
இந் நிலையில் மண்டைதீவு மதிஒளி முன்பள்ளி ஆசிரியர்கள் இருவருக்கும் மண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா மாதாந்தக் கொடுப்பனவை வழங்கி வருவதுடன் மண்டைதீவு புனித பேதுருவானவர் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு அங்கு கல்வி பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் வழங்கி வந்தனர்.
ஆனால் தற்போது மண்டைதீவு பேதுருவானர் முன்பள்ளி ஆசிரியர்களுக்கான சம்பளத்தை பெற்றோர்கள் வழங்காது புறக்கணித்து வருவதாக ஆசிரியர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இந் நிலை தொடரும் பட்சத்தில் மேற்படி முன்பள்ளியில் கல்வி கற்பிப்பதை நிறுத்தும் ஒரு துர்ப்பாக்கிய நிலைக்குத் தாங்கள் தள்ளப்படுவோம் என அங்கு கல்வி கற்பிக்கும் இரு ஆசிரியர்களும் தெரிவித்துள்ளனர்.
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்