• ஜனவரி 2012
  தி செ பு விய வெ ஞா
  « டிசம்பர்   பிப் »
   1
  2345678
  9101112131415
  16171819202122
  23242526272829
  3031  
 • பதிவுப் புள்ளிவிவரங்கள்

  • 1,128,264 hits
 • சகோதர இணையங்கள்

 • Advertisements

மண்டைதீவுச் சிறுவனுக்கென சேகரிக்கப்பட்ட நிதி வந்து சேராததால் சிகிச்சைகள் தாமதம்! December 29, 2011,

மண்டைதீவுச் சிறுவனுக்கென சேகரிக்கப்பட்ட நிதி வந்து சேராததால் சிகிச்சைகள் தாமதம்! December 29, 2011, 11:24 PM வன்னிப் பெருநிலப்பரப்பில் இடம்பெற்ற கொடிய போரினால் மண்டைதீவைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் உடல் முழுவதும் எரிகாயங்களுக் குள்ளாகியிருந்தான்.அவனது மருத்துவச் செலவுக்காக எமது இணையத்தளம் ஊடாக புலம்பெயர் வாழ் மண்டைதீவு மக்களிடம் இருந்து நிதி சேகரித்ததுமண்டைதீவு அபிவிருத்தி ஒன்றியம் சுவிஸ் என்ற அமைப்பு.இருந்தும் சேகரிக்கப்பட்ட நிதியிலிருந்து அச் சிறுவனின் மருத்துவச் செலவுக்கு இதுவரைக்கும் 50 ஆயிரம் ரூபாய்தான் அனுப்பப்பட்டிருப்பதாக அச் சிறுவனின் சிறியதாய் தெரிவித்துள்ளார்.

மிகுந்த பண வறுமைக்கும் மத்தியில் தாயையும் தந்தையும் இழந்த மேற்படி சிறுவனின் மருத்துவச் செலவைத் தான் தனது நகைகள் மற்றும் இதர பொருட்களை விற்றே மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தார்.

அத்துடன் மண்டைதீவு மக்கள் அபிவிருத்தி ஒன்றியம் சுவிஸ், தாங்கள் இச் சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கவில்லை எனவும் தங்கள் மேல் மேற்படி ஒன்றியம் குற்றஞ்சாட்டியுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

எனவே யாருடைய கருத்துக்களையும் செவிமடுக்காது, நேரடியாக உங்கள் ஒன்றியத்தின் பிரதிநிதிகளை அனுப்பி தங்கள் நிலைமைகளை பார்வையிடுமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதேவேளை இச் சிறுவனின் மருத்துவச் செலவுக்காக வேண்டி எமது இணையத்தளத்தில் 09.01.2011 ஆம் திகதி விளம்பரமாகப் பிரசுரிக்கப்பட்டு நிதிச் சேகரிப்புக்கள் முன்னெடுக்கப்பட்டு வந்தது.

கிட்டத்தட்ட ஒரு வருட காலம் நெருங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இருந்தும் இதுவரைக்கும் சேகரிக்கப்பட்ட நிதி முழுமையாக மேற்படி சிறுவனின் சிகிச்சைக்காகச் சென்றடையவில்லை.

மிகுந்த கஷ்டத்தின் மத்தியில் அனைத்து மருத்துவத் தேவைகளும் தனியாரிடம் மேற்கொள்ளும் இவர்களுக்கு நிச்சயமாக நிதியுதவி தேவைப்படும்.

வாரத்தில் இருமுறை கொழும்புக்குப் பயணம் செய்தே சிறுவனுக்கான சிகிச்சை அளிக்கப்படுவதாகவும், பயன்படுத்தப்படும் மருந்துகள் ஒவ்வொன்றும் ஆயிரம் ரூபாய்களுக்கு மேல்தான் எனவும் சிறுவனின் சிறியதாயாரினால் தெரிவிக்கப்பட்டது.

