• மே 2011
    தி செ பு விய வெ ஞா
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    3031  
  • பதிவுப் புள்ளிவிவரங்கள்

    • 1,215,462 hits
  • சகோதர இணையங்கள்

மண்டைதீவிலிருந்து எதிர்காலத்தில் மக்கள் வெளியேறும் நிலை தோன்றலாம்-யாழ் பத்திரிகை வலம்புரி

யாழ்ப்பாணத்திற்கு மிக அண்மித்திருக்கின்ற மண்டைதீவின் நிலைமை மிகவும் கவலைக்குரியது. அதுபற்றி இவ்விடத்தில் பல தடவைகள் பிரஸ்தாபித்திருந்தும் பலன் ஏதும் இல்லை. மண்டைதீவுக்குள் கடல் நீர் வருவதை தடுக்கும் மிக நீண்ட அணைக்கட்டு உடைந்து போனதால் கடல்நீர் உள்நுழைய மண்டைதீவின் பயிர் செய்நிலங்களும் கிணற்று நீரும் உவராகுவது பற்றி இவ்விடத்தில் குறிப்பிட்டிருந்தோம்.

அணைக்கட்டை புனரமைப்பது தொடர்பில் எந்த நடவடிக்கையும் இதுவரை ஆகவில்லை. என்ன செய்வது, மேடையில் ஏறி ஒலிவாங்கிக்கு முன்னால் எங்கள் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் ஆற்றும் உரையைக் கேட்டால் ஆகா! இவர்கள் அல்லவோ பசுமைப் புரட்சியின் பிதாமகர்கள் என்று நினைக்கும் அளவுக்கு அவர்களின் பேச்சின் சுவை இருக்கும். ஆனால் செயல் எதுவுமே கிடையாது. பல வருடங்களாக மண்டைதீவு அணைக்கட்டுப் பற்றி இவ்விடத்தில் குறிப்பிட்டு களைத்து விட்ட நிலையில் மீண்டும் ஒரு தலையிடி ஆரம்பித்து விட்டது.

ஆம், மண்டைதீவின் கிழக்குப் பகுதியிலுள்ள குடியிருப்புக் காணிகளும் பயிர்செய் நிலங்களும் கடற்படையினரால் சுவீகரிக்கப்பட்டு அங்கு கடற்படைக்கான கட்டுமானப்பணிகள் நடந்து முடிகின்றன.

மண்டைதீவு உயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டிருந்த காலத்தில், அதன் ஒரு பகுதிக்குச் செல்வதற்கு பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படாத நிலையில், மேற்படி நிலங்களை தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்த கடற்படையினர் இப்போது அதனைத் கபளீகரம் செய்துள்ளனர்.

அழகிய – சிறிய இக்கிராமத்தில் இருக்கக் கூடிய பயிர்செய் நிலங்களையும் குடியிருப்பு நிலங்களையும் கடற்படையினர் தமதாக்கிக் கொள்ளும்போது மக்களின் பயன்பாட்டிற்கான நிலத்தின் அளவு குறைவடைந்து விடுகின்றது.

இதற்கு மேலாக, மண்டைதீவில் கடற்படையினர் நிரந்தர முகாமை அமைத்து அங்கு தங்குவதும் உறுதியாகியிருப்பதனால் மண்டைதீவு மக்களின் வாழ்வியல் அச்சம் நிறைந்ததாக இருப்பதை எவரும் மறந்துவிடக் கூடாது.

இத்தகைய அச்ச நிலைமைக்கான கள நிலைமை நீடிக்குமாயின் – அங்கிருந்து மக்கள் வெளியேறும் பெருந்துயர் எதிர்காலத்தில் நடைபெறக் கூடிய சாத்தியம் உண்டு. எனவே இது விடயத்தில் காலம் கடத்தாத அதிரடி நடவடிக்கை அவசியம். நடக்குமா?

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: