• பிப்ரவரி 2012
    தி செ பு விய வெ ஞா
    « ஜன   மார்ச் »
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    272829  
  • பதிவுப் புள்ளிவிவரங்கள்

    • 1,177,471 hits
  • சகோதர இணையங்கள்

  • Advertisements

மரண அறிவித்தல் செல்வி தம்பு நடேஸ்வரி அவர்கள்

மண்டைதீவு 4ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் மண்டைதீவு 5ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும் வாழ்ந்து வந்த செல்வி தம்பு நடேஸ்வரி அவர்கள் நேற்று 28.02.2012 இறைவனடி சேர்ந்து விட்டார். அன்னார் தம்பு லட்சுமிகாந்தன் அவர்களின் அருமை அக்காவும் ஆவர். அன்னாரின் இறுதிக்கிரிகைகள் இன்று (29.02.2012) நடைபெறும் என்பதை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றனர்.

மிகுதி விபரங்கள் பின்னர் அறிக்கப்படும்.

தகவல்: மண்டைதீவில் இருந்து நமது செய்தியாளர்.

Advertisements

திடீரெனச் சிலர் ஏன் மயங்கி விழுகிறார்கள்?

 

திடீர் மயக்கங்கள் வருவது ஏன்?

  • பாத்ரூம் போனபோது மயங்கிவிட்டேன்.
  • படுக்கையிலிருந்து எழுந்தபோது மயங்கிவிட்டேன்.
  • யாரோ கூப்பிட்டபோது திரும்பிப் பார்க்கையில் விழுந்துவிட்டேன்.
  • சாமிக்கு வைப்பதற்காக பூ கொய்வதற்கு சென்றபோது என்ன நடந்ததெனத் தெரியாது விழுந்துவிட்டேன்.

இப்படிப் பலவாறாகச் சொல்லிக்கொண்டு வருபவர்கள் பலபேராகும். Continue reading

மரண அறிவித்தல் திருமதி இராசம்மா சுப்பிரமணியம்.

 மண்டைதீவைப் பிறப்பிடமாகவும் யோகபுரம் மேற்கு மல்லாவியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி இராசம்மா சுப்பிரமணியம் நேற்று திங்கட்கிழமை (27.02.2012) காலமானார். அன்னார் காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி சிவக்கொழுந்து தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற சுப்பிரமணியத்தின் அன்பு மனைவியும், காலஞ்சென்ற விஸ்வ நாதர் மாரிமுத்து தம்பதியரின் மருமகளும், சதாசிவதேவி, தையல்நாயகி, குணமணி (லண்டன்), தங்கமலர், நேசமலர், கிருஷ்ண லீலா (ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு தாயாரும், கலஞ்சென்ற முத்துராசா மற்றும் பாராஜசிங்கம், குமாரகுலசிங்கம் (லண்டன்), மகாராஜா, அமிர்தலிங்கம், இரத்தினசிங்கம் (ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மாமியாரும், காலஞ் சென்றவர்களான இராமலிங்கம், தம்பிஐயா, சிவக்கொழுந்து, சின்னத்தங்கச்சி, தெய்வானை, தங்கம்மா, நாகம்மா, துரைசிங்கம் மற்றும் கனகம்மா, செல்லத்துரை (சாஸ்திரியார்) ஆகியோரின் அன்புச் சகோதரியும் மாலினி, பாஸ்கரன், அமுதா, மைதிலி, குமுதா, முகுந்தன், கவிதா, குகன் (அமரர்), ஜஸ்மிதா, சுகிர்தா, விகிர்தா, ரஜிதா, கார்த்திகா, சகிதா, அஜந்தன், பிருந்தா, கஜிந்தன், அனோஜன், அனோமிகா ஆகியோரின் அன்புப்பேர்த்தியுமாவார். அன்னாரின் இறுதிக் கிரியைகள் இன்று செவ்வாய்க்கிழமை (28.02.2012) அவரின் இல்லத்தில் மு.ப. 11 மணிக்கு நடை பெற்று பூதவுடல் மல்லாவி பாலியாறு இந்துமயானத்தில் தகனம் செய்யப்படும். இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

இல. 511, யோகபுரம், மல்லாவி.

தகவல்:- அமிர்தலிங்கம் (இராசா)  (மருமகன்)

மண்டைதீவில் படைமுகாம் அமைக்கும் பணிகளுக்கு மணல் அகழ்ந்தெடுக்கப்படுவதால் குடிநீர் உவராகும் அபாயம்!- மக்கள் விசனம்

மண்டைதீவின் கரையோரப் பகுதியில் கண்மூடித்தனமாக மணல் அகழ்ந்தெடுக்கப்படுவதால் எதிர்காலத்தில் பெரும் பாதிப்புக்கள் ஏற்படும் என சுட்டிக்காட்டியுள்ள மக்கள் ஏற்கனவே நீர் உவராதல் மற்றும் குடிநீர் பற்றாக்குறை என்பன ஆரம்பித்து விட்டதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர். Continue reading

கொலஸ்ட்ரால் பற்றி படித்ததை உங்களுடன் பகிர்கின்றேன்!!!

 

what is human Endogenus cholesterol?

கொலஸ்ட்ரால் என்றால் என்ன?

கொலஸ்ட்ரால் என்பது ஒரு வேதிக் கூட்டுப்பொருள். அது இயற்கையாக நமது உடலில் உருவாக்கப்படுகிறது. Continue reading

மண்டைதீவு றோமன் கத்தோலிக்க வித்தியாலய விளையாட்டுப்போட்டி!

யாழ்/மண்டைதீவு றோமன் கத்தோலிக்க வித்தியாலய  2012 க்கான மெய்வல்லுநர் விளையாட்டுப்போட்டி கடந்த 15.02.2012 புதன்கிழமை அன்று நடைபெற்றது.
இதில் இரண்டு இல்லங்களாக போல் அணி (மஞ்சள் இல்லம் ) பீற்றர் அணி (பச்சை இல்லம் ) என கலந்து கொண்டனர். மஞ்சள் இல்லம் 192. புள்ளிகளைப் பெற்று முதலாவது   இடத்தை தட்டிக்கொண்டனர், பச்சை இல்லம் 180.  புள்ளிகளை பெற்றது குறிப்பிடத்தக்கது.

மண்டைதீவில் வரலாறு காணாத விளைச்சலும் சுவிஸ் அபிவிருத்தி ஒன்றியத்தின் திறனும்….

மண்டைதீவில் 21 வருடங்களுக்கு பின் வரலாறு காணாத நெல் விளைச்சலையும் அதனை இயந்திர கருவிகள் மூலம் அறுவடை செய்வதையும் முதன் முதலாக பார்வையிடும் மண்டைதீவு  புலம் பெயர்ந்த மக்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி தரும் என்பது மறக்க முடியாத விடையம் ஒன்றாகும்.  நிலத்தில் நெற்செய்கையை மேற்கொண்ட மக்கள் புலத்தில் மண்டைதீவு மக்கள் அபிவிருத்தி ஒன்றியத்தின் சுவிஸ் அமைப்பினருக்கும் தங்களுடைய மனமார்ந்த நன்றியை  மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கின்றார்கள்.

This slideshow requires JavaScript.