• ஜனவரி 2012
  தி செ பு விய வெ ஞா
  « டிசம்பர்   பிப் »
   1
  2345678
  9101112131415
  16171819202122
  23242526272829
  3031  
 • பதிவுப் புள்ளிவிவரங்கள்

  • 1,120,389 hits
 • சகோதர இணையங்கள்

 • Advertisements

இணையத்தளங்களுக்கான விதிமுறைகள் குறித்து சிறீலங்கா அறிவிப்பு

  

சிறீலங்கா அரசின் உத்தரவுக்கமைய பதிவு செய்யப்பட்ட இணையத்தளங்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்து இலங்கையின் தகவல் ஊடகத்துறை அமைச்சு அறிவித்துள்ளது.இலங்கை தகவல் ஊடகத்துறை அமைச்சு 27 இணையத்தளங்களுக்கு மாத்திரமே செயற்படுவதற்கான அனுமதிப்பத்திரத்தை இதுவரையில் வழங்கியுள்ளது. செய்திகளை வெளியிடும் இந்த இணையத்தளங்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து அறிவித்துள்ள தகவல் ஊடகத்துறை அமைச்சு இதற்கமைய இணையத்தளங்கள செயற்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

இணையத்தளங்களுக்காக வகுக்கப்பட்டுள்ள விதிமுறைகளில் முக்கியமானவை சில.

*இணையத்தளங்களுக்கு பொறுப்பான ஆசிரியர்களும் ஊடகவியலாளர்களும் தாங்கள் வெளியிடும் செய்தி தகவல்கள் நூற்றுக்கு நூறு வீதம் உண்மையானது என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

*இணையத்தளத்தில் சேர்த்துக் கொள்ளும் படம் மாற்றி வடிவமைக்கப்படலாகாது.

*இணையத்தளத்தின் ஆசிரியர் ஒரு தவறான செய்தியை வெளியிட்டோம் என்று தெரிந்து கொண்டால் அதை திருத்தி மீண்டும் செய்தியில் சேர்த்துக் கொண்டு இதனால் பாதிக்கப்பட்டவரிடம் மன்னிப்பும் கேட்க வேண்டும்.

*ஒரு செய்தி தொடர்பாக இதனால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் நிலைப்பாட்டை இணையத்தளத்திற்குத் தெரிவிப்பதற்கு நியாயபூர்வமான சந்தர்ப்பத்தை அளிக்க வேண்டும். ஒருவரின் மதிப்புக்கும் உணர்வுக்கும் இரகசியத் தன்மைக்கும் ஏற்புடைய வகையில் இணையத்தளங்கள் நடந்து கொள்ள வேண்டும். *சமூகப் பிரச்சினைகளைப் பொறுத்தவரை வன்முறைகள், கலவரங்கள், போதைப்பொருள் பாவனை, சித்திரவதை, மற்றவர்களை வேதனைப்படுத்தி இன்பம் காணுதல், பாலியல் ரீதியிலான தரக்குறைவான படங்களையும் தகவல்களையும் வெளியிடாமல் இணையத்தளங்கள் அவதானமாக செயற்பட வேண்டும்.

*குற்றச்செயல்கள் பாலியல் ரீதியிலான குற்றச் செயல்கள் சிறுவயதினர் மீதான சட்டக்கோவையின் கீழ் சுமத்தப்படும் வழக்குகள் ஆகியவற்றை பொறுத்தவரை சம்பந்தப்பட்டவர்களின் பெயர்களை வெளியிடுவதை குறிப்பாக 16 வயதிற்குட்பட்டவர்களின் பெயர்களைத் தவிர்க்க வேண்டும்.

*ஒருவரின் இன, சாதி, மத பால் நிலை அல்லது அவரின் வலது குறைவு தன்மை, மனோநிலை பாதிப்பு போன்றவற்றை இணையத்தளத்தில் அறிவிப்பதும் தவிர்த்துக் கொள்ளப்பட வேண்டும்.

*தற்கொலை சம்பவங்கள் பற்றி அறிவிக்கும் போது ஒருவர் எவ்விதம் தற்கொலை செய்து கொண்டார் போன்ற சம்பவங்களை தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

‘ *ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கை குடும்பம் அவரது இல்லம் அவரது உடல் நிலை பற்றிய செய்திகளை வெளியிடுவதையும் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

*சிறு வயதினர் தங்கள் பாடசாலை காலத்தை மகிழ்ச்சியுடன் கழிப்பதற்கு அநாவசியமான இடையூறுகளை ஏற்படுத்துவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

*தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு தடை செய்த இணையத்தளங்கள் மற்றும் நீதிமன்றத்தின் உத்தரவின் படி தடை செய்யப்பட்ட இணையத்தளங்கள், தரங்குறைந்த பாலியல் உணர்வைத் தூண்டும் படங்கள் பிரசுரிக்கும் இணையத்தளங்களுடன் எவ்வித தொடர்பும் இருக்கலாகாது.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: