• திசெம்பர் 2010
    தி செ பு விய வெ ஞா
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    2728293031  
  • பதிவுப் புள்ளிவிவரங்கள்

    • 1,248,431 hits
  • சகோதர இணையங்கள்

”என்ர உடம்பில இருக்கிற புண் எப்ப சித்தி மாறும்” (படம் இணைப்பு)

 

உங்கள் தீவகன் இணையத்தின் ஊடாக மண்டைதீவு மக்கள் அபிவிருத்தி ஒன்றியம் சுவிஸ், சிறுவன் ஒருவனுக்கு உதவுமாறு தங்களிடம் கோரிக்கை ஒன்றை விடுத்திருந்தது.

 

அதனை அனைத்து உறவுகளும் பார்த்துள்ளீர்கள். பணமும் அன்பளிப்புச் செய்துள்ளீர்கள்.

 

ஆனால் அச் சிறுவனுக்குச் செய்யப்பட வேண்டிய மருத்துவத்துக்கான நிதி இதுவரையும் முற்றுப் பெறவில்லை. எனவே இதுவரை உதவிபுரியாத உறவுகள் அனைவரையும் உதவுமாறு கேட்டு நிற்கின்றோம்.

 

வெந்து கிடக்கும் அச் சின்னஞ்சிறு பாலகனின் உடலை சீர்செய்து அவனது வாழ்க்கையில் ஒரு சுபீட்சத்தை உருவாக்குங்கள்.

 

தனது உடல் பழைய நிலைக்குத் திரும்பும் என்ற நம்பிக்கையுடன் உங்களை நாடி வந்த அந்தப் பிஞ்சு உள்ளத்துக்கு உங்களாளான உதவிகளைச் சிறுதுளி பெருவெள்ளம் போல் செய்து அவனது எதிர்காலத்தைப் புனரமைக்க உதவி செய்யுங்கள்.

 

”என்ர உடம்பில இருக்கிற புண் எப்ப சித்தி மாறும்” என்று அவன் ஒவ்வொரு நாளும் கேட்கும் கேள்விக் கனையால் கண்ணீர் வடிப்பதைத் தவிர வேறு வழி தெரியாது தவிக்கிறது அவனது சிறிதாய்க் குடும்பம்.

 

அடுத்த நாள் உலை வைக்க அரிசிக்கு என்ன செய்வது என்று தெரியாத அந்தக் குடும்பம் ஆறு இலட்சத்துக்கு எங்கே போகும்?

 

சிந்தியுங்கள்!

உங்களின் சிறுதுளியே அவனுக்குப் பெருவெள்ளம், அதுவே அவனது எதிர்காலம் பெருவிருட்சமாக வளர அத்திபாரம்.

 

அத்துடன் இச் சின்னஞ்சிறு பாலகனின் வெந்த உடலை அதிக நாள் விளம்பரப்படுத்துவது எங்களுக்கு மிகுந்த வேதனையைத் தந்துள்ளது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: