மண்டைதீவுப் பிரதேசத்தில் உள்ள இரு விளையாட்டுக் கழகங்களையும் இணைத்து சமூக விளையாட்டு விழா ஒன்று யு.என்.டி.பி. நிறுவனத்தின் அனுசரணையுடன் நடைபெறவுள்ளது.
இவ் விளையாட்டு விழா எதிர்வரும் 2011.06.28 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அன்று பிற்பகல் 2 மணிக்கு மண்டைதீவு முதலாம் வட்டாரத்தில் அமைந்துள்ள துறைமுக விளையாட்டு மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
மண்டைதீவில் உள்ள புனித பேருதுருவானவர் விளையாட்டுக் கழகத்தையும் வான்மதி விளையாட்டுக் கழகத்தையும் இணைத்து நடத்தப்படும் இவ் விளையாட்டு விழாவுக்கு சமூக விளையாட்டு விழாத் தலைவர் ஜே.கிறிஸ்துநாயகம் தலைமை தாங்குகின்றார்.
அத்துடன் முதன்மை விருந்தினராக யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சில்வெஸ்திரி அலன்ரின், சிறப்பு விருந்தினர்களாக வேலணை பிரதேச செயலாளர் மு.நந்தகோபாலன், யு.என்.டி.பி. தலைமை அதிகாரி இ.சர்வானந்தா ஆகியோரும்,
கௌரவ விருந்தினர்களாக வேலணை பிரதேச செயலகத்தின் திட்டமிடல் பணிப்பாளர் திருமதி தி.மீரா, யு.என்.டி.பி. மண்டைதீவு திட்டப் பொறுப்பதிகாரி இ.இராஜ்குமார், வேலணை பிரதேச செயலக விளையாட்டுத்துறை உத்தியோகத்தர் இ.ச.யசிதரன், மண்டைதீவு ஜே-08 கிராம அலுவலர் ம.சசிகாந் மற்றும் மண்டைதீவு ஜே-07,09 கிராம அலுவலர் இ.ரமேஸ் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்