• மார்ச் 2012
  தி செ பு விய வெ ஞா
  « பிப்   ஏப் »
   1234
  567891011
  12131415161718
  19202122232425
  262728293031  
 • பதிவுப் புள்ளிவிவரங்கள்

  • 1,177,850 hits
 • சகோதர இணையங்கள்

 • Advertisements

அம்பிகை அடியவர்களுக்கு ஓர் அன்பு மடல்….

   
 
கடலும் கடல் சார்ந்த நெய்தல் நிலக்கரையும் வயலும் வயல் சார்ந்த மருத நிலமும் கொண்ட வேப்பந்திடல் என்னும் சூழலில் வேண்டும் வரம் அருளும் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்பாள் ஆலயம் நீண்டவரலாற்றுச் சிறப்பும் இயற்கை எழில் சிறப்பும் பொருந்திய ஆலயமாகும். 

திருக்காட்சி கொடுத்த அருளின் பயனால் அடியவர் ஒருவரால் வழிபடப்பட்டு மடாலயமாக மேன்மையடைந்து இந்துமதக் கோட்பாடுகளுக்குள் உள்வாங்கப்பட்டு பிற்காலத்தில் ஆகமம் முறைப்படி பூசை, புனஸ்காரங்களும் நாள்தோறும் நித்திய நைமித்திய வழிபாடுகளும் இடம் பெற்று வந்த இவ்வாலயமானது, 1990ஆம் ஆண்டு குடாநாட்டில் இடம்பெற்ற சரித்திரமாற்றம் மண்டைதீவு என்னும் அழகியதீவினையும் பாதிப்புக்குள் ஏற்படுத்தியதைத் தொடர்ந்து அம்பாளின் ஆலய வழிபாடுகள் இடைநிறுத்தப்பட்டது.

விசமிகளின் செயற்பாட்டினால் அம்பாளின் விக்கிரகம் பெயர்த்தெடுக்கப்பட்டு ஆலய வளங்கள் களவாடப்பட்டமையால் மீண்டும் சாமானிய சூழல் வந்தபோது வழிபாடுகளை ஆரம்பிக்க முட்டுக்கட்டையானது.

2004ஆம் ஆண்டு பொதுமக்கள் பரிபாலனத்துக்கு கையளிக்கப்பட்ட இவ் ஆலயத்தில் எப்படியேனும் கும்பாபிஷேகம் செய்து அழகு பார்க்க வேண்டும் என்ன கவுடன் கொலுவந்த பரிபாலன சபையினர் தமது கடமையினை சிரமேற்கொண்டு செயல்பட ஆயினர்.

அம்பாளின் அனுக்கிரகத்தோடு பலதடைகளையும் கடந்து, தமது நேரங்களின் பெரும் பாகத்தை இக்கைங்கரியகளுக்காய் அர்பணித்து செயல்பட்ட நல் உள்ளங்களின் மன விருப்பு நிறைவேறும் பொருட்டும், அன்னையருளால் புலம்பெயர்ந்து வாழும் அடியவர்களின் உதவியின் பயனாலும், அன்னையின் கும்பாபிஷேகத்தை தரிசிக்கும் காலத்தை எண்ணிஎண்ணி அன்னையின் பாதாரவிந்தத்தில் சரணடைந்த மூத்தோரின் ஆன்மா சாந்தியுறுதற் பொருட்டும் ஸ்ரீ முத்துமாரி அம்பாளுக்கு மகாகும்பாபிஷேகம் எடுக்க திருவருள் ஈர்ந்துள்ளாள் அன்னை.

அழகியல் கட்டிட சூழலோடும் எழில் சிறப்போடும்அமைக்கப்பட்டுவரும் ஆலயம் மகாகும்பாபிஷேகத்துக்கு தயாராகவுள்ளநிலையில் கும்பாபிஷேகத்தை சிறப்புற நிகழ்த்தும் பொருட்டு மேலும் பல தேவைகளை கொண்டுள்ளமை யாபேரும் அறிந்ததே.

ஆதலினால் அம்பிகை மெய் அடியார்களே!!!

முத்துமாரி அம்பாளின் குடமுழுக்கை கண்டு அவள் திருவருளினை பெற்றிடும்பால் தொடர்ந்தும் உங்கள் பங்களிப்புக்களை வழங்கி அம்பிகை அருளினை பெற்றுய்யுங்கள்.

“அவள் அருளாலே அவள்தாள் வணங்கி”
நன்றி.

Advertisements
%d bloggers like this: