• மார்ச் 2012
    தி செ பு விய வெ ஞா
    « பிப்   ஏப் »
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031  
  • பதிவுப் புள்ளிவிவரங்கள்

    • 1,078,462 hits
  • சகோதர இணையங்கள்

வீதியால் சென்றுகொண்டிருந்தவர் திடீர் மரணம் – வேலணையில் சம்பவம்

 

மண்டைதீவில் இருந்து வேலணை மத்திய கல்லூரி நோக்கி துவிச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்தவர் திடீரென வீதியில் விழுந்து மரணமடைந்துள்ளார்.

மண்டைதீவு 6 ஆம் வட்டாரப் பகுதியைச் சேர்ந்த பொன்னம்பலம் சிவமணி (வயது-53) என்பவரே இவ்வாறு மரணமடைந்தவர் ஆவார்.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

மண்டைதீவுப் பகுதியிலிருந்து துவிச்சக்கர வண்டியில் இன்று காலை 8.30 மணியளவில் வேலணை மத்திய கல்லூரி நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த நிலையில் அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்துத் தொடர்ந்து துவிச்சக்கர வண்டியை இயக்க முடியாத நிலையில் வீதியில் இறங்கி ஓரிடத்தில் இருந்துள்ளார். இருந்தும் அவருக்கு ஏற்பட்ட நெஞ்சுவலி அதிகரித்ததன் காரணமாக அவரின் உயிர் அவ்விடத்திலேயே பிரிந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஊர்காவற்றுறைப் பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன், சம்பவ இடத்துக்கு விஜயம் செய்த ஊர்காவற்றுறை நீதிமன்ற நீதிவான் பார்வையிட்டதுடன், பிரேத பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்குச் சடலத்தை எடுத்துச் செல்லுமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

இவரின் சொந்த இடம் வேலணை என்பதுடன் மண்டைதீவில் திருமணம் செய்து அங்கேயே வாழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: