• நவம்பர் 2012
  தி செ பு விய வெ ஞா
   1234
  567891011
  12131415161718
  19202122232425
  2627282930  
 • பதிவுப் புள்ளிவிவரங்கள்

  • 1,245,396 hits
 • சகோதர இணையங்கள்

மண்டைதீவு மக்களுக்கு வேலணை பிரதேசசபையின் முக்கிய அறிவித்தல்…

வேலணை பிரதேசசபைக்கு உட்பட்ட பகுதிகளில் ஆதனங்கள் மீள் பதிவு செய்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருவதாகவும் அதன் தொடர்ச்சியாக மண்டைதீவிலும் இன்னும் மூன்று நாட்களில் ஆதனங்கள் பதிவு நடத்த உள்ளதாக வேலணை பிரதேசசபை தலைவர் உதயன் பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார்.

07-copy_14

பனிக்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தி வேணுமா? இதை சாப்பிடுங்க

மழைக்காலத்திலும், பனிக்காலத்திலும் நோய்கள் அதிகம் தாக்கும். எனவே நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த சத்தான உணவுகளை உட்கொண்டால் நோய் பாதிப்பிலிருந்து தப்பிக்கலாம்.

இயற்கையானது சீசனுக்கு தகுந்த காய்கறிகளையும் பழங்களையும் விளைவிப்பது மனிதர்களுக்காகத்தான். இந்த பனிக்காலத்திற்கு ஏற்ற சில காய்கறிகளை சாப்பிடுவதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்கின்றனர் உணவியல் நிபுணர்கள்.

சத்தான சர்க்கரை வள்ளிக்கிழங்கு

இனிப்பு நிறைந்த சர்க்கரை வள்ளிக்கிழங்கு இந்த சீசனில் அதிகம் கிடைக்கும். இதில் உயர்தர வைட்டமின் ஏ, பீட்டா கரோட்டீன் ஆகியவை உள்ளன. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு சரும வறட்சியை தடுத்து சருமத்தை பளபளப்பாக்கும். இதில் அதிக அளவு பொட்டாசியம் காணப்படுகிறது. சர்க்கரை வள்ளிக்கிழங்கை சாதாரணமாக வேகவைத்து சாப்பிடலாம். சூப் அல்லது பொரியல் செய்து சாப்பிடலாம். Continue reading

மண்டைதீவு வேப்பந்திடல் ஸ்ரீ முத்துமாரி ஆலயத்தில்(19+20.-11.2012) நடைபெற்ற…

மண்டைதீவு வேப்பந்திடல் ஸ்ரீ முத்துமாரி ஆலயத்தில் நடைபெற்ற
கந்த சஷ்டி விரதப்பூர்த்தி நிகழ்வும் பாரணை நிகழ்வுகளின் புகைப்பட பிரதிகளை நீங்கள் இங்கு காணலாம். Continue reading

மண்டைதீவு முத்துமாரி அம்மன் கோவிலில் கந்த சஷ்டி விரதம்…

மண்டைதீவு வேப்பந்திடல் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் அமைந்துள்ள, மண்டைதீவு  2ம் வட்டாரத்தை சேர்ந்த திரு கோயிலார் கந்தையா சிவபிரகாசம் (ஆசிரியர்) குடும்பத்தினரால்  உபயம் செய்த முருகன் ஆலயத்தில் கந்த சஷ்டி விரத பூசைகள் உபயகார குடும்பத்தினரால் மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகின்றன, அந்த பூசைகளின் 3ம் நாளில் எடுக்கப்பெற்ற புகைப்படபிரதிகள் உங்கள் பார்வைக்கு…


murukan alaiyammurukan2

காலதாமதமாக கிடைக்கப்பெற்ற மரண அறிவித்தல்…

மண்டைதீவு 5 ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அந்தோனி முத்து கியூபேட் றாஜகுமார் (ராஜன்)  (01.11.2012) வியாழக்கிழமை காலமாகிவிட்டார். அன்னார் காலஞ்சென்ற செபஸ்ரி அந்தோனி முத்து (தேவராசா இளைப்பாறிய அதிபர்) மற்றும் மேரி மர்த்தீனம்மா (இராசாத்தி) தம்பதியரின் சிரேஷ்ட புதல்வனும், ஜெயாவின் அன்புக் கணவரும், லெனின் றொகானின் அன்புத்தந்தையும், Continue reading

திரு செல்லத்தம்பி தருமராஜா அவர்களின் முதலாவது சிராத்ததினம்…

மண்டைதீவு  2ம் வட்டாரத்தை சேர்ந்த திரு செல்லத்தம்பி தருமராஜா அவர்களின் முதலாவது சிராத்ததினம் ( 16.11.2012) இன்று வெள்ளிக்கிழமை நடை பெற்றது , அந்த நிகழ்வுகளின் புகைப்படப்பிரதிகளை இங்கு காணலாம். Continue reading

முதலாவது சிராத்ததினம் செல்லத்தம்பி தர்மராஜா. (16.11.2012)


அறிவகம் தந்த ஆருயிரே
அன்பகலாத  எம் நாயகனே
ஆண்டு ஒன்று கழிந்தாலும்
அன்றும் என்றும் எம் நெஞ்சை விட்டு
அகலாத அன்பு சேவையாளனே என்றும்
அணையாது உங்கள் நினைவலைகள் .எம் நெஞ்சை விட்டு….. Continue reading

சுவிஸ் ஒன்றிய தலைவரின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்…..

15.11.2012 வியாழக்கிழமை இன்று பிறந்தநாள் கொண்டாடும் கண்ணதாசன் சுஜானி அவர்களுக்கு சுவிஸ் ஒன்றிய தலைவரின் அன்பு வாழ்த்துக்கள்.
மக்கள் சேவை மகேசனின் சேவை என கருத்தில் கொண்டு இன்றுவரை அயராது சுவிஸ் ஒன்றியத்தின் வளர்ச்சிக்கு உந்துசக்தியாக இருந்துவரும் கணபதிப்பிள்ளை கண்ணதாசன் அவர்களின் அன்பு மகள் கண்ணதாசன் சுஜானி அவர்களின் பிறந்தநாளில் நாமும் இணைந்துகொண்டு மண்டைதீவு மண்ணின் பெருமை நிலைநாட்ட தந்தைபோல் சேவை செய்து தரணியில் சிறப்புடன் வாழ வாழ்த்துகின்றேன்.
வாழ்த்துக்களுடன்
சிவ ஸ்ரீகுமாரன்.

பிறந்தநாள் வாழ்த்துக்கள் கண்ணதாசன் சுஜானி

மண்டைதீவு மக்கள் அபிவிருத்தி ஒன்றியம் சுவிஸ் அமைப்பின் 3ம், 4ம், வட்டாரத்தின் ஆலோசகர் கணபதிப்பிள்ளை கண்ணதாசன் அவர்களின் அன்புப்புதல்வி கண்ணதாசன் சுஜானி இன்று தனது (15.11.2012)   பிறந்தநாளை கொண்டாடும் வேளையில் அவரை அப்பா அம்மா தம்பிமார், மற்றும் உறவினர்கள் , நண்பர்கள் அனைவரும் அனைத்து செல்வங்களும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்க என வாழ்த்துகின்றார்கள். Continue reading

அற்புதம் நிறைந்த மண்டைதீவு வேப்பந்திடல் முத்துமாரி அம்மன்……

அற்புதம் நிறைந்த மண்டைதீவு வேப்பந்திடல் முத்துமாரி அம்மன் ஆலயத்தில் கேதார கெளரி விரத பூசைகள் விசேடமாக நடைபெற்று வந்தன என்பதும் விளக்கு பூசை 42 அம்மன் அடியார்களால் ஏற்றப்பட்டு காப்பு கட்டு வைபவம் இனிது நடைபெற்றதாக அறியமுடிகின்றது, நாளைய தினம் கந்த சஷ்டி பூசை ஆரம்பமாகி 6 நாட்கள் விசேடமாக நடைபெற உள்ளதாகாவும் அங்கிருந்து செய்திகள் தெரிவிக்கின்றன…..