எனவே சேகரிக்கப்பட்ட நிதி இச் சிறுவனின் மருத்துவத் தேவைக்காக அனுப்பி வைக்குமாறு அவர்களினால் கோரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

மேற்படி சிறுவனுக்கான சிகிச்சைகள் எவ்வித தடங்களுமில்லாமல் நடைபெற்று வருகின்றமையை நாம் நேரில் கண்டறிந்துள்ளோம்.

எனவே அச் சிறுவனுக்காகச் சேகரிக்கப்பட்ட நிதியை அவர்களுக்கு அனுப்பி வைப்பதுதான் தற்போதைய சூழ்நிலையில் அதி முக்கியம் என்பதையும் எமது இணைய செய்திப் பிரிவு தகுந்த ஆதாரங்களுடன் உறுதிப்படுத்துகின்றது.

தீவகன்.


இதேவேளை தற்போது இவர்களுக்கென சேகரிக்கப்பட்ட நிதி மருத்துவச் சிகிச்சையைப் பூர்த்தி செய்யப் போதாத நிலையில் ஏனையவர்கள் நிதியுதவி செய்ய விரும்பினால்,

இலங்கை வங்கி,

திருநெல்வேலிக் கிளை,

வங்கி இலக்கம்- 70059572 என்ற வங்கிக்கு அனுப்பி வைக்க முடியும்.

ஆதாரங்களும், அச் சிறுவனின் சிறியதாயின் நேர்காணலும் மற்றும் சிறுவனுக்காக நிதி அனுப்பி வைத்தவர்களின் பெயர் விபரங்களும் கீழே இணைக்கப்பட்டுள்ளன.

01. மண்டைதீவு மக்கள் அபிவிருத்தி ஒன்றியம் சுவிஸ் 100,000.00 ரூபாய்
02. அல்லையூர்.கொம் (www.allaiyoor.com) 15,000.00 ரூபாய்
03. ஜனனி (சுவிஸ்) 100 SFR
04. சிவகுருநாதன் திசைரூபன் (கனடா) 100 டொலர்
05. சிற்றம்பலம் ஜெயசிங்கம் (கனடா) 100 டொலர்
06. ஏ.எஸ்.சோமசுந்தரம் (கனடா) 100 டொலர்
07. வைரவநாதன் தயாகரன் (கனடா) 100 டொலர்
08. பாலசுப்பிரமணியம் மகேந்திரதாஸ் (கனடா) 100 டொலர்
09. சின்னத்துரை ஜீவா (கனடா) 20 டொலர்
10. தனிநாயகம் சியாளினி (கனடா) 50 டொலர்
11. சிவகுருநாதன் நவரூபன் (கனடா) 100 டொலர்
12. தர்மலிங்கம் சபேசன் (கனடா) 100 டொலர்
13. குமாரவேலு சுந்தரேசன் (கனடா) 100 டொலர்
14. யோகநாதன் பிரதீபன் (கனடா) 100 டெலர்
15. செல்வக்குமார் ஜெயக்குமார் (கனடா) 100 டொலர்
16. வைகுந்தராஜா ரஜினிக்காந் (கனடா) 100 டொலர்
17. பஞ்சாச்சரம் கதிர்ச்செல்வன் (கனடா) 100 டொலர்
18. அருளானந்தம் சிறிரவீந்திரராஜா (பிரான்ஸ்) 100 ஈரோ
19. நாகராசா லிங்கதாசன் (ஜேர்மனி) 100 ஈரோ
20. சிதம்பரநாதன் மணிமாறன் (கனடா) 100 டொலர்
21. கந்தையா கதிர்காமநாதன் (ஜேர்மனி) 250 ஈரோ
22. குமாரலிங்கம் தவசீலன் (கனடா) 300 டொலர்
23. ஆனந்தநடராஜா தயாளன் (கனடா) 100 டொலர்
24. கணபதிப்பிள்ளை விநாயகரத்தினம் (கனடா) 50 டொலர்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: