• திசெம்பர் 2010
  தி செ பு விய வெ ஞா
   12345
  6789101112
  13141516171819
  20212223242526
  2728293031  
 • பதிவுப் புள்ளிவிவரங்கள்

  • 1,245,458 hits
 • சகோதர இணையங்கள்

மண்டைதீவு கிராமம் பற்றிய மக்கள் கண்ணோட்டம்!!!

தீவகத்தின் தலைத்தீவாம் மண்டைதீவு! உள்நாட்டு யுத்தத்தில் முற்றுமே அழிந்த நிலையில் உள்ள ஒரு சிறிய கிராமமாகும். மற்றைய கிராமங்களை விடவும், இழப்புக்களை சுமந்துநிற்கும் இக்கிராமமும், மக்களும் இன்றுவரை தேய்ந்துபோன நிலையிலேயே  பார்க்கவேண்டிய நிலை மனதுக்கு  வேதனையாகின்றது. ஆகவே இந்த நிலைக்கு விடை தேடவேண்டியது  காலத்தின் கட்டாயமாகின்றது. தீவகத்தின்  மற்றைய கிராமங்கள்  உயர்நிலை வண்ணம் செல்லும் போது, மண்டைதீவுக் கிராமம்  மட்டும் ஏன் அப்படியான  நிலைக்கு வரமுடியாமல் தவிக்கின்றது.  இங்குள்ள மக்களும், சபை, சங்கங்கள், அரச நிர்வாகங்களும் மனதில் கொள்ளவேண்டிய  விடயமாகின்றது. அல்லது இவைகள் இயங்குவதற்கு ஏதும் தடைநிலை உள்ளதா? அல்லது இந்த நிர்வாகங்களின்  அசட்டுத்தனமா? அல்லது அரசியல் பின்னணிகளின் காரணத்தால் விலக்கப்பட்டுள்ளதா? அங்கு வாழும் மக்கள் பாவப்பட்ட மக்களாகவே  வாழவேண்டிய நிலைதானா? இப்படியான நிலை ஏதும் இருப்பின் அவைகளையெல்லாம் புறம் தள்ளிவிட்டு இந்த கிராமத்துக்கும், மக்களுக்கும், அரசிடம் இருந்து பெறவேண்டியமானியங்களை முறையேபெற்று வாழ்வாதார உயர்வைக்கொடுத்து விழிப்புணர்வையும் ஊட்டி! வாழவைக்கும் நிலையை எட்டுங்கள். தற்போதைய நிலையில் அங்குள்ள மக்களும், சபை, சங்கங்கள், அரச நிர்வாகங்களும் ஏனோதானோ நிலையை மாற்றி முழுமூச்சுடன் இயங்கி மண்ணின், மக்களின் துயரங்களைப்போக்கி வளர்ச்சிப் பாதை மேலோங்கவேண்டும், அதற்க்காக உழைக்கவேண்டும் என்பதேயாகும். யாராக இருந்தாலும் அரசியல் வேறுபாடுகளை மறந்து மக்களின், கிராமத்தின் நலனையே கருத்தில் கொண்டு யாபேரும் ஒன்றித்து நன்மை அடைவதே திண்ணமென செயற்படுங்கள்.

உறவுகளே  விழித்திருங்கள்!

  அன்பானவர்களே பண்பானவர்களே உங்களை தயவாகக்கேட்பது ஒன்றே!

கடந்த காலங்களைப்பைற்றி பேசிப்பேசி காலத்தைக் கழிக்காமல் இன்று

மக்கள் படுகின்ற துன்பங்களை,எமது மக்களின்  எதிர்காலத்தை, எப்படியான

முறையில் வழி எடுத்துச்செல்வது,அதற்கான சிந்தனைகளை ஆக்கபூர்வமான

வேலைத்திட்டங்களைப்பற்றி சிந்தித்து செயற்படுங்கள். இதுதான் அல்லலுறும்

எமது மக்களுக்கு  நாங்கள் செய்யும் நன்றிக் கடனாகும். நாங்கள் உடைந்து,

பிரிந்து,சிதைந்து கிடந்தது எல்லாமே போதும்.அதன் விளைவுகளையும்

கண்முன்னாடி அனுபவிக்கின்றோம் இனியும் பிரிவுகள் தேவைதானா?

எம்மிடையே குழப்பத்தை உருவாக்குவதற்கு புல்லுருவிகளும், விலை

போனவர்களும் பலவிதமான மாறுபட்ட செய்திகளை எம்மத்தியில் திணித்துக்

கொண்டேதான் இருக்கின்றனர்.அவைகளை எல்லாம் நீங்கள் மனதில்

உள்வாங்கி சன்சலப்படாமல் திடமாக இருங்கள். எங்கள் மக்கள் பட்டதுன்பங்கள்

யாவுமே எங்கள் மனக்கண்ணில் படமாக ஓடிக்கொண்டே இருக்கின்றது.

நாமாக சிந்தித்து,நாமாகவே செயற்படவேண்டிய காலமும் இதுவேதான்.

 

 உறவுகளே ஒன்று சேருங்கள்  யாழ் நகரையும்  தீவகங்களையும் இணைக்கும் எல்லையில் நாற்புறமும் கடலால் சூழ்ந்த அழகிய ஒரு சிறிய கிராமம் மண்டைதீவு இந்த கிராமம் பலதடவைகள் போர் அனத்தத்தால் பாதிக்கப்பட்டு உடமைகள்,உயிர்கள் இழந்த நிலையில் விரல்விட்டு என்னும் வீடுகள் தவறிய நிலையில், அங்கு வாழ்ந்த மக்களின் குறைந்த அளவு தொகையினரே வாழ்ந்து வருகின்றனர், இவர்கள் வாழ்வாதார பிரச்சினைகள் பலவற்றுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர் இவர்களின் தேவைகளை அத்தியாவசிய தேவைகளை பூர்த்திசெய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம்.எனவே பொது நலன் கருதிகளும் ,அங்கு பணியாற்றும் அரச ஊழியரும் ,பொது அமைப்புக்களும் இந்த விடயத்தில் முக்கிய கவனம் எடுத்து உங்கள்  கடமைகளை செய்வதன் மூலம் அவர்களின் தேவைகள் பூர்த்தி செய்யப்படும். தயவு செய்து தாழ்மையுடன் சம்பந்தபட்ட அனைவரையும் துரித கவனம் எடுக்க வேண்டும் என்று தாழ்மையுடன் வேண்டுகின்றோம்.

 

 

மீண்டும் தொடரும்…..
 

 

 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: