மண்டைதீவுப் பிரதேசத்தில் உள்ள இரு விளையாட்டுக் கழகங்களையும் இணைத்து சமூக விளையாட்டு விழா ஒன்று யு.என்.டி.பி. நிறுவனத்தின் அனுசரணையுடன் இன்று நடைபெற்றுள்ளது.
மண்டைதீவில் உள்ள புனித பேருதுருவானவர் விளையாட்டுக் கழகத்தையும் வான்மதி விளையாட்டுக் கழகத்தையும் இணைத்து நடத்தப்பட்ட இவ் விளையாட்டு விழாவுக்கு சமூக விளையாட்டு விழாத் தலைவர் ஜே.கிறிஸ்துநாயகம் தலைமை தாங்குகினார்.
அத்துடன் முதன்மை விருந்தினராக யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சில்வெஸ்திரி அலன்ரின், சிறப்பு விருந்தினர்களாக வேலணை பிரதேச செயலாளர் மு.நந்தகோபாலன், யு.என்.டி.பி. தலைமை அதிகாரி இ.சர்வானந்தா ஆகியோரும்,
கௌரவ விருந்தினர்களாக யு.என்.டி.பி. மண்டைதீவு திட்டப் பொறுப்பதிகாரி இ.இராஜ்குமார், வேலணை பிரதேச செயலக விளையாட்டுத்துறை உத்தியோகத்தர் இ.ச.யசிதரன், மண்டைதீவு ஜே-08 கிராம அலுவலர் ம.சசிகாந் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
Filed under: Allgemeines |
Thank you for posting the wonderful pictures of the sports event in Mandaitivu. We are so happy to see these photos of our homeland sports club. Please continue your good work. Please upload any videos of this event. Thank You.
நண்றி நண்றி இதனைனப்பார்த்ததில்மிக்கமகிழ்ச்சி
உங்கள்சேவை எப்போதும்தொடர ஏங்கள்வாழ்த்துக்கள்.
நண்றி