• ஏப்ரல் 2011
  தி செ பு விய வெ ஞா
  « மார்ச்   மே »
   123
  45678910
  11121314151617
  18192021222324
  252627282930  
 • பதிவுப் புள்ளிவிவரங்கள்

  • 1,177,219 hits
 • சகோதர இணையங்கள்

 • Advertisements

மண்டைதீவு முகப்புவயல் கந்தசுவாமி ஆலய தர்மகர்த்தா இறைவனடி சேர்ந்தார்.

 
மண்டைதீவு முகப்புவயல் கந்தசுவாமி ஆலயத்தின் தர்மகர்த்தா திருநீலகண்டர் பஞ்சாச்சரம் அவர்கள் இன்று கனடாவில் இறைபதம் எய்து விட்டார்.இவர் சென்ற ஆண்டு சொந்த ஊரான மண்டைதீவுக்குத் திரும்பி மண்டைதீவு முகப்புவயல் கந்தசுவாமி ஆலயத்தின் திருப்பணிகளைச் செய்து முடித்ததுடன் கும்பாபிசேகமும், தேர் வெள்ளோட்டத்தினை சிறப்பாக நடத்தி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கதுமண்டைதீவு 07 ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருநீலகண்டர் பஞ்சாச்சரம் அவர்கள் 18.04.2011 அன்று கனடாவில் காலமாகிவிட்டார்.அன்னார் திரு.திருமதி திருநீலகண்டரின் அன்பு மகனும், பரமேஸ்வரியின் அன்புக் கணவரும், சாரதாதேவி (மண்டைதீவு), கோவைச்செல்வன் (மண்டைதீவு), கதிர்ச்செல்வன் (கனடா), சிவபாலன், மதியழகன், இளவழகன் (கனடா), இளஞ்செழியன் (பிரான்ஸ்), முருகபூபதி (ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு தந்தையாரும்,

காலஞ்சென்றவர்களான மகேஸ்வரன், மகாலிங்கம், உமாதேவி மற்றும் சுலோஜனாதேவி, சுபத்திராவதி, யோகராணி, சிவரூபி, விக்னேஸ்வரி, வசந்தரா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

உமாசங்கர், கார்த்திகா, பொதிகைச்செல்வன், தினேசன், மகீசன், கிருசான், மகிழினி, நிசாலினி, யதுர்சன், கம்சா, பிறம்சா, கஜனி, பாலகஜன், கௌசிகி, லோகீசன், கீர்த்தன், தனுசன், ஆகியோரின் பாசமிகு பேரனும், பானுஜனின் அன்புப் பூட்டனும் ஆவார்.

highlandfuneralhome:- 3280 Sheppard Avenue, E. Scarborough, ON  M1T 3K3  எனும் இடத்தில் சனி,ஞாயிறு மாலை 5 மணியிலிருந்து 9 மணிவரை அஞ்சலிக்காகப் பூதவுடல் வைக்கப்பட்டு திங்கட்கிழமை 25.04.2011 காலை 10 மணிக்கு அன்னாரது பூதவுடல் தகனக் கிரியைக்காக எடுத்துச் செல்லப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

தகவல்:

பிள்ளைகள்.


 

Advertisements

2 பதில்கள்

 1. துயர்பகிருகின்றோம்

  மண்டைதீவு 7 ம் வட்டாரத்தை சேர்ந்த திருநீலகண்டர் பஞ்சாச்சரம் அவர்களின் மரணசெய்தி அறிந்தோம்.

  அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிராத்தித்து ,அன்னாருக்கு எமது

  அஞ்சலியையும் அவர் தம் குடும்ப உறவுகளுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்து கொள்கின்றோம்

  மண்டைதீவு மக்கள் அபிவிருத்தி ஒன்றியம் சுவிஸ்

 2. யர்பகிர்வு
  மண்டைதீவு 7 ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும்,கனடா Scarborough ஐ வதிவிடமாகவும் கொண்ட திருநீலகண்டர் பஞ்சாட்சரம்
  அவர்களின் மரணச்செய்தி அறிந்தோம்.
  அவரது பிரிவால் துயருறும் குடும்பத்தாரினது துயரத்தில் நாமும்
  துயர் பகிர்ந்து கொள்வதோடு அவரின் ஆத்மா சாந்தியடைய
  இறைஅருள் வேண்டுகின்றோம் .
  அ .ஸ்ரீ ரவி
  குடும்பம் பிரான்ஸ்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: