மண்டைதீவு 8 ஆம் வட்டாரத்தில் கோயில் கொண்டு அருள்பாலிக்கும் சாம்பலோடை கண்ணகை அம்மன் (மாதாச்சி) ஆலயம்.அற்புதம் நிறைந்த பழமை வாய்ந்த ஆலயமாக அங்கு உள்ள மக்கள் மனதில் குடிகொண்ட மாதாச்சி கோயில் சிறிய குடிசையாக இருந்து ஒரு சில பக்தர்களால் சிறிய கட்டிட வேலைகள் அமைந்தும் தவிர்க்க முடியாத காரணங்களாலும் , நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக கட்டிட வேலைகள் பாதிப்படைந்து இருந்தமை நீங்கள் அறிந்ததே.
தற்போது மாதாச்சி ஆலயத்தில் பாலஸ்தாபனம் செய்யப்பட்டு புரனமைப்பு வேலைகள் ஒரு சில புலம்பெயர் மண்டைதீவு மாதாச்சியின் பக்தர்களின் ஊக்குவிப்பில் நடைபெற்று வருகின்றன, தொடர்ந்து புரனமைப்பு பணிகளை செய்வதுக்கு நிதி பற்றாக்குறை இருப்பதாகவும் , அதனை புலம்பெயர்ந்து வாழும் மண்டைதீவு மக்களிடம் உதவிகோரி நிற்கின்றனர் (சாம்பலோடை கண்ணகை அம்மன்) மாதாச்சி அம்மன் பரிபாலனசபையினர். புகைப்பட விபரங்கள் உள்ளே…
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்