• நவம்பர் 2012
  தி செ பு விய வெ ஞா
  « அக்   டிசம்பர் »
   1234
  567891011
  12131415161718
  19202122232425
  2627282930  
 • பதிவுப் புள்ளிவிவரங்கள்

  • 1,170,991 hits
 • சகோதர இணையங்கள்

 • Advertisements

அற்புதங்கள் நிகழ்த்தி அசரவைத்த மண்டைதீவு வேப்பந்திடல் அருள்மிகு முத்துமாரி அம்மன்….

அற்புதங்கள் நிகழ்த்தி அசரவைத்த  மண்டைதீவு வேப்பந்திடல் அருள்மிகு முத்துமாரி அம்மன்.

” போத்துக்கேயர் கட்டிய ஆலயம் ஒன்றிற்க்கு மணி பொருத்தும் பொது அது அறுந்து விழுந்ததாகவும்  அதனால் அதிர்ச்சி அடைந்த ஆலையக்குருவின் கனவில் தோன்றிய அம்மன் அவருக்கு வழிகாட்டியதாகவும் அதன்படி செயற்பட்ட அந்த வெளிநாட்டைச் சேர்ந்த குருவானவர் அம்மன் கோவிலுக்கு மணி ஒன்றை வழங்கியதாகவும் கூறப்படும் பழைய கதை மண்டைதீவு வேப்பந்திடல் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மனுக்குரியதாக  அங்குள்ள மக்கள் கூறுகிறார்கள்.

மண்டைதீவு வேப்பந்திடல் முத்துமாரி அம்மன் ஆலைய வரலாறுகள் ஆவணப்படுத்தப்படாமையால் முழுமையாக தெரிந்து கொள்ள இயலாது போய் விட்டது , எனினும் ஊர்ப்பெரியவர்களின்  கூற்றுப்படி சிறுவர்களே இதற்கான ஆரம்பத்தின் கதைக்குரியவர்களாக உள்ளனர்.

பண்டைக்காலத்தில் தமது வீட்டுக் கால்நடைகளை வெளியிடங்களில் மேய்ச்சலுக்கு கொண்டு செல்வதில் அவர்களது வகிபாகம் முன்னிலையில் இருந்துள்ளது.

மண்டைதீவில் சிறுவர்களின்  மனதிற்கு பிடித்த இடமாக இருந்தது வேப்பந்திடல் பகுதி. இங்கே சோலையென வேப்பமரங்கள் நிறைந்து காணப்பட்டதால் சிறுவர்கள் 
தாம் கொண்டுவரும் கால்நடைகளை அந்தப்பகுதியில் மேய்வதற்கு  விட்டு விட்டு விளையாடிக்கொண்டிருந்தனர். திடீரென அவர்களிற்க்கு முன்பாக ஒரு வயதான மூதாட்டியாக
அம்மன் காட்சியளித்தார். பாட்டியைக் கண்ட சிறுவர்கள் சந்தோசத்தில் மிதந்ததுடன் அவரது தாகத்திற்கு தண்ணீர் வழங்க விரும்பிச் சென்று பாலுடன் திரும்பினர். அந்த சமயம் மூதாட்டியை காணாது கவலையுடன் வேப்பமரத்தின் கிழ் அமர்ந்து கொண்டதாகவும், அப்போது மரத்தில் இருந்து பால் வெளிவந்ததாகவும் கூறும் மக்கள் இது அம்மனின் கடாட்சமே எனக்கொண்டு சிறிய குடிசைக் கோயில் ஒன்றை அமைத்தனர், இந்த ஆலயம் சோழர் , பல்லவர், காலங்களைச் சேர்ந்தது என்பதும் அவர்களது நம்பிக்கை .வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் தனது பரிவாரங்களுடன் தீர்த்த வாரி  எனப்படும் கடற்கரைப்பகுதியில் சங்கு, மணியோசை, சேமங்கலம், போன்ற வாத்தியங்களுடன் வெள்ளைச்சேலை தரித்து சிறுவர்களுக்கு காட்சி கொடுத்தாள். பின்னாளில் சின்னத்தம்பி என்பவர்க்கு கனவில் காட்சியளித்தாள் எனவும் அவர் ஊர் மக்களுடன் உரையாடி குடிசைக்கோயிலை அமைத்து வழிபட்டதாகவும் சொல்லப்படுகின்றது. இங்கு காணப்படும் விக்கிரகம் சோழர், பல்லவர் காலத்தைச் சேர்ந்த விக்கிரகங்களாகவே காணப்படுகின்றது. “””
ஆலயத்தை அண்மித்த செம்பியன் தோட்டம் என்னும் பகுதியில் இராஜேந்திர சோழன் , கங்கை கொண்ட சோழன், எனப்படும் ராஜேந்திரன் அங்கு தங்கி இருந்ததாகவும் தீவின் வரலாற்றில் பேசப்படுகின்றது. இந்தப்பிரதேசம் தற்சமயம் கடற்படைத்தளமாக உள்ளது.”””

