நாட்டில் நடந்தேறிய உக்கிரயுத்தத்தில் எரிகாயத்தால் உருமாறிய பிஞ்சுக் குழந்தையின் தோல் மாற்று சிகிச்சைக்காய் உதவும் கரம் நீட்ட மண்டைதீவு மக்கள் அபிவிருத்தி ஒன்றியம் சுவிஸ் உடன் இணைந்து தோள்கொடுக்க அனைவரையும் அழைகின்றோம்.
மண்டைதீவு 6 ம் வட்டாரத்தை பிறப்பிடமாக கொண்ட பாலசிங்கம் அவர்களின் பேரன் தமிழன்பன் தன் தாயையும் தந்தையையும் (இவரின் தாய் தந்தையர் பெயர் தயாபரன்-பாலசுகந்தினி) இழந்து தனது அவையங்களையும் எரிகாயத்தின் மூலம் உருமாற்றம் பெற்ற நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கும் பச்சிளம் பாலகனுக்கு,
தோல் மாற்று சிகிச்சைக்காய் கருணையுள்ளம் கொண்ட மண்டைதீவின் பூர்வீகங்களும் உலகவாழ் தமிழ் உள்ளங்களும் உதவும் கரம் நிறைத்து உன்னத பணி செய்ய உள்ளத்தால் ஒன்று பட்டு உரிமையுடன் உதவ வாருங்கள் .
பாலகனின் சிகிச்சைக்கான செலவு ஆறு லட்சம் ரூபாக்கள் வரை தேவை என வைத்தியர்கள் கருத்துக்கொண்டுள்ள வேளை யில் மண்டைதீவு மக்கள் அபிவிருத்தி ஒன்றியம் சுவிஸ் ஒரு லட்சம் ரூபாக்களை வழங்குவதோடு பாலகனின் சிகிச்சைக் கான முயற்சிகளையும் முன் நின்று செயல்படுத்தமுன் வந்துள்ளது.
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்