• திசெம்பர் 2010
  தி செ பு விய வெ ஞா
   12345
  6789101112
  13141516171819
  20212223242526
  2728293031  
 • பதிவுப் புள்ளிவிவரங்கள்

  • 1,248,426 hits
 • சகோதர இணையங்கள்

வேலணை பிரதேச சபையினால் மண்டைதீவில் சத்துணவு விநியோகம்

 

மண்டைதீவுப் பிரதேசத்தில் உள்ள கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் இரண்டு வயதுக்கும் மூன்று வயதுக்கும் உட்பட்ட குழந்தைகளுக்கு ஜீவாகாரம் (சத்துணவு) வழங்கப்பட்டுள்ளது.

வேலணை பிரதேச சபையினால் வழங்கப்பட்ட இச் சத்துணவுப் பைக்கெற்றுக்களை அதன் செயலாளர் கெ.தவராசா வழங்கினார்.

5 பதில்கள்

 1. வேலணை பிரதேச சபையினால் மண்டைதீவில் சத்துணவு விநியோகம்.
  வணக்கம் தீவாகனுக்கும் மண்டைதீவு இணையதிக்கும்

  மேல் குறிப்பிட்ட செய்திக்கும் உங்களால் எடுக்கப்பட்ட புகைப்படங்களுக்கும் இடையே குழப்பம் உருவாகியுள்ளது

  மேற்படி சத்துணவு விநியோகம் மண்டைதீவில் நடைபெற்றதா என, ஏனெனில் புகைப்படங்களுக்கும் மண்டைதீவு மக்களுக்கும் தொடர்பு இல்லாமையும் வழங்கப்பட்ட இடமும் குழப்பத்தை உருவாகியுள்ளது. எனவே உண்மை நிலை அறிய விரும்புகின்றேன்.

  நன்றி

  ஜனனி

 2. ஜனனி அக்காவுக்கு வணக்கம்!
  நீங்கள் இறுதியாக மண்டைதீவுப் பிரதேசத்திற்குச் சென்றது எத்தனையாம் ஆண்டு என்பதை எங்களுக்குத் தெரியப்படுத்தினால் உங்கள் குழப்பத்திற்கு எங்களின் விளக்கத்தினைத் தர உதவியாக இருக்கும்.

 3. வணக்கம் தீவகன்
  உங்கள் பதில் இப்படி வரும் என்று நான் எதிர்பார்க்கவில்லை
  இருந்தும் பதில் கேட்டமைக்கு நன்றி. நான் இரண்டு வருடம் முன்பு தான்
  மண்டைதீவுக்கு வந்து இருந்தேன், அப்போது இப்படி ஒரு இடம் இருப்பதா
  யாரும் சொல்லவில்லை, அதனால் தான் அந்த கேள்வி எழுந்தது.
  தவறு எனது இல்லை என்று எண்ணுகின்றேன், தடங்கலுக்கு தகுந்த ஆதாரம் தரவும்.
  நன்றியுடன்
  ஜனனி

 4. ஜனனி அக்காவுக்கு வணக்கம்!

  இதுவரை காலமும் நாங்கள் எமது தீவகன் இணையத்தளத்தில் வெளியிட்ட செய்திகள் அனைத்தும் உண்மைத்தன்மை கொண்டவையாகவே இருந்து வந்துள்ளது. மண்டைதீவுப் பிரதேச மக்களின் தேவைகளையும் அவர்களின் குறைநிறைகளையும் புலம்பெயர்ந்து வாழுகின்ற அவர்களின் உறவுகளுடன் பகிர்ந்து கொள்ளவே இவ் இணையத்தளம் உருப்பெற்றது.

  அந்த வகையில் அப் பிரதேசத்தில் நடைபெறுகின்ற சம்பவங்களை நாங்கள் இருட்டடிப்புச் செய்யவோ அல்லது பிறிதொரு இடத்தில் இடம்பெற்ற நிகழ்வை மண்டைதீவுப் பகுதியில் இடம்பெற்றதாகக் கூறுவதிலே எந்த அர்த்தமும் இல்லை. அவ்வாறு தெரிவிப்பதில் எமக்கு எதுவித இலபமும் இருக்க முடியாது. அவ்வாறு இருக்க இவ்வாறான சந்தேகங்கள் தங்களுக்கு வந்துள்ளமை எமக்கு மன வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

  எனவே உங்களுக்கு ஏற்பட்ட சந்தேகங்களை நாங்கள் முடிந்த வரையில் நிவர்த்தி செய்யக் கடமைப்பட்டிருக்கின்றோம். ஏனெனில் மக்களின் ஆதரவும் கருத்துக்களும்தான் எமது வளர்ச்சியின் அத்திபாரம் என நாம் நினைக்கின்றோம்.

  ஆகவே மேற்படி செய்திக்காக நாங்கள் எடுத்த அனைத்துப் புகைப்படங்களையும் உங்களின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கின்றோம்.

  இதேவேளை நீங்கள் இரண்டு வருடத்திற்கு முன்னர்தான் மண்டைதீவுப் பிரதேசத்திற்கு வருகை தந்தது எனவும் இது பற்றித் தாங்கள் அறிந்திருக்கவில்லை என்றும் கூறியுள்ளீர்கள்.

  ஆனால் மேற்படி மண்டபம் மூன்று வருடங்களுக்கு முதல் யு.என்.எச்.சி.ஆர். நிறுவனத்தினால் மண்டைதீவு மகா வித்தியாலயத்திற்கு முன்பாக உள்ள மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகர் ஆலயத்திற்குச் சொந்தமான காணியில் அமைக்கப்பட்டது.

  இக் கட்டடத்தில் தான் மதிஒளி பாலர் பாடசாலையும், மாலைநேர வகுப்பும், குடும்பநல உத்தியோகத்தரின் அலுவலகமும் இயங்கி வருகின்றது. அத்துடன் கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் சத்துணவு பற்றாக்குறையாகவுள்ள குழந்தைகளின் நிறைகள் அளவிடப்பட்டும் வருகின்றது.

  எனவேதான் அந்த இடத்தில் பிரதேச சபை சத்துணவு வழங்கும் நிகழ்வினை ஒழுங்கு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

  தீவகன்

 5. ரொம்ப நன்றி அண்ணா
  உண்மை நிலை சொன்னதுக்கு .
  நன்றி உங்களுக்கு

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: