• ஏப்ரல் 2011
    தி செ பு விய வெ ஞா
     123
    45678910
    11121314151617
    18192021222324
    252627282930  
  • பதிவுப் புள்ளிவிவரங்கள்

    • 1,228,359 hits
  • சகோதர இணையங்கள்

மாணிக்க தருவே ஜனகா

கண்ணகை அம்மன் பரிபாலன சபையினர் தெரிவு

மண்டைதீவு அனைத்து மக்களின் காவல் தெய்வமாக விளங்கிய கண்ணகை அம்மன்
ஆலயம் கடந்த 20 வருடங்களாக கரையோடி கிடந்தது நீங்கள் அறிந்ததே.கடந்த வருடம்
மண்டைதீவு வாழ் மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க  காவல்படையினரின் சிறிய கண் 
சிமிட்டலுக்கு அமைய ஒரு சிறிய பொங்கல் விழா நடத்த முடிந்ததும் உங்கள் கண்களில் 
இன்றும் அழியாவிளக்காய் இருக்கும் என்பது அழிக்கமுடியாத உண்மை. Continue reading

மண்டைதீவு முகப்புவயல் கந்தசுவாமி ஆலய தர்மகர்த்தா இறைவனடி சேர்ந்தார்.

 
மண்டைதீவு முகப்புவயல் கந்தசுவாமி ஆலயத்தின் தர்மகர்த்தா திருநீலகண்டர் பஞ்சாச்சரம் அவர்கள் இன்று கனடாவில் இறைபதம் எய்து விட்டார்.இவர் சென்ற ஆண்டு சொந்த ஊரான மண்டைதீவுக்குத் திரும்பி மண்டைதீவு முகப்புவயல் கந்தசுவாமி ஆலயத்தின் திருப்பணிகளைச் செய்து முடித்ததுடன் கும்பாபிசேகமும், தேர் வெள்ளோட்டத்தினை சிறப்பாக நடத்தி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது Continue reading

புகைப் பிடிக்க வேண்டாம் என்பதற்கான சில ஆதாரங்கள்!!!

இந்த புகைப்படங்களை பார்த்த பின்பு யாரும் புகைப் பிடிக்க மாட்டார்கள்.அவ்வாறு யாராவது புகைப் பிடிப்பீர்களே ஆனால், நிச்சயம் நீங்கள் மனநல மருத்துவரை சந்திப்பது நல்லது.

Continue reading

சித்திரா பௌர்ணமியும் அதன் சிறப்பும்

 

சித்திரா பௌர்ணமி என்பது; சித்திரை மாதம் பௌர்ணமி திதியில்; சித்திரை நட்சத்திரமும் கூடி வருவருவதால் சித்திரா பௌர்ணமி என அழைக்கப் பெறுகின்றது. மாதத்தின் பெயரும் நட்சத்திரத்தின் பெயரும் ஒன்றாகி (சந்திரன் சித்திரை மாதத்தில் சித்திரை நட்சத்திரத்தில் சஞ்சரிக்கையி), சூரியன் உச்ச பலம் பெறும் மேட இராசியில் (சித்திரைமாதத்தில்) வரும் பௌர்ணமி தினம் சிறப்புப் பெறுகின்றது Continue reading

கார்த்திகேய வித்தியாலய சுற்றுவேலி பணிகள் நிறைவுபெற்றுள்ளது

 

மண்டைதீவு மக்கள் அபிவிருத்தி ஒன்றியம் சுவிஸ் அமைப்பினரின்
வேண்டுகோளுக்கு இணங்க ,மண்டைதீவு சிவசக்தி இந்து இளைனர் மன்றத்தின் 
மேற்பார்வையில் ஆரம்பிக்கபட்ட மண்டைதீவு கார்த்திகேய வித்தியாலய 
சுற்றுவேலி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது நீங்கள் அறிந்ததே.
இன்று சுற்றுவேலி அடைக்கும் பணிகள் நிறைவு பெற்றுள்ளதை 
உங்களுக்கு அறியத்தருகின்றோம்.

தர்மங்கள் பல செய்து வாழ வாழ்த்துகின்றோம்!!!

நல்ல பெயர் பெற்று நாடு போற்ற வாழ்க!!!

அகாலமரணம்

திருமதி யசோகரன் அனுலா
அன்னை மடியில் : 24 செப்ரெம்பர் 1976 — ஆண்டவன் அடியில் : 2 ஏப்ரல் 2011
மண்டைதீவு 5ம் வட்டாரம், சிறுப்புலம், கந்தசாமி கோயிலடியை பிறப்பிடமாகவும், சுவீடனை வசிப்பிடமாகவும் கொண்ட யசோகரன் அனுலா அவர்கள் 02-04-2011 சனிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார். Continue reading

இரண்டு வயது சிறுமியின் ஆற்றலைப்பாருங்கள்

உலக வரைபடத்தில் சில நாடுகளை நாமே தேடும் நிலையில் இந்த இரண்டுவயது சிறுமியின் அறிவாற்றலைப்பாருங்கள்.

இன்னும் இங்கேயா இருக்கின்றீர்கள்….? Computerக்கு முன்னால் இருந்து நேரத்தை வீணடிப்பதை விட்டு எழுந்து, உங்கள் சந்ததிகளுக்கு உபயோகமாக எதையாவது கற்பியுங்கள்!!

நன்றி.