பாதிப்பு வரும் பொது பழையவை மனதில் வரும், மீதிப்பு வரும் பொது சேமிப்பு தானா வருவது ஏனோ ???
(என் அலைபேசி ஓவியமும்,அதற்கான கிறுக்கலும்)
மூடியுள்ளவரை (முயற்சிக்காதவரை)
எல்லாம்
இருட்டுதான்.
கதவை திற
காற்று மட்டுமல்ல
வெளிச்சத்தோடு
விடியலும்
சேர்ந்து வரும்!
உன் இதழ்களை விரித்து வைக்காதே!
உன் இதழ்களை விரித்து
வைக்காதேடி
பூக்கள் என்றெண்ணி
ஈக்கள்
ஏமாறுகின்றன பார்!
தன் காலைக் கழுவிவிட!
- காலில் புத்தகம்
பட்டதற்காய்
கடவுளை மிதிச்சிட்டேன்னு
கவலைக் கொண்டு
தொட்டுக் கும்பிடுகிறவன்!
தன் காலைக்
கழுவிவிட
கூப்பிடுகிறான்
வேலைக்காரனை.
ஒவ்வொரு மனிதனின் வெற்றிக்குப் பின்னாலும்!
- உன் விரல் பற்றி
நடந்துதானே
என் முதுகு தண்டு
நிமிர்ந்தது!
- நீ தோளில் சுமந்து
காட்டிதானே
உலகம் என்னில்
விரிந்தது!
- வீட்டுக்குள்ளே
உலகம் கண்டேன்.
வெளியுலகம்
காட்டியவன் நீ!
- பாசத்தை தாயூட்ட
பக்குவத்தை நீயூட்ட
அன்பை அவள் பகிர
அறிவை நீ பகிர்ந்தாய்!
- பத்து மாதம் பாரம்
தாய் சுமந்தாள்
எமை வளர்த்தெடுக்க
இன்னமும் சுமக்கிறாய்
நீ பாரம்.
- நீ என்னை கருசுமந்து
பிரசவிக்காது
தாயுமானவன்!
- வெற்றிபெற்ற
மனிதருக்குப் பின்னால்
ஒரு பெண்ணிருப்பாள்
என்று
ஏடெழுதி போயினர்
ஏராளமானோர் !
உண்மை ஒன்றை
உரக்க சொல்வேன்
ஆணித்தரமாய்
அடித்து சொல்வேன்
ஒவ்வொரு மனிதனின்
வெற்றிக்குப் பின்னாலும்
ஒரு தந்தையின் பங்கு
நிச்சயம் உண்டு!
———————————————————————————————————————-
ஊர்ப்பாசம்!
- பிறந்த மண்ணில்
மழலையாய்
உருண்டு பிறண்டு
மண்ணை நக்கி
ருசித்தேனே!
- அந்த ருசிதான்
எம் ரத்தம் புகுந்து
உடலில் ஒட்டி
உறவாய் கலந்து
உயிரில் நிறைந்ததுவோ!
- பிறந்த ஊரின்
பெருமை பேசி
இருக்கும் ஊரை
மறந்தவனாய்
இருக்கின்றேன் எப்பொழுதும்!
- தொலைதூரப் பேருந்தின்
பெயர்ப்பலகை
கண்டால் கூட
வந்து சேருகிறது உறவு
நம்ம ஊரு வண்டியென்று!
- பிறந்த ஊரை
மிதித்து விட்டால்
நெஞ்சம் நிமிர்கிறது
செருக்கு கொண்டு
சொந்த ஊரென்று!
- வாழ்விக்கும் ஊரிலே
நல்வாழ்க்கை வாழும் போதும்
வறட்டு பிடிவாதமாய்
வந்து தொலைக்கிறது
சாகும் போது
சொந்த மண்ணில்தான்
சாக வேண்டுமென்று
ஊர்ப்பாசம்!
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்