
இவ்வாறு கொண்டு வரப்படும் குடிநீர் மண்டைதீவுப் பகுதிக்குள் தெரிவு செய்யப்பட்ட 10 பொது இடங்களில் நீர்த் தாங்கிகள் அமைக்கப்பட்டு வழங்கப்படும் என நீர்ப்பாசனத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
இது இவ்வாறிருக்கத் தற்போது சொந்தமாக தங்கள் வீடுகளுக்கும் குழாய் மூலம் குடிநீரைப் பெற்றுக் கொள்ள முடியும் என மேற்படி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆரம்பக் கட்டணமாக சமுர்த்தி திட்டத்தின் கீழ் உள்வாங்கப்பட்ட பயனாளிகள் 5500 ரூபாய் செலுத்தும் பட்சத்திலும் ஏனையவர்கள் 15500 ரூபாய் செலுத்தும் பட்சத்திலும் மேற்படி குடிநீரைச் சொந்தமாக தமது வீடுகளுக்குப் பெற்றுக் கொள்ள முடியும்.
அத்துடன் மாதாந்தம் குடிநீரைப் பயன்படுத்தப்படும் அளவுக்கேற்ப மாதாந்தக் கட்டணங்கள் அறவிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்