கடந்த கால யுத்த்தின் போது மண்டைதீவு கண்ணகை அம்மன் ஆலயத்தின் கூரைப் பகுதிகள் கடுமையாகச் சேதமடைந்திருந்தது.
இந் நிலையில் மேற்படி ஆலயத்தின் கூரைப் பகுதியினை புனரமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுத் தற்போது நிறைவு பெற்றிருக்கும் வேளையில் இன்னும் பல திருப்பணி வேலைகள் நடைபெற வேண்டிஉள்ளது அதற்கு கண்ணகை அம்மன் அடியார்கள் நிதி உதவி செய்யவேண்டிய சூழ்நிலையும் அங்கு காணப்படுவது இங்கு குறிப்பிடதக்கது.மண்டைதீவின் முதலாவது பொது கோவில் கண்ணகை அம்மன் என்பதும் யாவரும் அறிந்ததே.
திருப்பணிகள் யாவும் முடிவு பெற்று இந்த வருடம் கண்ணகை அம்மன் ஊர்வலமும் பொங்கல் விழாவும் சிறப்பாக செய்ய வேண்டும் என்று கண்ணகை அம்மன் பரிபாலன சபையும் மண்டைதீவு மக்களும் உறுதிகொண்டுள்ளது திண்ணமாக தெரியவருகின்றது.
அண்மையில் கண்ணகை அம்மன் ஆலயத்துக்கான புதிய பரிபாலன சபை ஒன்று தெரிவு செய்யப்பட்டமை நீங்கள் அறிந்ததே.
புகைப்படங்கள் தீவகன்.
Filed under: Allgemeines |
எம் இனிய வாழ்வுக்கு அருள் தரும் முத்துமாரி
அம்மனின் திருப்பணி வேலைகள் இனிதே நடக்க
எம் இனிய வாழ்த்துக்கள்