• மே 2011
  தி செ பு விய வெ ஞா
   1
  2345678
  9101112131415
  16171819202122
  23242526272829
  3031  
 • பதிவுப் புள்ளிவிவரங்கள்

  • 1,269,977 hits
 • சகோதர இணையங்கள்

சர்வதேச புகையிலை எதிர்ப்பு தின சிறப்புக் கட்டுரை!!!

 

கலங்களால் உருவாக்கப்பட்ட உடலமைப்பிற்கு கடவுளால் ஆறறிவு ஊட்டப்பட்டு தோற்றம் பெற்றவர்களே மனிதர்களாகிய நாம். அந்த கலங்களுக்கு நெருப்பை ஊட்டும் நெஞ்சங்களுக்கு விழிப்புணர்வூட்டும் விதமாக உலக சுகாதார நிறுவனத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டு உலகெங்கும் மே 31 ஆம் நாளன்று அனுஷ்டிக்கப்படும் தினமே இப்புகையிலை எதிர்ப்பு தினமாகும் Continue reading

18 ஆவது சிராத்ததினம்

கந்தையா சிவப்பிரகாசம் ஆசிரியர்.(31.05.2011)

இன்றும் எம்முடன் இருப்பதுபோல் இருக்க ஈர்ஒன்பது ஆண்டுகள் எமைப்பிரிந்ததை உணர்த்தும் சிராத்ததினம் வந்து இவ்வுலகில் நீங்கள் இல்லாததை உணர்த்துவதால் ஆழாத்துயரத்தில் மீளாதபோதும் அப்பா உங்கள் தெய்வ நம்பிக்கையும் நீங்கள் விட்டுச்சென்ற உங்களால் விரும்பிய அனைத்து பணிகளையும் உங்கள் நினைவகலாது இருக்க நாமும் செய்து நிற்கின்றோம். அப்பா உங்களது அழியாநினைவுகளோடு வாழ்ந்து கொண்டிருக்கும் பிள்ளைகள் ,மருமக்கள் ,பேரப்பிள்ளைகள் எல்லோரும் இணைந்து இறைவனை பிராத்திக்கின்றோம்.

மெழுகுச்சிலை அருங்காட்சியகம் பார்த்து ரசித்தவை!

மெழுகுச்சிலை அருங்காட்சியகம்(படங்கள் இணைப்பு)
லண்டன் மற்றும் பாரிஸ்யில் தான் மெழுகுச்சிலை அருங்காட்சியகம் உள்ளது என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். மகாராஷ்டிரா மாநிலத்தில் இந்திய கிராம வாழ்க்கையை பிரதிபலிக்கும் சிற்பங்கள் மிகவும் அழகாக தத்ருபமாகவடிவமைக்கப் பட்டுள்ளது Continue reading

இதய நோய்களை அதிகரிக்கும் கொலஸ்ட்ரோலை கண்டுபிடித்து விஞ்ஞானிகள் சாதனை

இருதய நோய்க்கான வாய்ப்புக்களை அதிகரிக்கக் கூடிய அல்ட்ரா பேட்(ultra bad) கொலஸ்ட்ரோலை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
சாதாரணமாக இரத்தத்தில் காணப்படும் கெட்ட கொலஸ்ட்ரோலை விட இது தடிப்பானது. இது இருதயத்துக்கான இரத்த நாளங்களைப் பெரிதும் பாதிக்கக் கூடியது. Continue reading

ஆபத்தின் அதிசயங்கள் அன்பனின் வேண்டுகோளுக்கு இணங்கி

யோகரத்தினம் விஜயகாந் இறைபதமடைந்துவிட்டார்

மண்டைதீவைப்பிறப்பிடமாகவும் நாகபடுவானை வசிப்பிடமாகவும் கொண்ட யோகரத்தினம் விஜயகாந் அவர்கள் 27.05.2011 வியாழக்கிழமை அன்று இறைபதமடைந்துவிட்டார்.

Continue reading

மரண அறிவித்தல் திருமதி கார்த்திகேசு நாகம்மா

திருமதி கார்த்திகேசு நாகம்மா
பிறப்பு : 15 மார்ச் 1930 — இறப்பு : 25 மே 2011
 மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு மடத்துவெளியை வசிப்பிடமாகவும் கொண்ட கார்த்திகேசு நாகம்மா அவர்கள் 25-05-2011 புதன்கிழமை அன்று புங்குடுதீவில் காலமானார். Continue reading

மண்டைதீவிலிருந்து எதிர்காலத்தில் மக்கள் வெளியேறும் நிலை தோன்றலாம்-யாழ் பத்திரிகை வலம்புரி

யாழ்ப்பாணத்திற்கு மிக அண்மித்திருக்கின்ற மண்டைதீவின் நிலைமை மிகவும் கவலைக்குரியது. அதுபற்றி இவ்விடத்தில் பல தடவைகள் பிரஸ்தாபித்திருந்தும் பலன் ஏதும் இல்லை. மண்டைதீவுக்குள் கடல் நீர் வருவதை தடுக்கும் மிக நீண்ட அணைக்கட்டு உடைந்து போனதால் கடல்நீர் உள்நுழைய மண்டைதீவின் பயிர் செய்நிலங்களும் கிணற்று நீரும் உவராகுவது பற்றி இவ்விடத்தில் குறிப்பிட்டிருந்தோம் Continue reading

மாதாந்தக் கொடுப்பனவு வழங்கிய கனடா ஒன்றியத்திற்கு நன்றி தெரிவிப்பு

மண்டைதீவு மதிஒளி முன்பள்ளி ஆசிரியைக்கு அரசாங்கத்தினால் நிரந்தர நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இவர் உட்பட இரு ஆசிரியைகளுக்கான மாதாந்தக் கொடுப்பனவை மண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா இதுவரை காலமும் வழங்கி வந்தது. இது இவ்வாறிருக்க இரண்டு ஆசிரியைகளில் ஒருவருக அரசாங்கம் நிரந்தர நியமனம் வழங்கி மாதாந்தம் 5 ஆயிரம் ரூபாய் சம்பளமாக வழங்கவுள்ளது. Continue reading

மண்டைதீவில் மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் மூவர் காயம்!

மண்டைதீவு  பிரதான வீதியும் மண்டைதீவு முத்துமாரி அம்மன் வீதியும் சந்திக்கும் சந்தியில்  இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்துக்குள்ளானது

Continue reading