மண்டைதீவு கிழக்குப் பகுதியில் உள்ள மக்களின் தோட்டக் காணிகளைக் கடற்படையினர் கையகப்படுத்தி அதில் தமது முகாம்களை நிறுவி வருகின்றனர்.
தற்போது கடற்படையினர் முகாமிட்டிருக்கும் பகுதிகள் மக்கள் குடியிருப்புப் பகுதிகள் என்பதால் அதனை உரியவர்களிடம் ஒப்படைக்கும் பொருட்டே இப் பகுதிகளில் முகாம் அமைத்து வருகின்றனர்.
இம் முகாம் அமைக்கும் பணிகள் நிறைவு பெற்றதும் தற்போது உள்ள அனைத்துப் பகுதிகளும் மக்களிடம் கையளிக்கப்படும் எனக் கடற்படை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன் தாம் மேற்படி காணிகளில் முகாம் அமைக்கப் போவதாகக் கிராம அலுவலருக்கு அறிவித்திருந்ததுடன், உரிமையாளர்களை காணியின் உறுதியுடன் தங்களை வந்து சந்திக்குமாறும் கடற்படையினர் அறிவித்திருந்தனர்.
எனினும் எவரும் இக் காணிகளுக்கு உரிமை கோராத நிலையில் இம் முகாம்களைக் கடற்படையினர் அமைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
தற்போது கடற்படையினரால் முகாம் அமைக்கப்பட்டு வரும் காணிகளின் உரிமையாளர்கள் முகாம் அமைக்கும் பணியைத் தடுக்க பல வழிகளிலும் முயற்சிகள் மேற்கொண்டிருந்தும் பயனளிக்கவில்லை.
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்