• பிப்ரவரி 2012
  தி செ பு விய வெ ஞா
   12345
  6789101112
  13141516171819
  20212223242526
  272829  
 • பதிவுப் புள்ளிவிவரங்கள்

  • 1,251,497 hits
 • சகோதர இணையங்கள்

திடீரெனச் சிலர் ஏன் மயங்கி விழுகிறார்கள்?

 

திடீர் மயக்கங்கள் வருவது ஏன்?

 • பாத்ரூம் போனபோது மயங்கிவிட்டேன்.
 • படுக்கையிலிருந்து எழுந்தபோது மயங்கிவிட்டேன்.
 • யாரோ கூப்பிட்டபோது திரும்பிப் பார்க்கையில் விழுந்துவிட்டேன்.
 • சாமிக்கு வைப்பதற்காக பூ கொய்வதற்கு சென்றபோது என்ன நடந்ததெனத் தெரியாது விழுந்துவிட்டேன்.

இப்படிப் பலவாறாகச் சொல்லிக்கொண்டு வருபவர்கள் பலபேராகும். Continue reading

மரண அறிவித்தல் திருமதி இராசம்மா சுப்பிரமணியம்.

 மண்டைதீவைப் பிறப்பிடமாகவும் யோகபுரம் மேற்கு மல்லாவியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி இராசம்மா சுப்பிரமணியம் நேற்று திங்கட்கிழமை (27.02.2012) காலமானார். அன்னார் காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி சிவக்கொழுந்து தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற சுப்பிரமணியத்தின் அன்பு மனைவியும், காலஞ்சென்ற விஸ்வ நாதர் மாரிமுத்து தம்பதியரின் மருமகளும், சதாசிவதேவி, தையல்நாயகி, குணமணி (லண்டன்), தங்கமலர், நேசமலர், கிருஷ்ண லீலா (ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு தாயாரும், கலஞ்சென்ற முத்துராசா மற்றும் பாராஜசிங்கம், குமாரகுலசிங்கம் (லண்டன்), மகாராஜா, அமிர்தலிங்கம், இரத்தினசிங்கம் (ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மாமியாரும், காலஞ் சென்றவர்களான இராமலிங்கம், தம்பிஐயா, சிவக்கொழுந்து, சின்னத்தங்கச்சி, தெய்வானை, தங்கம்மா, நாகம்மா, துரைசிங்கம் மற்றும் கனகம்மா, செல்லத்துரை (சாஸ்திரியார்) ஆகியோரின் அன்புச் சகோதரியும் மாலினி, பாஸ்கரன், அமுதா, மைதிலி, குமுதா, முகுந்தன், கவிதா, குகன் (அமரர்), ஜஸ்மிதா, சுகிர்தா, விகிர்தா, ரஜிதா, கார்த்திகா, சகிதா, அஜந்தன், பிருந்தா, கஜிந்தன், அனோஜன், அனோமிகா ஆகியோரின் அன்புப்பேர்த்தியுமாவார். அன்னாரின் இறுதிக் கிரியைகள் இன்று செவ்வாய்க்கிழமை (28.02.2012) அவரின் இல்லத்தில் மு.ப. 11 மணிக்கு நடை பெற்று பூதவுடல் மல்லாவி பாலியாறு இந்துமயானத்தில் தகனம் செய்யப்படும். இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

இல. 511, யோகபுரம், மல்லாவி.

தகவல்:- அமிர்தலிங்கம் (இராசா)  (மருமகன்)