா இராசி அன்பர்களே, உங்கள் இராசிக்கு தன ஸ்தானத்தில் சுக்கிரன், கீர்த்தி ஸ்தானத்தில் புதன், கூரியன். 10-ல் சந்திரனும் அமைந்த அருமையான ஆண்டு இது. பொருளாதர வசதி பெருகும். உங்கள் வாக்குக்கு மதிப்பு கிடைக்கும். எதிர்பார நண்பர்களால் ஆதாயம் உண்டு. நல்ல உத்தியோகம், புதிய தொழில் துவக்கம், வெளிநாடு தொழில் போன்றவற்றில் லாபம் உண்டு. திருமணம் நடக்கும். அஷ்டம குருவால் கடன் விவகாரத்தில் கவனம் தேவை. ஜென்ம இராகு உடல்நலனில் சஞ்சலம் செய்வார். அம்பாள் வழிபாடு வெற்றி தரும்.

விருச்சிகம்: விருச்சிக இராசி அன்பர்களே, உங்கள் ஜென்ம இராசியில் சுக்கிரன், தன ஸ்தானத்தில் சூரியன், புதன். சப்தமத்தில் குரு. 9-ல் சந்திரன் அமைந்துள்ளனர். பழம் நழுவி பாலில் விழுந்தது போல் எல்லாம் கூடி வரும். சொத்து சுகம் அமையும். நோய்நொடி நீங்கும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடக்கும். நண்பர்கள் உதவி தேடி வரும். பழைய தொழில் பிரச்சினை இருந்தால் தீர்வு கிடைக்கும். விரோதங்கள் மறையும். ஆனாலும் 12-ல் சனி-இராகு இருப்பதால், பேசும்போது எச்சரிக்கையுடன் கவனமாக பேசுங்கள். புதிய சொத்துகள் வாங்கும் போதும் கவனம் தேவை. முருகன் வழிபாடு வெற்றி தரும்.

தனுசு: தனுசு இராசி அன்பர்களே, உங்கள் இராசிக்கு தன ஸ்தானத்தில் உச்சம் பெற்ற செவ்வாய், லாபத்தில் சனி, இராகு இருப்பதால் நன்மைகள் நடக்கும். யோகமான ஆண்டு இது உங்களுக்கு. ஜென்மத்தில் சூரியன் – புதன் இருப்பதால் உடல்நலனுக்காக கொஞ்சம் மருத்துவ செலவுகள் இருக்கும். 8-ல் சந்திரன் இருப்பதால், பெண்களால் விரோதங்கள் வரும். லாப சனி எண்ணியதை முடிக்கும் ஆற்றல் தரும். பண வரவில் பஞ்சம் வராது. தெய்வ அனுகிரகத்தை கேது தருவார். வீண் விரோதம், வீண் கடன் வராமல் பார்த்துக் கொள்ளவும். யோக தட்சிணாமூர்த்தி வழிபாடு வெற்றி தரும்.

மகரம்: மகர இராசி அன்பர்களே, உங்கள் இராசிக்கு பஞ்சமத்தில் குரு பகவானும், 7-ல் சந்திரன், 10-ல் சனி-இராகு, லாபத்தில் சுக்கிரன் அமைந்துள்ள காரணத்தால், தேவைகள் அத்தனையும் தேடி வரும். எதிர்பார தன வரவு இருக்கும். சொத்து வாங்கும் நேரம் இது. கணவன (அ) மனைவியாலோ அல்லது கணவன் (அ) மனைவி வழியிலோ வழக்கு, சச்சரவு இருந்தாலும் அனுகூலம் அடையும். கடல் கடந்து பயணிக்கும் யோகம் உண்டு. வெளிநாட்டில் வேலை கிடைக்கும். ஜென்மத்தில் செவ்வாய் இருக்கும் காரணத்தால், உடல்நலனில் அக்கறை தேவை. வீண் விரையங்கள் வராத அளவுக்கு கவனத்துடன் இருங்கள். பெருமாள் வழிபாடு வெற்றி தரும்.

கும்பம்: கும்ப இராசி அன்பர்களே, உங்கள் இராசிக்கு 9-ல் சனி-இராகு, 10-ல் சுக்கிரன், லாபத்தில் சூரியன் – புதன் அமைந்த காரணத்தால், தொழில் – உத்தியோகத்தில் மேன்மை தரும். கூட்டு தொழில் அமையும். லாபமும் உண்டு. திருமண பாக்கியம் கிடைக்கும். குடும்பத்தில் நன்மைகள் நடக்கும். வழக்கு இருந்தால் வெற்றி தரும். மேற்படிப்பால் நல்ல உத்தியோகம் அமையும். அரசாங்க ஆதரவு உண்டு. பூர்வீக சொத்து கிடைக்கும். 6-ல் சந்திரன், 12-ல் செவ்வாய் இருப்பதால் மருத்தவ செலவுகள் தரும். கடன் பிரச்சினையும் வரலாம். பெருமாள் வழிபாடு வெற்றி தரும்.

மீனம்: மீன இராசி அன்பர்களே, உங்கள் இராசிக்கு பஞ்சமத்தில் சந்திரன், பாக்கியத்தில் சுக்கிரன், 10-ல் சூரியன் – புதன், லாபத்தில் செவ்வாய் உச்சம் பெற்றுள்ளார். தொட்டது துலங்கும். உடல்நலம் பெறும். தன-தான்ய விருத்தி உண்டாகும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடக்கும். தொழில்துறையில் மேன்மை கிட்டும். எதிர்பார அதிர்ஷ்டம் உண்டு. வீடு-மனை அமையும். வெளிநாட்டவர் உதவி கிடைக்கும். நண்பர்களால் லாபம் உண்டு. யோகமான ஆண்டு இது. பாம்புகள் இரண்டும் உங்கள் இராசிக்கு 2-ல், 8-ல் சனியோடு இருப்பதால் பேச்சால் தொல்லை வரும். மற்றபடி பொன்னான நேரம் அம்பாள் வழிபாடு வெற்றி தரும்.

 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: