• ஏப்ரல் 2012
    தி செ பு விய வெ ஞா
    « மார்ச்   மே »
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    30  
  • பதிவுப் புள்ளிவிவரங்கள்

    • 1,094,537 hits
  • சகோதர இணையங்கள்

சுவிஸ் இல் பாலியல் கல்வி தேவையில்லை : வாக்கெடுப்பு நடத்த தீர்மானம்!

 

சுவிட்சர்லாந்தில் ஆரம்பப்பள்ளியில் பாலியல் கல்வி தேவையில்லை என்று பலரும் கருதுவதால் அதனை பொது வாக்கெடுப்பு நடத்தி முடிவு செய்யத் திட்டமிட்டனர். “பாலர் பள்ளி மற்றும் ஆரம்பப்பள்ளியில் பாலியலாக்கத்திற்கு எதிரான பாதுகாப்பு” என்ற தலைப்பில் 2013 ஒக்டோபருக்குள் 100,000 பேரிடம் ஒப்புதல் கையெழுத்துப் பெற திட்டமிட்டுள்ளனர்.

வலதுசாரி இயக்கமான சுவிஸ் மக்கள் கட்சியால் ஆரம்பிக்கப்பட்ட இந்தக் கையெழுத்தியக்கதிற்கு, மைய வலது சாரிக் கட்சியான கிறிஸ்தவக் குடியரசுக் கட்சியும், பகுத்தறிவுக்கட்சியும் ஆதரவு தெரிவித்துள்ளன.

பேசெல் மாநிலம் வாழ் பெற்றோர் இந்தப் பாலியல் கல்வியை எதிர்த்து வருகின்றனர். குறிப்பாக பாலியல் உறுப்புகளின் மாதிரியைக் குழந்தைகளிடம் காண்பித்து அவற்றின் செயல்பாடு குறித்து விவாதி்ப்பதை கடுமையாக விமர்சிக்கின்றனர்.

மேலும் இந்தக் கையெழுத்தியக்கம், சிறுவர்களுக்குப் பாலியல் கல்வியைக் கற்பிப்பது பெற்றோரின் கடமை என்றும், ஒன்பது வயதுக்குப் பின்பு பள்ளிகள் அத்துறையில் கருத்துச் செலுத்தலாம் என்றும் கருதுகின்றது.

பாதுகாப்பாக இருப்பது குறித்து சிறு குழந்தைகளுக்குக் கற்றுத் தருவதால் குழந்தைகளைத் தவறாகப் பயன்படுத்துவது குறையும் என்ற கருத்து பரவலாகக் காணப்படுகிறது. ஆனால் இதைக் கற்றுத்தருவதற்கு பாலியல் நடவடிக்கைளை விளக்கிச் செல்ல வேண்டும். இந்த விளக்கம் சிறு குழந்தைகளுக்குத் தேவையில்லை.

மேலும் 12 வயதில் உயிரியல் பாடப் பிரிவில் இனப்பெருக்கம் பற்றிய பாடத்தோடு சேர்த்து பாலியல் விழி்பபுணர்வையும் அளிக்கலாம் என்றும் இந்தக் கையெழுத்து இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் கருதுகின்றனர்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: