மண்டைதீவு மதி ஒளி பாலர்பாடசாலையில் பணியாற்றிய ஆசிரியர்களின்
மாதாந்த ஊதிய கொடுப்பனவை கடந்த சில வருடங்களாக வழங்கி வந்த
ஜே ஆர் எஸ் (J R S )நிறுவனம் கடந்த டெசம்பர் மாதம்,
முதல் நிறுத்தியதோடு தனது முழுமையான பணியில் இருந்து
விலகிக் கொண்டுள்ளது.அதனால் பாதிப்பு அடைந்த
மாணவ மாணவிகளும் பெற்றோரும் ஆசிரியர்களும்
மாணவ மாணவிகளின் எதிர்கால முன்னேற்றத்தை கருத்தில்கொண்டு
மண்டைதீவு மக்களுக்கா உதவிட முன்வந்துள்ள மண்டைதீவு மக்கள்
ஒன்றியம் கனடா,மற்றும் மண்டைதீவு மக்கள் அபிவிருத்தி ஒன்றியம்
சுவிஸ். ஆகியவைக்கு தமது கோரிக்கைகளை முன்வைத்து இருந்தனர்.
மண்டைதீவு மதி ஒளி பாலர் பாடசாலையின் வேண்டுகோளுக்கு இணங்க
இப்பணியினை மண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா அமைப்பினர்
பொறுப்பு ஏற்றுக்கொண்டதுடன் தொடர்ந்து இப்பணியினை வழங்குவதாக
உறுதி அளித்ததோடு கடந்த மூன்று மாத ஊதிய கொடுப்பனவும் இன்று
31.03.2011 வழங்கி உள்ளார்கள்,
ஒரு மாத ஊதியகொடுப்பனவு 3000 ரூபாக்கள் என்ற அடிப்படையில் இரண்டு
ஆசிரியர்களுக்கும் மொத்தம் 18 .000 ரூபாக்கள் இன்று வழங்கப்பட்டதாக
மக்கள் ஒன்றியம் மண்டைதீவின் பொருளாளர் பொன்னம்பலம் சபாநாயகம்
அவர்கள் மண்டைதீவு இணையத்துக்கு தெரிவித்தார்..
மண்டைதீவு மக்களுக்கான ஒரு ஒன்றியத்தை முதலில் உருவாக்கிய பெருமை
கனடா வாழ் மண்டைதீவு மக்களுக்கே உரித்தானது என்பது இங்கு குறிப்பிடக்தக்கது.
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்