மண்டைதீவு மக்கள் ஆன்மீக வழிபாட்டில் மிகுந்த அக்கறை உடையவர்கள். .முன்னர் குறிப்பிட்ட சின்னத்தம்பி என்பவரிட்கு அம்பாள் நேரடியாகத் தரிசனம் கொடுத்ததை அடுத்து அவரால் குடிசைக் கோவில் அமைக்கப்பட்டதுடன் அங்கு ஆன்மீகம் வளர்ச்சி அடைந்தது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

படிப்படியாக வளர்ச்சியடைந்த இந்த ஆலயத்தின் முன்னாள் முகாமையாளர் கனகசபை அம்பலவாணர் அவர்கள் காலத்தில் பொதுமக்கள் ஆதரவுடன்(பொதுமக்கள் தெரிவு செய்த பரிபாலன சபையினரால்) அன்றைய வருடார்ந்த உற்சவம் , பொங்கல் விழா , சித்திரைப்புத்தாண்டு , போன்ற முக்கிய தினங்களில் சிறப்பு பூசைகள் நடைபெற்றன என்பதும் இங்கு முக்கியம் வாய்ந்தது , அதைவிட மிகவும் முக்கியமான விடையம் என்னவென்றால் முத்துமாரி அம்மனின் பரிபாலன சபையின் தலைவராக கடமை புரிந்த திரு நா. தாமோதரம்பிள்ளை ( அப்பா) அவர்கள் காலத்தில் முத்துமாரி அம்மனுக்கு தேர்த்திருவிழாவும் நடைபெற்றது என்பதும் சரித்திரம்…

அம்பாளின் அவதாரம் மீண்டும் எழுந்து அவள் அருளால் 14.06 .2003 அன்று முதல் ஆலயத்தின் முகாமையாளரும் மண்டைதீவு மக்களும் இணைந்து அம்மன் ஆலயத்தை மக்கள் கோவில் ஆக பிரகடனம் செய்து ஊர் மக்களின் கோவில் ஆக வடிஅமைத்து  புலம்பெயர்ந்த மண்டைதீவு மண்ணின் சிறுவர்கள் மனதில் பிரகாசித்து அவள் வளம் பெற அனைத்து புரனமைப்பு வேலைகளும் முன்னெடுக்கப்பட்டன ,  அப்போது பரிபாலன சபை தலைவராக கடமை புரிந்த அமரர் சின்னத்தம்பு வைரவநாதர் அவர்களின் முயற்சி ஆலைய கட்டுமானப்பணிகளில்  ஆரம்பமாகி இன்று  விருச்சியம் கொண்டுள்ள நிலையில் ….

தொடரும் மிகுதி

Advertisements

ஒரு பதில்

 1. முத்துமாரி அம்மன் ஆலைய பரிபாலன சபையும்,சபையால் உருவாக்கப்பட்ட மலர்க்குழுவும்! முன்னைனாள் ஆலைய முகாமையாளரை இருட்டடிப்பு செய்த விடயத்தை மன்னிக்கவும் முடியாது மறக்கவும் முடியாது.யார் யாரோ புகைப்படங்கள், எழுத்துக்கள் எல்லாம் நிறைந்தபோது,அந்த உன்னத மனிதனைப்பற்றி கணக்கில் கொள்ளாததின் நோக்கம்தான் என்ன்? தனது குறுகிய வருமானத்திலும் இந்த ஆலயத்தில் ஒரு பூசகரை வைத்து பூசைகளை நடத்திவந்த அந்த மனிதனுக்கு நீங்கள் செய்த நன்றிக்கடன் இதுதானா? இப்படிப்பட்ட மலருக்கு 1,80000 ஆயிரம் ரூபா செலவு செய்யப்பட்டுள்ளதை நினைக்கும்போது மனம் வருந்துகின்றது.மிகவும் கேவலமாகவும் இருக்கின்றது.அந்த உன்னத மனிதனை மறந்த மேதாபிகளே! எல்லாம் எங்களுக்கே தெரியும் என்ற இறுமாப்புடையவர்களே,எதிலும் சற்று நீங்கள் விலகி நிற்பதே மேலானதும், வளர்ச்சிக்கு உகந்த விடயமும் ஆகும்.எங்கள் ஆலயத்தின் வளர்ச்சித் தோற்றத்தின் முதற் படியினிலேயே கரும்புள்ளியை குத்தியவர்களே! உங்களை இந்த மண்ணும்,மக்களும் மறக்கமுடியாத வடுவாக என்றும் நினைவில் நிறுத்திவிட்டீர்களே……

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: