மண்டைதீவு பூமாவடி பூம்புகார் ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலயத்தின் கும்பாபிசேகம் இன்று 07.07.2011 ஆம் திகதி நடைபெறவுள்ளதைத் தொடர்ந்து, நேற்று எண்ணெய்க்காப்புச் சாத்தும் நிகழ்வு நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து எதிர்வரும் திங்கட்கிழமை 11.07.2011 ஆம் திகதி பொங்கல் உற்சவமும் தீ மிதித்தலும் நடைபெறவுள்ளது. மண்டைதீவு, யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளிலிருந்து வருகை தந்த அம்பாள் அடியவர்கள் எண்ணெய்க் காப்புச்சாத்தும் நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர்.
அத்துடன் மேற்படி கும்பாபிசேக நிகழ்வுக்கும் பொங்கல் சேவைக்குமாக புலம்பெயர் வாழ் மண்டைதீவு மக்களிடமிருந்து சேமிக்கப்பட்ட நிதி மற்றும் நிதி அனுப்பியவர்களின் விபரங்களை கண்ணகை அம்மன் ஆலய பரிபாலன சபையினர் எமக்குக் கடிதம் மூலம் அனுப்பி வைத்துள்ளனர்.
Filed under: Allgemeines |
ஊர் பற்றுடன் பிரதேசவாதம் கருதாமல் உடனுக்குடன் செய்தி தரும் உங்கள் சேவையை
பாராட்டுகிறேன். தீய வினை நீங்கி நல்லன எல்லாம் அருள எல்லாம்வல்ல கண்ணகை அம்மன் அருள்
எண்டைக்கும் இருப்பதாக! . உங்கள் பணி தொடர வாழ்த்துகின்றேன்.
நன்றி