• பிப்ரவரி 2012
    தி செ பு விய வெ ஞா
    « ஜன   மார்ச் »
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    272829  
  • பதிவுப் புள்ளிவிவரங்கள்

    • 1,079,246 hits
  • சகோதர இணையங்கள்

அடிப்படைத் தேவைகள் கூட நிறைவு செய்யப்படாமல் எவ்வாறு குடியேற முடியும்!- மண்டைதீவு பிரதேச மக்கள்

கடற்படையினரால் மிக நீண்டகாலம் கடற்படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் வைக்கப்பட்டிருந்து, தற்போது விடுவிக்கப்பட்டுள்ளபோதும், மின்சாரம், குடிதண்ணீர் போன்ற அடிப்படைத் தேவைகள் கூட நிறைவு முழுமையாக நிறைவுசெய்யப்படாத நிலை தொடர்ந்து கொண்டிருப்பதாக பிரதேச மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இது குறித்து மக்கள் தெரிவிக்கையில்,

எமது பிரதேசம் மிக நீண்டகாலம் கடற்படையினரின் ஆளுகைக்குள் வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் யுத்தத்தின் பின்னர் மீள்குடியேற்றத்திற்கு அனுமதிக்கப்பட்டாலும், மீள்குடியமர்ந்த மக்களுக்கான அடிப்படைவசதிகள் எவையும் செய்து கொடுக்கப்படவில்லை.

குடிதண்ணீர் அல்லைப்பிட்டியிலிருந்து கொண்டுவரப்படுகின்றது, இதுவும் ஒரு குடும்பத்திற்கு 35லீற்றர் என்ற அளவிலேயே வழங்கப்படுகின்றது. குடிப்பதற்கும், உணவுத்தேவைக்கும் மட்டுமே இதனைப் பயன்படுத்திக் கொள்ள முடியும். இதர தேவைகளுக்காக நாம் வீடுகளிலுள்ள கிணறுகளையே நம்பியிருக்கின்றோம்.

அதுவும் ஒரு சிலதே உள்ளன. அவற்றைக் கொண்டே சமாளித்துக் கொள்ளவேண்டியுள்ளது. இதேபோன்று, மின்சார வசதிகளும் இன்றுவரை பூர்த்திசெய்யப்படவில்லை. அல்லைப்பிட்டி பகுதியிலிருந்து மின்சாரம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டபோதும், அதற்கும் மக்கள் சிலர் ஒத்துழைப்பு வழங்கியிருக்கவில்லை.

யாழ்ப்பாணத்திலிருந்து மின்சாரத்தைக் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. தேர்தல் வரும்போது மின்கம்பங்களை நாட்டுவதும், பின்னர் அவற்றை பிடுங்கிவிடுவதுமாக நடந்து கொண்டிருக்கின்றது. இதேபோன்றே இராணுவத்தினர் வைத்திருந்த வீடுகளைச் சுற்றியுள்ள மண் அணைகள் அகற்றப்படாமலிருக்கின்றது.

வீதிகள் எவையும் சீரமைக்கப்படவில்லை, இந்த நிலையில் மண்டைதீவில் மக்கள் வந்து குடியேறுகிறார்கள் இல்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக முன்வைக்கப்படுகின்றது. ஆனால் அடிப்படை வசதிகள் பெற்றுக் கொடுக்கப்படாமல் மக்கள் எப்படி குடியேற முடியும் என்பதை அவர்கள் நினைத்துப் பார்க்கிறார்கள் இல்லை என மக்கள் மேலும் தெரிவித்தனர்.

இதேவேளை நேற்றையதினம், மண்டைதீவிற்குச் சென்ற கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரிடமும் மக்கள் மேற்படி குறைகள் தொடர்பில் தெரியப்படுத்தினர். இதற்குப் பதிலளித்த பாராளுமன்ற உறுப்பினர் பொறுப்பு வாய்ந்த தலைமைகளுடன் பேசி, இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும், எனவும் இவ்வாண்டு தனது ஒதுக்கீட்டின் கீழ் பெருமளவு நிதியை மண்டைதீவின் பாடசாலைகள் அபிவிருத்திக்கு ஒதுக்கவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: