Filed under: Allgemeines | Leave a comment »
அன்னையற்காக ஒரு நாள்
அன்னையற்காக ஒர்நாளை அகிலமே உணர்ந்தபோதும்
கண்ணியம் நிறையவில்லை கவலைக்கு இடம்தானே
பேணவேண்டி பெண்ணியத்தை பேணாது மறப்பது ஏனோ ?
பேருக்கு ஒர்தினமா அவர்கள் பெருமை கொள்ளவேண்டாமா ?
நம்வாழ்வுக்காய் தேய்ந்தவரை நாம்மறந்து விடலாமோ ?
தாய்மைக்காய் அடைந்ததுன்பம் தரணியும் தாங்காது
அந்தவேதனையின் உச்சத்தை ஒரேநேடியில் மறந்தவரை
வாடி மனம் ஓடிய வயோதிபத்தில் விடலாமா
தேடி அவர்க்கு உதவி பட்டகடன் தீர்க்காதோர்
தெரிந்தும் தவறிளைதோர் பரிந்து உரைகள்
செய்து ஏனும் பாதங்கள் கழுவி நிற்போம்
ஒடுக்குமுறையால் கூட இன்றும் பல
அன்னையர்கள் ஒட்டு துணியுடனே
ஓரம்கட்டிய முகாமில் மனம் நிறைந்த வேதனை உடனும்
குணம் குறைந்த கொடுங்கோலும் குறையாதபோதும்
அகிலத்து அன்னையருக்கும், அயலுறவு அன்னையருக்கும்
அகிலத்தில் எம்மை பண்போடும் பணிவோடும் வாழ
வழி சமைத்த எம் மண்டைதீவு அன்னையருக்கும்
வாழ்த்துகள் பல வாயார வாழ்த்திடுவோம்.
Filed under: Allgemeines | Leave a comment »