• திசெம்பர் 2010
  தி செ பு விய வெ ஞா
   12345
  6789101112
  13141516171819
  20212223242526
  2728293031  
 • பதிவுப் புள்ளிவிவரங்கள்

  • 1,248,430 hits
 • சகோதர இணையங்கள்

ஊர்காவற்றுறை தொகுதி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கா.பொ. இரத்தினம் நேற்றுக் காலமானார்

தமிழ் அறிஞ ரும், முன்னாள் நாடா ளுமன்ற உறுப் பினருமான கா.பொ. இரத்தினம் தனது 96 ஆவயது வயதில் நேற்று மாலை 5 மணி யளவில் கொழும்பில் காலமா னார்.
தமிழ் மீதும், தமிழ் மக்கள் மீதும் அக்கறை கொண்டு செயற் பட்டவர் இவர். 1914ஆம் ஆண்டு வேலணையில் பிறந்த இவர், கோப்பாய் ஆசிரியர் கலாசாலை, அண்ணாமலைப் பல்கலைக் கழகம் என்ப வற்றில் பயின்று ஆசிரியராகவும், ஆசிரியர் கலாசாலை விரிவுரை யாளராகவும் பணியாற்றியவர்.

பின்னர் மலேசியப் பல்கலைக்கழகத்தில் தனிநாயகம் அடி களாரோடு இணைந்து சேவை செய்தவர். அதன்பின்னர் இலங்கை வந்து 1960ஆம் ஆண்டு முதல் தமிழரசுக் கட்சியில் இணைந்து அரசியலில் ஈடுபட்டார். 1965ஆம் ஆண்டு கிளிநொச்சித்தொகுதியிலும், 1970, 1977 ஆம் ஆண்டுகளில் ஊர்காவற்றுறைத் தொகுதியிலும் போட்டியிட்டு, நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவுசெய்யப்பட்டார். வேலணை வங்களாவடியை ஒருநகரமாக மாற்றுவதில் பெரும் பாடுபட்டார். அகில உலக தமிழ் மறைத் தலைவராகவும் கடமையாற்றிய இவர், பல்வேறு இடங்களில் திருக்குறள் மாநாடுகளை நடத்தியவர்.

அரச கரும வெளியீடுகளில் தமிழ் மொழி அமுலாக்கல் சீராக நடைபெற உதவியவர்.

இவரது பூதவுடல் பொறளை மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இறுதிக்கிரியைகள் பற்றிய விவரங்கள் இன்னமும் அறிவிக்கப்படவில்லை

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: