மண்டைதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணத்தை வதிவிடமாகவும் கொண்ட இராமநாதன் கனகநாதன் அவர்கள் 20-01-2012 வெள்ளிக்கிழமை அன்று காலமானார், அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்தியலிங்கம் இராமநாதன், வியாழாட்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கந்தையா சபாபதிபிள்ளை செல்லம்மா தம்பதிகளின் அருமை மருமகனும், கமலாதேவி அவர்களின் அன்புக் கணவரும், தேவிகா(கனடா), கார்த்திகா(நோர்வே), காஞ்சனா(இலங்கை), கல்பனா(இந்தியா), காலஞ்சென்ற ஜனகன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,ஸ்ரீகரன்(கனடா), வேல்மன்னன்(நோர்வே), சுதன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும், சிந்துஜா, (கனடா), சாதுஜன் (கனடா), விதுசன் (கனடா), சுடரினி, கேதாரன், ஆகியோரின் பாசமிகு பேரனும், இராஜேஸ்வரி, யோகேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகோதரரும், கனகசபாபதி(இளைப்பாறிய A.A.D மன்னார் மாவட்டம்), ரத்தினகுமார்(கனடா), விஜயகுமார்(இலங்கை), ஜெயகுமார்(சுவிஸ்), உதயகுமார்(சுவிஸ்) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின், இறுதிக்கிரியைகள் 23-01-2012 திங்கட்க்கிழமை அன்று இலக்கம் 106, பொற்பதி வீதி, கொக்குவில் கிழக்கில் நடைபெற்று, பின்னர் கொக்குவில் கிழக்கு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். |
துயர்பகிருகின்றோம்
திரு இராமநாதன் கனகநாதன் அவர்களின் மரணசெய்தி அறிந்தோம்
அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிராத்தித்து ,அன்னாருக்கு எமது
அஞ்சலியையும் அவர் சார்ந்த குடும்ப உறவுகளுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்து கொள்கின்றோம்
மண்டைதீவு மக்கள் அபிவிருத்தி ஒன்றியம் சுவிஸ்.
திரு இராமநாதன் கனகநாதன் அவர்களின் மரணசெய்தி அறிந்து மிகவும் கவலை அடைந்தோம்.
அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய வெப்பந்திடல் ஸ்ரீ முத்துமாரி அம்மனை பிராத்தித்து ,அன்னாருக்கு எமது அஞ்சலியையும் அவர் சார்ந்த குடும்ப உறவுகளுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களையும், அன்னாரின் துணைவியார் அவர்கட்கும் பிள்ளைகள் அனைவருக்கும் மிகவும் ஆழ்ந்த அனுதாபங்களையும் ஆறுதல்களையும் தெரிவித்து கொள்கின்றோம்.
கந்தையா சிவபிரகாசம்(ஆசிரியர்)
குடும்பத்தினர்.
கண்ணீர் அஞ்சலியும் துயர் பகிர்வும்
இராமநாதர் கனகநாதன் அவர்களின் மரணச் செய்தி அறிந்து துயருறும் இவ்வேளையில் கண்ணீர் அஞ்சலிகளையும் காணிக்கை ஆக்குகின்றோம்.
அன்னாரின் மனைவி ,பிள்ளைகள் ,சுற்றத்தாருடன் நாமும் இணைந்து துயர்பகிர்வதோடு அவரின் ஆத்மா சாந்தியடைய இறை அருளளை வேண்டுகின்றோம்.
ரவி குடும்பம்
துயர்பகிருகின்றோம்
திரு இராமநாதன் கனகநாதன் அவர்களின் மரணசெய்தி அறிந்தோம்
அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிராத்தித்து , அவர் சார்ந்த குடும்ப உறவுகளுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்து கொள்கின்றோம்
இ……
அன்னலிங்கம் குடும்பத்தினர்
[…] இராமநாதன் கனகநாதன் அவர்கள் […]